சனி, 13 நவம்பர், 2010

பெண்ணுக்கு மின்சார ஷாக் கொடுத்து போலீஸ் நிலையத்தில் சித்ரவதை

தங்க செயின் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்ற பெண்ணுக்கு, கோத்தனூர் போலீஸ் நிலையத்தில் மின்சார ஷாக் கொடுத்து, மனநிலை பாதிப்பை உண்டாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் வசிப்பவர் கஸ்தூரி (35). இவர், டேனரி ரோட்டிலுள்ள மாநகராட்சி பூங்காவில் பராமரிப்பு பணி செய்து வருகிறார். உடல்நலம் சரியில்லாத கணவர் மற்றும் தன் இரண்டு மகன்களுடன், அருகிலுள்ள ஷெட் ஒன்றில் வசித்து வருகிறார்.கடந்த திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில், அங்கு வந்த நான்கு போலீஸ்காரர்கள், கஸ்தூரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்தனர். தன் தாயாரை போலீசார் அழைப்பதை பார்த்து, மிரண்டு போன அவரது மகன் அஜித் (13), தானும் உடன் வருவதாக கூறினான். அவர்கள் இருவரும் ஆம்னி கார் ஒன்றின் மூலம் கோத்தனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு, முதல் மாடியிலுள்ள அறைக்கு கஸ்தூரி அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஏற்கனவே இருந்த வீரா என்பவன், கஸ்தூரியை காண்பித்து, இவரிடம் தான் தங்க செயின் இருப்பதாக கூறியவுடன், பெண் போலீஸ் ஒருவர்,  கஸ்தூரியை லத்தியால் தாறுமாறாக அடிக்க துவங்கினார். தங்க செயினை எங்கே வைத்திருக்கிறாய் என்று கேட்டு விடாமல் அடிக்கவே, வலி பொறுக்க முடியாத கஸ்தூரி, தனக்கு ஏதும் தெரியாது என்று கண்ணீர் விட்டு கதறினார்.

அவரது அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் அஜித் மாடிக்கு  ஓடினான். தன் தாயாரை போலீசார் அடிப்பதை பார்த்து, பயந்து போய், "என் அம்மாவுக்கு எதுவும் தெரியாது. அவரை அடிக்காதீர்கள். விட்டு விடுங்கள்' என்று கெஞ்சினான். மதியம் ஆரம்பித்த அடியுடன் கூடிய விசாரணை இரவு 9 மணி வரை தொடர்ந்தது.பொதுவாகவே மாலை 6 மணிக்கு மேல், பெண் கைதிகளை போலீஸ் ஸ்டேஷனில்  வைத்திருக்க கூடாது என்பது விதிமுறை. குழந்தைகளையும், உடன் வைத்திருக்க கூடாது. 13 வயதான அஜித்தையும், உடன் வைத்து கொண்டு நடந்த இந்த விசாரணையில், கஸ்தூரிக்கு மின்சார ஷாக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கஸ்தூரி குற்றமற்றவர் என்பதை உணர்ந்த போலீசார், அவர்களை மீண்டும் வேனில் ஏற்றி பிரேசர் டவுனில் ஓட்டல் ஒன்றின் அருகில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.போலீசாரின் கொடூர தாக்குதல்களாலும், மின்சார ஷாக்கினாலும் பாதிக்கப்பட்ட கஸ்தூரி, தற்போது, அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டவராக காணப்படுகிறார். "என்னை அடிக்காதீர்கள், எனக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்லி மிரண்டு போய் காணப்படுகிறார். இதை பார்த்த அவரது உறவினர்கள், மாநில மனித உரிமை கமிஷனின் பிரகாஷ் கரியப்பாவிடம் விஷயத்தை கொண்டு சென்றனர். இவர்களை கொண்டு வந்து விடும் போது, இந்த விசாரணை பற்றியோ, எங்களை பற்றியோ வெளியில் ஏதாவது சொன்னால், உன்னையும், உன் தந்தையையும் கொன்று விடுவோம் என்று சொல்லி போலீசார் மிரட்டியுள்ளனர், என்ற தகவலும் கிடைத்துள்ளது.கஸ்தூரிக்கு மின்சார ஷாக் கொடுத்தது குறித்து சிகிச்சை அளித்த விக்டோரியா மருத்துவமனை மூத்த டாக்டர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். பின்னர், இந்த புகாரை மாநில மனித உரிமை கமிஷன் மூலம் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம் என்று பிரகாஷ் கரியப்பா கூறினார்.

கோத்தனூர் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட போது, விசாரணைக்காக ஒரு பெண்ணை அழைத்து வந்தது உண்மை. ஆனால், மின்சார ஷாக் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று மறுத்தனர்.
kk - ksa,இந்தியா
2010-11-13 10:47:16 IST
ஒபாமா இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்று கூறினாரே அது இதுதானோ. இதுபோல் கொடுமைகள் எல்லாம் வரியவருக்கு நடக்கும்போது எப்படி இந்தியா வளர்ந்த நாடு என்று கூறினார் என்பது புரியவில்லை....
Mr Jai - Canada,கனடா
2010-11-13 10:40:34 IST
What karnataka police has done is inhumane, but the guilty should be punished. At the same time lets not undermine the indian democracy. Mr. Saran, Dubai, UAE, please think how far freedom in middle eastern countries are better than India. In Dubai can you ever think of raising your voice against the governerment rule like hiking fees in govt departments, or sudden toll in maktoom bridge in the heart of the city, rental hikes, a kind of property taxes in DEWA bills, protest for unpaid salaries, protest against 6 month or 1 year no entry ban. Do you whole heartedly think a labourar living in sonapur is having a better living standards than a labourer living in india. At least in india, people even if they dont have means for the next course, have freedom. Mr. Sadak, China, have you ever thought of Tianman square, brutal crushing /killing of students pro democracy movement. Where is freedom or living without fear. Indian democracy and freedom is far above comparison. The problem is power and authority at the wrong hands....
சில்லுவண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-13 10:05:20 IST
ஏழைகளுக்கு நம்ம நாட்டில் சுதந்திரம் இல்லை;;;நம்ம நாட்டில் உள்ள போலீஸ் அதிகாரிகள்;;நம்ம அரசியல் ரவுடி கும்பலுக்கு சல்லுட் அடிக்கிறானுக;;;;ஆனால் பாருங்க ஒரு ஏழை பெண்ணை சந்தேகத்தின் பேரில் போலிஸ் ஸ்டேஷன் கொண்டு போய் வெதுப்புராணுக;;;எப்படி கொடுமை நடக்குது பாருங்கோ நம்ம இந்திய சுதந்திர நாட்டில்;;;...
bhagyraj - coimbatore,இந்தியா
2010-11-13 09:54:06 IST
ஒரு சில போலீஸ்க்கு இருகிற தெனாவெட்டு யாருக்கும் இருக்காது... இது இந்த இந்தியாவில் மட்டும்தான். அவங்களுக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு... அவங்க மனிதர்களா இல்ல அரக்கர்கள... பெண்ணை அடிக்க... லூசுங்க...
khuthbudin - chennai,இந்தியா
2010-11-13 09:50:04 IST
இவ்வாறு காவல்துறை நடந்து கொள்வது மிகவும் வருத்தமாக வுள்ளது ....
ரியாஸ் - uaedubai,இந்தியா
2010-11-13 09:49:14 IST
மக்களை காப்பதற்காக வேலைக்கு அமர்த்தப்படும் போலீஸ் காவல்காரர்கள் ஒரு மனித நேயம் அற்றவர்களாக இருக்கும்போது, அவர்களை அவர்களின் இடத்திற்கு போய் செருப்பால் அடித்து இழுத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புக்கு முழு நிவாரணம் அளித்து அவர்களின் அவர்களை வேலையில் இருந்து உடனடியாக துரத்தி கடுமையான ஜெயில் தண்டனையும் அபராதமும் விதிக்க வேண்டும் பின்பு வெளியில் வந்தாலும் யாரும் இப்படிப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது ....
gopinath - chennnai,இந்தியா
2010-11-13 09:42:10 IST
Keedu keta antha athigarigalai velail erunthu neeki naadukatatha vendum...
ராமகிருஷ்ணன் - Singapore,இந்தியா
2010-11-13 08:34:56 IST
The police officers all should be punished severely. They always torture poor, helpless and weak people....
sadak - Guangzhou,சீனா
2010-11-13 07:46:30 IST
சரண் சொல்லுவது முற்றிலும் சரி. இங்கு சீனா வந்து பார்க்கட்டும்.முழு சுதந்திரம் கிடையாது . ஆனால் பாதுகாப்பாக வாழமுடியும்.இந்திரா காந்தி யின் மிசா போன்று கட்டுபாடான ஜனநாயகம் தேவை நம் நாட்டிற்கு....
சாய் - தமிழ்நாடு,இந்தியா
2010-11-13 07:39:47 IST
this are only for poor people.i strongly agree with Mr.prakash.s words. there is no human rights for poor people. jai hind...
ப பாஸ்கர் - திண்டுக்கல்,இந்தியா
2010-11-13 07:34:57 IST
அங்க ஒருத்தன் கோடி கோடியா திருடி இருக்கான். அவனுக்கு சல்யுட் அடிங்க. ஒன்னும் அறியாத பாமர மக்களுக்கு ஷாக் வையுங்கள். என்ன ஜென்மங்கள் நீங்கள் எல்லாம்?... நன்றி, பிரகாஷ். ச....
சென் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-11-13 06:25:38 IST
இது எல்லாம் ஒரு நாடு. மக்களே வேறு நாட்டுக்கு ஓடி விடுங்கள்....
பிரபாகர் - சென்னை,இந்தியா
2010-11-13 06:25:02 IST
Those police guys must be punished, must be fired from their job...
ச.rameshkumar - singapore,சிங்கப்பூர்
2010-11-13 05:52:38 IST
அர்ரக்கர்கள்...
Mohan - madurai,இந்தியா
2010-11-13 05:05:30 IST
They all must be punished....
பிரகாஷ் ச - Seattle,யூ.எஸ்.ஏ
2010-11-13 03:02:37 IST
அங்க ஒருத்தன் கோடி கோடியா திருடி இருக்கான். அவனுக்கு சல்யுட் அடிங்க. ஒன்னும் அறியாத பாமர மக்களுக்கு ஷாக் வையுங்கள். என்ன ஜென்மங்கள் நீங்கள் எல்லாம்?...
திருநாவுக்கரசு - சென்னை,இந்தியா
2010-11-13 01:29:45 IST
கடவுளே, என்ன கொடிமையடா இது? மக்களை காப்பாற்ற அரசாங்கம் இல்லையா? அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்க்குதானா? இந்த தாயாரின் நிலை வேறு எவருக்கும் நேரக்கூடாது. நேற்று ஒரு முதல்வர் பாண்டிபஜாரில் கூட்டத்தை பார் மக்கள் பண்டிகை கொண்டாடுகிறார்களா இல்லையா என்று தெரியும் என மார் தட்டினார், இன்று அண்டை மாநிலத்தில் ஒரு பாவப்பட்ட வசதி இல்லாத ஒரு தாய் போலீஸ் அராஜகத்தால் பாதிக்கப்படுகிறார், நானும் அந்த பையனைப்போல இருந்த நாள் என் கண்களில் தெரிகிறது....
சரண் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-13 01:05:14 IST
சுதந்தரம் தேவை. ஆனல் அளவுக்கு மீறிய சுதந்தரம் ஆபத்து (நாட்டுக்கு ) ஏழை மக்கள் அனைவரும் நாட்டை காலி செய்வது அவர்களுக்கு பாதுகாப்பு (அரபு நாட்டுக்கு வரவும்.இங்கு காந்தியின் கனவு நினைவாகும்.முழு சுதந்தரத்தை அனுபவிக்கலாம் ....
citizan - dubai,இந்தியா
2010-11-13 00:53:44 IST
இது சுதந்தர இந்திய .வாழ்க ஜனநாயகம் வாழ்க இந்திய ,(தயவு செய்து 2௦ ஆண்டுகள் காத்து இருக்கவும் )...

கருத்துகள் இல்லை: