வெள்ளி, 12 நவம்பர், 2010

தங்கையைக் கொன்று கைதான கைதி புழல் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னையில் குடிப்பதற்கு பணம் தராததால் சொந்த தங்கையையே கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி நேற்று சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த திருவேற்காடு 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் டில்லிபாபு (51). குடிப்பழக்கம் உள்ள இவர் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனியில் டாக்டர் அம்பேத்கார் நகரில் வசித்த தனது தங்கை மீனாகுமாரி (45) வீட்டுக்கு செல்வார்.

அவரும் அண்ணனுக்கு பணம் கொடுத்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி வழக்கம்போல் தனது தங்கையிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு மீனாகுமாரி மறுக்கவே அவரைக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 18 பவுன் நகையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்.

இந்த கொலை வழக்கில் அரும்பாக்கம் போலீசார் டில்லிபாபுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறையில் திடீர் என்று அவர் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவலு சம்பவ இடத்திற்குச் சென்று கைதியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

கருத்துகள் இல்லை: