செவ்வாய், 16 நவம்பர், 2010

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அவமதித்த பெண்ணுக்கு மரண தண்டனை

இஸ்லாம் மதத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் தொடர்பில் மனிதஉரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான எசியா பீபி (45) என்ற பெண்மணிக்கு, இஸ்லாம் மதத்தை அவமதித்தார் என்ற குற்றசாட்டின் பேரில் சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இத்தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக இவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த எசியா பீபி,
“இத்தீர்ப்பு போலியானது, அடிப்படைவாதக் கொள்கைகளின் பிரதிபலிப்பு” எனத் தெரிவித்தார்.
இஸ்லாம் மத அவதூறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாகிஸ்தானில் கடுமையான சட்டதிட்டங்கள் நிலவுகின்றன. எனவே அவற்றை ஒழிக்கவேண்டும் என மனித உரிமை நிறுவனங்கள் குரல் எழுப்பியுள்ளன.
இத்தகைய குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முதல் பெண்மணி எசியா பீபி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: