ஞாயிறு, 15 ஜனவரி, 2017

திருநங்கை அஞ்சலி அமீர் மம்முட்டி நடிக்கும் பேரன்பு

தமிழ்
சினிமாவில் திருநங்கைகளை பெரும்பாலான படங்களில் தவறாகவே சித்தரிக்கிறார்கள். தங்களுக்கான உரிமைகளை சரியாக பெற முடியாது சூழலில் இருப்பவர்களை தவறாக சித்தரிப்பது அவர்களை மனதளவில் பாதிக்கும் விஷயமாகும். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ஐ’ திரைப்படம் ஒரு திருநங்கையை அருவருப்பாக சித்தரித்துக் காட்டியதால் பெரும் சர்ச்சையை சந்திக்க நேர்ந்தது. அவர்களது உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து எடுக்கப்பட்ட வெகு சில படங்களில், ராகவா லாரண்ஸ் இயக்கிய ‘காஞ்சனா’ மிக முக்கியமான படம். அதன்பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும், தர்மதுரை ஆகிய படங்களில் திருநங்கையின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘பேரன்பு’ படத்தில் அஞ்சலி அமீர் என்ற திருநங்கை கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தது பற்றிய அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், “மம்முட்டி அவர்களுடன் நடிக்க பதட்டமாக இருந்தது. ஆனால் அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இயக்குநர் ராம் தந்த உத்வேகத்தில் தான் இதில் நடித்தேன். எனக்கு நடிப்பு மீது அதிக ஆர்வம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: