வெள்ளி, 12 நவம்பர், 2010

ராஜா விவகாரத்தில் அடுத்தது என்ன? கருணாநிதி பரபரப்பு பேட்டி

புதுடில்லி :  நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் ராஜா விவகாரம் குறித்து தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். 2 ஜி ஸ்பெக்கட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எதிர்கட்சிகள் பார்லிமென்ட்டில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் பிரதான் எதிர்கட்சியான அ.தி.மு.க., வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் ராஜாவை நீக்க வலியுறுத்தியதுடனன், காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தயார் எனவும் அதிரடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இந்த விவகாரம் குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கி பேட்டியளித்தார். அதில், ராஜா ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் எந்த ஒரு முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. அவருக்கு முன்பு அமைச்சர்களாக இருந்த அருண் சோரி உள்ளிட்ட அமைச்சர்கள் பின்பற்றிய வழிமுறைகளையே ராஜாவும் பின்பற்றியுள்ளார். அவர்கள் ஏதும் தவறு செய்யவில்லை என்றால் ராஜாவும் தவறு செய்வில்லை என்றார். ராஜாவுக்கு முன்பு இருந்தவர்கள் செய்தது போல் முதலில் வரும் நிறுவனத்துக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைவரிசை ஒதுக்கீட்டை கொடுத்துள்ளார். கணக்குதணிக்கை அறிக்கையில் ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு முறைகேட்டால் நாட்டுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிருபர்கள் கேட்டதற்கு , அந்த அறிக்கை பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெறும் போது விளக்கமளிக்கப்படும் என்றார்.

காங்., கதவு திறக்காது : அ.தி.மு.க.,  பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் காங்கிரஸ் கூட்டணிக்கான விருப்பம் பற்றிய கேள்விக்கு : திண்ணை எப்போது காலியாகும் என காத்திருந்தார் ஜெயலலிதா. ஆனால் திண்ணை காலியாகாது. காங்கிரஸ் கதவுகள் ஜெயலலிதாவுக்காக திறக்காது என்றார்.

ஜெ.,  க்கு தகுதி இல்லை :  பல்வேறு ஊழல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதாவுக்கு என்னைப்பற்றி பேச அருகதை இல்லை என மத்திய டெலிகம் துறை அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான பிரச்னையை எதிர்கட்சியினர் கையிலெடுத்து மத்திய அமைச்ர் ராசாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பார்லி., 3 நாட்களுக்கும் மேலாக முடங்கியது. ராசாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். கூட்டணி உடைந்து ஆட்சி இழக்கும் என்ற பயம் வேண்டாம். இந்த நேரத்தில் காங்., ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவும் தயாராக இருக்கிறோம் என்று நேற்று பரபரப்பான பேட்டி அளித்தார். இதற்கு பதில் அளித்த காங்., மேலிடம் தமிழகத்தில் தற்போது கூட்டணியில் இடம் காலி இல்லை. தி.மு.க.,தான் எங்களுடைய கூட்டணி நண்பர் என அறிவித்து ஜெ., அழைப்பை நிராகரித்தது.

சட்டத்தின்படிதான் நான் பின்பற்றினேன்: இதற்கிடையில் இன்று டில்லியில் அமைச்சர் ராசாவை சூழ்ந்து கொண்டு நிருபர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராசா தணிக்கை குழு அறிக்கை விவரம் அறியாமல் யாரும் பேசுவது சரியல்ல. 1999 ம்ஆண்டு டெலிகாம் சட்டப்படி மத்திய அமைச்சரவை மற்றும் பார்லி., குழு எடுத்த முடிவின்படியே இந்த ஒப்பந்தம் நிறைவேறியது. சட்டத்தின்படிதான் நான் பின்பற்றினேன். இதில் என்மீத எவ்வித ஊழல் கறையும் இல்லை. இதனால் நான் பதவி விலக தேவையில்லை. இதற்கான முழு விசாரணைக்கும் நான் தயார்.

தான் போட்ட கையெழுத்தையே மறுத்தவர் ஜெ., : காங்கிரசுக்கு ஜெ., விடுத்த அழைப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, ராசா கூறுகையில்; அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ.,வுக்கு என்னை பற்றி பேச அருகதை இல்லை. ஏற்கனவே பல்வேறு ஊழல் புகாரில் சிக்கி கோர்ட் படி ஏறி வருபவர். எனக்கு தெரிந்து கடந்த 10 ஆண்டு காலமாக கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். அவர் தனது பாவத்தை மறைக்க இப்படி அடுத்தவர் மீது புகார் கூறி முயற்சிக்கிறார். ஒரு விவகாரம் தொடர்பாக ஜெ., போட்ட அவரது கையெழுத்தையே தான் போடவில்லை என அபாண்டமாக பொய் சொன்னவர். இந்தியாவிலே‌‌யே இந்த அரசியல்வாதியாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு ராசா கூறினார். பிரதமர் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருப்பதால் இதில் இப்போது முடிவு ஏற்படாது என தெரிகிறது. பிரதமர் நாடு திரும்பிய பின்னர்தான் முடிவுகள் எடுக்கப்படும் என காங்., வட்டாரம் தெரிவிக்கிறது. 
த.ரா.சாமு. - Madurai,இந்தியா
2010-11-12 11:21:44 IST
ராசா தனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் போலத் தெரிகிறது. எனவேதான் செல்வி. ஜெயலலிதா இது பற்றிப் பேச யோக்கியதை இல்லை என்று சொல்கிறார். தான் எந்தத் தவறையும் பண்ணவில்லை என்று சொல்லவே இல்லை. தனது வாயால் ஒப்புக்கொண்டு இருக்கிறார். கலைஞர் வாழ்க. சாமு....
உண்மைவிளம்பி - மதுரை,இந்தியா
2010-11-12 11:21:18 IST
அப்போ இவரைப்பற்றி பேச இரண்டு பேருக்குதான் தகுதி இருக்கு. ஒன்று அவரது தலைவர். இன்னொருவர் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தலைவருக்கு கோர்ட் விலாசம் கூட தெரியாது. தவறு செய்யாவிடில் ராஜினாமா செய்து விட்டு வழக்கை சந்திக்க வேண்டியது தானே. அருகதைப்பற்றி பேசினால் நாட்டில் எந்த அரசியல்வாதியும் பேசமுடியாது. அந்தளவுக்கு மோசமா இருக்கு நம்ம அரசியல். எல்லாம் நம்ம தலைஎழுத்து....
வ ச ப - trp,இந்தியா
2010-11-12 11:20:52 IST
ஆமாம் சாமி ஆமாம். உங்களோட போட்டி போட யாருக்கும் அருகதை இல்லை. 1 , 50 000 கோடி யாராலே முடியும் உங்களை தவிர ?...
ராசிக் - udumalpet,இந்தியா
2010-11-12 11:17:45 IST
ராஜா அம்மா பொங்கிருச்சு உன் கதி அவளோதான் மூட்டய கட்ட ரெடி யா இரு தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப வெவரம் இனி உங்க பாட்ச

கருத்துகள் இல்லை: