ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் வைத்து கடந்த வருடம் நவம்பர் 21 ஆம் திகதி ஆப்கான் நாட்டு கைதிகள் மீது வன்முறையை பிரயோகித்து கலவரத்தில் ஈடுபட்டனர் என்கிற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் கைதிகள் ஐவருக்குமான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
பேர்த் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஸ்டெப்கென் Mஅல்லெய் இத்தீர்ப்பை வழங்கினார். பிரணவன் சிவசுப்பிரமணியம், அன்புராஜன் அன்ரன் ஆகியோர் மீது கலவரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்று அறிவித்த நீதிவான் இருவருக்கும் தலா ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கினார்.
மேற்சொன்ன இருவர் மற்றும் ஞானராஜா யேசுராஜா ஆகியோர் மீது ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்தனர் என்கிற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்று அறிவித்த நீதிவான் இம்மூவரையும் தலா 500 டொலர் பெறுமதியான நன்னடத்தை பிணையில் விடுவிக்கின்றார் என்று அறிவித்தார். ஆனந்த ரஜீவன் தங்கராஜா, கோகிலகுமார் சுப்பிரமணியன் ஆகியோர் நிரபராதிகள் என்று தீர்ப்பில் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக