வெள்ளி, 12 நவம்பர், 2010

இலங்கை மீனவர் சர்வதேச கடலில் மீன்பிடிக்க சட்டத்தில் திருத்தம்: கடல் மைல் பரப்பு அதிகரிப்பு


இலங்கை மீனவர்கள் சர்வதேச கடலில் மீன்பிடிக்கும் வகையிலும் வேறு நாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பில் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலும் கடற்றொழில் நீரியல்வள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதவிர, வேறு நாட்டு கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும். இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பு 5 இலட்சத்து 17 ஆயிரம் கடல் மைல்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கைக் கடலில் மட்டுமன்றி சர்வதேச கடலிலும் இலங்கை மீனவர்களுக்கு மீன் பிடிக்க முடியும். புதிய சட்டத்தின் படி, மீனவர்களை பாதுகாக்கும் வகையில் படகுகளில் தொழில் நுட்ப உபகரணங்களைப் பொருத்துவது கட்டாயமாக்கப்படும். படகுகள் பதிவு செய்யப்பட உள்ளதோடு வேறு நாட்டு கடல் எல்லையில் மீன்பிடிப்பவர்களின் அனுமதி ரத்து செய்யப்படும். எமது கடற்பரப்பை பலப் படுத்துவதற்கு புதிய சட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: