திங்கள், 8 நவம்பர், 2010

அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் : ஜீ.எல்.பீரிஸ்

அதிகளவான புலம் பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய காலப்பகுதியில் அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் ஆதரவாக செயற்பட்ட போதிலும், தற்போது நிலைமை மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் வித்தியாசமான நிலைப்பாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பான்மையானவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சாதகமான பலன்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் ஏனைய நாடுகளின் அனுபவங்களையும் அவதானித்து இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: