திங்கள், 8 நவம்பர், 2010

தயா மாஸ்ரர் மூக்குடைபட்டார்.

யாழ் பிரபல பாடசாலையான ஹாட்லி கல்லூரியில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற முன்னாள் புலி, தயா மாஸ்ரர் மூக்குடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ஐரோப்பாவில் புலிகளுக்கு துதிபாடிய தொலைக்காட்சி ஒன்று தற்போது அரச ஆதரவில் இலங்கையில் செயற்பட்டுவருகின்றது.

இவ்வானொலியில் முன்னாள் புலிகளும் , புலிகளின் முன்னாள் ஊடகபொறுப்பாளருமான தயா (புலி) மாஸ்ரரும் தொழில் புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஹாட்லி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்று தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களான முன்னாள் புலிகளை பாடசாலை நிர்வாகம் அங்கு செய்தி சேகரிக்க அனுமதிக்கவில்லை. இவ்விடயம் தமது பொறுப்பாளரான தயாமாஸ்ரருக்கு தெரிவிக்கப்பட்டபோது, இதோ வருகின்றேன் நில்லுங்கள் எனக்கூறி தயா மாஸ்ரர் கறுப்பு கண்ணாடி வாகனமொன்றில் சென்று ஹாட்லி கல்லூரியில் இறங்கி நான்தான் தயா(புலி)மாஸ்ரர் என்றபோது நீர் எந்த மாஸ்ராக இருந்தாலும் எமக்கு ஆட்சேபனை இல்லை சென்றுவாரும் என பாடசாலை அதிபர் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது தொலைக்காட்சியில் வந்து கருத்து தெரிவித்த தயா மாஸ்ரர் எனக்கே இந்த நிலை என்றால் ஏனையோரது நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுப்பியுள்ளார். தயா மாஸ்ரல் என்ற காரணத்தினால் தான் இந்த நிலை என தெரிவிக்கும் ஆர்வலர்கள் எதிர்வரும் காலங்களில் முன்னாள் புலிகள் இவ்வாறு மக்களால் துரத்தியடிக்கப்படுவர் என்பதற்கு இது முன்னுதாரணமாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: