வெள்ளி, 12 நவம்பர், 2010

வடக்கு வடக்காயும், கிழக்கு கிழக்காயும் இருக்க வட- கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டியது காலத்தின் தேவை.

அண்மைய சில நாட்களாக தமிழ் அரசியல் வாதிகளுக்கும் ஆதரவாலர்கக்கும் மட்டும் மெல்லக்கிடைத்திருக்கும  அவல (பழசுதான்) வட- கிழக்கு இணைப்பு. வட- கிழக்கு இணைப்பு என்பது இனப்பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டபோதே தமிழ் தலைமைகளினால் கையில் எடுக்கப்பட்ட தீர்வு கோரிக்கையில் ஒன்று அல்லது தாயக கோரிக்கை என்பது அறிந்ததே.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நீடித்த அரசியல், ஆயுத போராட்டம் பல விடையங்களை செய்து முடித்திருக்கிறது, ஒரு சில விடங்களை புரட்டி போட்டிருக்கிறது அரசியல் ரீதியில் மக்களின் மனங்களை பக்குவமடைய செய்திருக்கிறது (புலம்பெயர் தமிழர்??) எல்லாவற்றுக்கும் மேலாக போராட்டம் தொடர்பான படிப்பினையை அனுபவ ரீதியில் கற்றுத்தந்திருக்கிறது. இன்னும் சில அரசியல்வாதிகள் கொள்கைரீதியில் தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை என்பது எம் சமூகத்தின் பாரிய குறை என்பதே உண்மை.
வடக்கும் கிழக்கும் இணைத்திருக்க வேண்டுமா?, பிரிந்திருக்க வேண்டுமா?, சேர்த்து இயங்குவதா அல்லது நிர்வாக ரீதியில் சேர்ந்தியகுவதா? பிரிந்தியங்குவதா? என்பது வடக்கில் வாழும் தமிழ , முஸ்லீம் மக்களும், அரசியல்வாதிகளும் , கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களும், அரசியல்வாதிகளும் சேர்ந்து விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விடையம் என்பது யதார்த்தம். இப்போதிருக்கின்ற பிரச்சனை என்னவென்றால் வட- கிழக்கு இணைப்பு என்பது பரவலாக வடமாகாணத்தை பிரதிநித்துவ படுத்துகின்ற பல தமிழ் தலைமைகளின் பக்கமிருந்து மட்டுமே இக்கோரிக்கை வருகின்றதே தவிர கிழக்கு தலைமைக்களும் சரி , கிழக்கு மக்களும் சரி  இந்த விடையத்தை பெரிதாக கருதுவதாக இல்லை .
கிழக்கு மக்களை பொறுத்தவரை விசேடமாக தமிழ் மக்களை பொறுத்தவரை தங்களுக்கென்றொரு சரியான தலைமை கிழக்கை பிரதிநித்துவப்படுத்துவதற்கு தேவை   என கருதுகின்றனர். அதற்கு சான்றாகவே கிழக்கு மாகாண சபை தேர்தலின் பொது கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் கட்சியை சார்ந்தவர்களுக்கு தமது பரவலான ஆதரவை தெருவித்திருந்தனர . வடகிழக்கு இணைப்ப  வலியுறுத்திய தமிழ் கட்சிக்கூட்டமைப்புக்கு ஒரே ஒரு ஆசனமே கிடைத்திருந்தது. இன்றைய நிலைமையில் வடகிழக்கு இணைப்பு என்பது வெறுமனே அரசியல்வாதிகள் முடிவு செய்ய வேண்டிய விடயமில்லை கிழக்கு மக்களும்,  ிழக்கு அரசியல் வாதிகளும் சேர்ந்து முடிவெடுக்கவேண்டிய விடயம் என்பதை பெரும்பாலும் வடமாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளும், அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள ஆட்சியாளர்களை போல  கடந்த கால கசப்புணர்வுக்களும் , நப்பிக்கை யீனங்க்களும் தமிழ் தலமைகள் மீதும் இருக்கிறது என்பதுதான் கசப்பான  உண்மை .
வடக்கும், கிழக்கும் பிரிந்திருப்பதென்பது நிர்வாக ரீதியில் இரு மாகாணங்களுக்கு நன்மையே தவிர,  அதிகாரங்கள் என்பதே இன்றைய பிரச்சனை.  இந்த அதிகாரங்களை எவ்வாறு நாம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வது என்பதே நாம்  இன்றைய சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய விடயம். தமிழர்களில் அரசியல், ஆயுதபோராட்டத்தில் நியாயம் இருக்கின்றது இழப்புக்கள் நிறையவே இருக்கிறது.  அதனை வெறுமனே ஆயுத போராட்டம் என்றளவில் வெற்றி தோல்வி என்று கணக்கேடுத்துவி  ுடியாது. தமிழர்களுக்கான பொதுவாக சொல்வதானால் சிறுபான்மையியருக்கான அரசியல் தீர்வு என்பது உடனடியாக பெற்றே ஆகவேண்டிய விடயம . வட - கிழக்கு தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரான முஸ்லீம , மலையக தமிழர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய விடயம். அவற்றை சரியாக செய்தாலே சிறுபான்மையினருக்கா  ீர்வென்பது நிரந்தரமான தீர்வொன்றுக்கு வழிகோலுமே தவிர வட- கிழக்கு இணைப்புதான் நிரந்தர தீர்வில் முக்கியமென சொல்லுவதெல்லாம் வெறுமனே தமிழ் தேசியத்தை மட்டும் கட்டிக்காக்க முயலும் கடும்போக்கு தமிழ் அரசியல் வாதிகள் தொடர்ந்தும் தமது வண்டிகளை உருட்டுவதற்கும் தமிழர்களை உசுப்பேத்தி தம் பதவிகளை பாதுகாத்துகொள்ளவே  இன்றைய சூழ்நிலையில் உதவும் .
இலங்கையின் இன்றைய நிலைமை என்பது தமிழர்களின் பிரச்சனைகள  ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய காலகட்டம் . அந்தவகையில் தமிழ் கட்சிகள் பல ஒன்றிணைந்து ''கட்சிகள் அரங்கம்'' நடத்துவது வரவேற்கத்தக்க விடயம . அதிலும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க, செல்வாக்கற்ற கட்சிகள் அனைத்துமே ஒன்றிணைந்து பேச எத்தனித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம . இதுவரை தமிழர்களிடைய ஆயுதங்களே செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன இனியாவது கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தட்டுமே. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வரங்கத்தில் சேர்ந்து செயற்படுவதுபோல் சமிக்கை காட்டியிருப்பது வரவேற்கத்தக்க விடயம். ஒற்றுமை என்பதே இலங்கைத் தமிழர்க்க  ிதிவிலக்கு  போல் இருந்தது. இனியாவது பதவி மோகத்தை விட்டு வெளிவருவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .
தமிழர்களுக்கான தீர்வென்பது வருங்காலத்தில் இப்போதைய பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் வருங்காலத்தில் புதிய பிரச்சனைகளை உருவாக்காததாகவும் இருக்கவேண்டும். தீர்வென்பது தமிழ் பேசும் மக்களை மட்டுமின்றி சிங்கள மக்களையும் திருப்திபடுத்துவதாய் இருக்கவேண்டுமென்பது சிங்கள தலைமைகளின் கருத்தாக இருந்து வருகின்றத .
அதேபோன்றே தமிழ் தலைமைகளும் வடமாகாண, கிழக்குமாகாண தமிழ , முஸ்லீம் மக்கள் திருப்திப்படுத்தகூடியவாறு தமது தீர்வு யோசனைகளை முன்வைக்கவேண்டும் .இன்றைய சூழ்நிலையில் வட- கிழக்கு இணைப்பு என்பது வெறுமனே தமிழர்களின் கையில் இல்லை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழ் கட்சி அரங்கத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரிந்த விடயம் இந்நிலையில் வடக்கும் கிழக்கும் சட்டரீதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தைப்போன்று விரைவில் மாகாணசபை தேர்தலும் விரைவில் நடத்தப்படும் நிலையில் இருக்கும் பொது வட- கிழக்கு இணைப்புபற்றி இன்றைய சூழ்நிலையில் பேசுவது சிங்கள மக்களை எமக்கெதிராக திருப்பிவிடக்கூடாது.
வட - கிழக்கு இணைப்பு பற்றி பேசும  தமிழ் தலைமைகள் ஒன்றில் கவனம் செலுத்தவேண்டும். வட - கிழக்கு இணைப்பென்பத  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி தற்காலிகமானதே தவிர கிழக்கு மாகாண மக்கள் விரும்பினாலே தொடர்ந்து இணைந்திருக்க முடியுமென்பது அன்றே மாகாணங்களுக்கிடையில் கசப்புணர்வு வர வாய்ப்புகள் இருக்கலாமென்றே பாதுகாப்புக்காக இந்த விடயம் தெருவிக்க பட்டிருந்தது. தமிழ் தலைமைகளின் மீதுள்ள நம்பிக்கையீனம், பலவீனம், பிரதேசரீதியா  கசப்புணர்வுகள் என இன்றைய எமது தமிழ் சமூகத்தின் பலவீனமான நிலையில் இந்தவிடையத்தை கையில் எடுத்து வெற்றி காண்பதென்பது கிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் கிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்கவேண்டுமென்பதில் பெரும்பாலானோர் நிலைபாடாக இருக்கும் நிலையில், கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லீம் தலைமைகள் இணைப்புக்கு இணங்காதவரை சாத்தியமில்லாத விடயமே.
இந்த நிலையில் கிழக்குமாகாண அரசியல் தலைமைகள் பலமாக உள்ளனவா என்கிற கேள்வி கிழக்குமாகாண மக்களிடையே பரவலாக காணப்படுகின்றன. இன்றைய நிலையில் சந்திரகாந்தன், முரளிதரன், அரியநேந்திரன், சிவகீதா, துரைரெத்தினம் போன்ற தலைமைகள்தான் அல்லது அவர்களை சார்ந்தவர்கள்தான் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தப்போகின்றனரா? இன்றைய காலகட்டத்தில் இவர்கள் மீது இவர்கள் செயட்பாடுகள் மீதும் சரி பிழைகள் நிச்சயமாக இருக்கின்றன . இந்நிலையில் கிழக்கை பிரதிநிதுத்துவப்படுத்து இவர்களுக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. கிழக்குக்கான புதிய பல திறமையான அரசியல்வாதிகளை உருவாக்கவேண்டியதும் இனங்காட்ட வேண்டியதுமான பொறுப்பு கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கும், கிழக்குமாகாண மக்களுக்கும் இருக்கின்றது.
இனி இலங்கையின் எதிர்காலமேன்பது மாகாண சபைகளை மையப்படுத்தியதாகவே பொருளாதாரமும், நிர்வாகமும் செயட்படவேண்டி இருக்கும். அந்த நோக்கிலான கருத்துக்களே இலங்கை அரசுபக்கம் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. கிழக்காக இருந்தாலும் சரி வடக்காக இருந்தாலும் சரி அவை நிர்வாக ரீதில் பிரிந்தே இருப்பதே இன்றைய நிலையில் சாத்தியமானதாக தோன்றுகிறத . அதே நேரம் நிர்வாக ரீதியில் பிரிந்திருந்தாலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் வருங்காலத்தில் வடமாகாண சபையும், கிழக்குமாகாண சபையும் பல விடையங்களில் ஒன்றாக குரல்கொடுக்கவும், இணக்கப்பாடுகளுடன் பல விடயங்களில் செயற்படவும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன . ஆகவே மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடனான, இன உறவுகளை மேன்படுத்தகூடியதும், சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்புடன் கூடியதானஅதிகாரங்கள , தீர்வுகள் பற்றி பேச ஆரம்பிப்பதென்பது இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான தீர்வாக அமையலாம்.
அடுத்த வருடம் வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படவிருக்கும் நிலையில், புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடென்ன?, யாரெல்லாம் போட்டியிட போகிறார்களென்று பார்க்கலாம். இதில் தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவா, சுரேஷ் பிரேமச்சந்திரனா, மாவை சேனாதிராஜாவ(சம்பந்தரையாவை விடுவார்களா?) , முன்னாள் வட - கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாளா, இல்லை இவர்களையும் தாண்டி கே .பி எனும் குமரன் பத்மாநாதனா வட மாகாணசபையின் முதலமைசராகிறாறென்று பொறுத்திருந்து பார்போம்.
(இரா .வி .விஷ்ணு) (கார்த்திகை 12, 2010)

கருத்துகள் இல்லை: