இலங்கையர்களும் இருக்கலாம் என நம்பப்படும் படகு ஒன்றை அவுஸ்திரேலிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது இந்த படகில் படகோட்டிகளுடன் 23 பேர் இருந்துள்ளனர்.
வடமேற்கு அவுஸ்திரேலிய கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட இவர்கள் வழமையான சோதனைகளுக்காக கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த வருடத்தில் மாத்திரம் ஏராளமான அகதி அந்தஸ்து கோருவோர் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய பெடரல் எதிர்கட்சியின் பேச்சாளர் மைக்கல் கீனன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எல்லையின் கட்டுப்பாடுகளில் அவுஸ்திரேலியா அரசாங்கம் தளர்வைக் கண்டு வருவதே இதற்கான காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக