வெள்ளி, 5 டிசம்பர், 2025

Indigo மிரட்டலுக்கு பணிந்தது ஒன்றிய அரசு.

May be an image of aircraft and text
Sugitha Sarangaraj  Indigo மிரட்டலுக்கு பணிந்தது மத்திய அரசு. 
விமான பணியாளர்களுக்கான புதிய விதியை திரும்ப பெற்றது இந்திய பொது விமானப் போக்குவரத்து துறை இயக்ககம். 
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய பிறகு விமான போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக Flight Duty Time limitations விதிகளை மத்திய அரசு கடந்த நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
அதுவும் விமானிகள் சங்கங்கள் வேலை பளுவை குறைக்கவும் , ஓய்வு நேரத்தை அதிகரித்து , பறக்கும் பணி நேரத்தை குறைக்க பல்வேறு கோரிக்கைள் வைத்த பிறகு (Director General of Civil Aviation ) இந்திய விமானப் பொது போக்குவரத்து இயக்ககம் புதிய விதியை அமல்படுத்தியது. 

வியாழன், 4 டிசம்பர், 2025

இலங்கை 1,593 கி.மீ. தொடருந்து பாதையில் 478 கி.மீ. மட்டுமே பயன்பாடு- வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தண்டவாளங்கள்

 ஹிரூ நியூஸ் : டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் தொடருந்து வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். 
இந்த சூறாவளி பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக சந்திரகீர்த்தி தெரிவித்தார். 
1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய வீதிகள் சேதமடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஏ.வி.எம்.நிறுவனத்தின் எளிமையான முதலாளி AVM சரவணன்

AVM and its 175th film

 Abdul Samath Fayaz  · உங்கப்பா 36 வருஷமா சர்க்கரை நோயாளி!.
அவருக்கு இருக்கிற டயாபடீஸ் உனக்கும் வர வாய்ப்பிருக்கு!.ஜாக்கிரதை! 
குடும்ப டாக்டர் ரங்க பாஷ்யம் ஒரு சின்ன சர்ஜரி செய்தபோது எச்சரித்தார்!.
அதற்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார் அந்த மனிதர்.
காபி சாப்பிடுவதில் ஆர்வமுள்ள அந்த மனுஷன் அதற்குப் பிறகு காபியில் சர்க்கரையே போடவில்லை.
மனுஷனுக்கு கட்டுப்பாடு அவசியம்.
மனம் அலை பாயும்.ஐம் புலனும் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கும்.

காங்கிரஸ் 40 சீட் + ஆட்சியில் பங்கும் கேட்கிறதாம்! காலாவதியான கட்சியின் கனவுக்கு குறைச்சல் இல்லை

 மின்னம்பலம் - Mathi  :காங்கிரஸ் கட்சிதான்.. சென்னையில இன்னைக்கு திமுக தலைவரான சிஎம் ஸ்டாலினை காங்கிரஸ் ஐவர் குழு சந்திச்சு பேசுனதை பத்தி நிறைய தகவல்கள் இருக்குய்யா..
கொட்டுகிற மழைக்கு நடுவே அனலடிக்கும் அரசியல்.. சொல்லுமய்யா
விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த போகுதுன்னு தீயா தகவல் பரவுன நேரத்துல காங்கிரஸ் கட்சி ஐவர் குழுவை அறிவிச்சது..
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர் தலைமையில அறிவிக்கப்பட்ட இந்த குழுவுல, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் இடம் பெற்றிருந்தாங்க..

ஏவிஎம் சரவணன் காலமானார்

May be an image of text that says "In loving memory M. SARAVANAN Dec 3, 1939- Dec 4, 2025 For last respects: Floor No.3, AVM Studios, 7:30am onwards, Dec 4, 2025 AVM ITUDIOS AVM Family & Staff AVM PRODUCTIONS"

 Meenakshi Sundaram :  திரு.ஏவி.எம்.சரவணன்  அவர்கள் இன்று அதிகாலை சென்னை ஏவி எம் ஸ்டூடியோவில் உள்ள வீட்டில் காலமானார். இன்று மாலை இறுதி சடங்கு!
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய தூண்களில் ஒருவராக திகழ்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சாரவணன் ஐயா (86) இன்று அதிகாலை வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் . 
இந்திய திரையுலகில் ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இழப்பாக அவரது மறைவு கருதப்படுகிறது.
நேற்று தான் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த ஏ.வி.எம். சாரவணன் ஐயா, 
பல தலைமுறைகளுக்கு திரை உலகை வடிவமைத்த எண்ணற்ற வெற்றிப் படங்களை ஏ.வி.எம். நிறுவனத்தின் கீழ் உருவாக்கிய முக்கிய சக்தியாக இருந்தார். 
தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அளவிட முடியாதவை.

திருப்பரங்குன்றம் வழக்கு . 28 நிமிடம், 36 விநாடிகளுக்குள் விசாரித்து வாதங்களை கேட்டு தீர்ப்பை வெளியிட்ட உலகமகா அதிசயம் சுவாமிநாதன் என்ற பிரகிருதி

May be an image of text

 Giri Sundar : ஜி.ஆர்.சுவாமிநாதன் எனும் கலவர  மனிதன்.
இன்று தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை,
மாலை 5 மணிக்கே விசாரணைக்கு எடுத்தது மட்டுமின்றி, 
மாலை 5 மணி முதல் 6.05 மணி வரை ஏற்கனவே 01/12/25-ஆம் தேதியன்று மலை உச்சி மீது விளக்கு ஏற்ற வழங்கப்பட்ட தீர்ப்பை,
 நடைமுறைப் படுத்துகிறார்களா என கால அவகாசம் கொடுத்து பொறுமையாக பார்த்த பின்னர், 
அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்து, 
மீண்டும் வழக்கு விசாரணையை 6.05 மணிக்கு தொடங்கி இருதரப்பு வாதங்களை கேட்டு, 
உச்சநீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்புகளை மட்டும் துணைக்கு அழைக்காமல், 
இங்கிலாந்து நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் கடன் வாங்கி 
13 பக்கம் கொண்ட தீர்பை தயார் செய்து 
மாலை 6.33.36 PM மணிக்கு எல்லாம் அந்த தீர்பை இணையத்தில் பதிவேற்றம் செய்து, 
அதனை நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிப்பது எல்லாம் அவ்வளவு எளிதான காரியமா ?

புதன், 3 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றத்தில் வெடித்த பதற்றம்... 144 தடை உத்தரவு : அரசு அவசர முறையீடு!

 மின்னம்பலம் - Kavi : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க கேட்டு தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளது. 
 கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபமேற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்  அனுமதி வழங்கினார். 
சிஐஎஸ்எப் படை வீரர்களுடன் சென்று தீபம் ஏற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சூழலில் இந்து முன்னணியினரும் பாஜகவினரும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, போலீசார் தடுப்புகளையும் மீறி சென்றனர். 

ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்காவுக்கு எதிரான அவதூறு! சமூக ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவு!

 ilakkiyainfo.com : ஜனாதிபதிக்கு எதிரான அவதூறு: சமூக ஊடகப் பரப்புரையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவு!
Mathdusha
நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையைப் பயன்படுத்திச் சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடுகல, பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அறிவுறுத்தல்: பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவசரகாலச் சட்டத்தின் கீழ் அனர்த்த சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Milk Mafia பால் மாபியா

இனமொன்றின் குரல்  :  இலங்கை தீவு ஆண்டு தோறும் பால்மா பவுடர் (Milk Powder) இறக்குமதிக்கு 300- 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை  செலவழித்து வருகின்றது.
இங்கு சுமார் 1.2 மில்லியன் கால்நடைகள் இருந்தும், உற்பத்தியாகும் பால் சுமார்  450 மில்லியன் லிட்டர்களாக மட்டுமே உள்ளது.
இந்த உற்பத்தி தேசிய தேவையின் 40% ஐ மட்டும்  பூர்த்தி செய்வதால் , ஆண்டுக்கு 75,000 மெட்ரிக் டொன் பால் பவுடர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆனால், உள்ளூரில்  பால் உற்பத்திக்கு  (Fresh Milk) பங்களிக்க கூடிய வடக்கு மற்றும் கிழக்கு பண்ணையாளர்களை தொடர்ந்தும் வஞ்சிக்கின்றார்கள் .
குறிப்பாக, இந்தப் பகுதிகளில் கால்நடை உற்பத்திக்கு  ஆதாரமான மேய்ச்சல் நிலங்களை பெற்று கொடுப்பதில்  ஜேவிபி ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன.
அதேபோல் மன்னாரில் 140,000 கால்நடைகள், வவுனியாவில் 130,000 கால்நடைகள் உள்ளன.

செவ்வாய், 2 டிசம்பர், 2025

இலங்கைக்கு உதவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வெறும் 4 மணிக்கூறுகளை மட்டுமே இந்தியா வழங்கியது? இலங்கை எம்பி கடும் ஆட்சேபம்!

 இலங்கைக்கு நிவாரண பொருட்களை ஏற்றி கொண்டுவரும் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கு  வெறும் 6 மணிக்கூறுகளை மட்டுமே  ஒன்றிய அரசு வழங்கி உள்ளது.
ராவல் பிண்டி விமான நிலையத்தில் இருந்து இலங்கை வருவதற்கு குறைந்தது 4 மணிக்கூறுகளும்  30 நிமிடங்களும் தேவை.
இந்த விமானங்கள் இலங்கையில் இறங்கி பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் செல்வதற்குமாக குறைந்த பட்சம் 24 மணித்தியாலங்கள் தேவை.
இது பற்றி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு முஜிபுர் ரஹ்மான்  இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளார்! 

கோ.சி.மணி பெயரில் துரைமுருகன் ஆடிய ஆட்டம்.. கடுப்பான ஸ்டாலின்.. கதிர் ஆனந்துக்கு கட்சி பதவி கிடைத்த பின்னணி!

கோ.சி.மணி

 மின்னம்பலம் - Mathi :  திமுகவின் சோழமண்டலத் தளகர்த்தர் என்று கலைஞரால் பாராட்டப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் திமுக அடையாளமான முன்னாள் அமைச்சர், முன்னாள் தஞ்சை மாவட்டச் செயலாளர், டெல்டா மண்டல பொறுப்பாளர் கோ.சி.மணியின் 9 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று டிசம்பர் 2 அனுசரிக்கப்படுகிறது.
கோ.சி. மணி மறைந்து 9 ஆண்டுகள் ஆன பின்னாலும், திமுகவில் அவரது தடமும், அவரது முத்திரையும் இன்னும் அப்படியே உள்ளது.
அண்மையில், திமுகவின் வேலூர் மாவட்டப் பொறுப்பாளராக கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டதில் கூட கோசி.மணியின் பங்கு இருக்கிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?

இலங்கை பேரழிவு பற்றி ஆய்வு நடத்த திரு .ரணில் விக்கிரமசிங்கே அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்கிறார்

Ranil Wickremesinghe – Keynote Speaker ...

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு  நிலைமையை ஆய்வு செய்யும் பொருட்டு  அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்திருக்கிறார்!
இயற்கை அழிவை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது  .
இந்த கூட்டம் வருகின்ற  புதன்கிழமை (03) கொழும்பில் உள்ள மல்பாரா அரசியல் அலுவலகத்தில் நடைபெறும்!
 Ranil calls all party leaders the day after
Former President Ranil Wickramasinghe has called a party leader meeting to discuss the steps that Sri Lanka should be taken due to the extreme adversity faced by the hurricane.
Accordingly, all party leaders are scheduled to meet at Malpara political office in Colombo on Wednesday (03).

திங்கள், 1 டிசம்பர், 2025

அரசுப் பள்ளிகளில் வாரம் ஒரு ‘சினிமா’: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!

 மின்னம்பலம் - Santhosh  : “பள்ளிக்கூடம் என்றாலே பாடம், பரீட்சை, வீட்டுப்பாடம் மட்டும்தானா? கொஞ்சம் ஜாலியாக இருக்கக் கூடாதா?” என்று ஏங்கும் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை ஒரு இனிப்பான செய்தியைச் சொல்லியுள்ளது. 
இனி அரசுப் பள்ளிகளில் வாரம் ஒரு திரைப்படம் திரையிடப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகக் குழந்தைகள் அதிக நேரம் டிவி அல்லது போனில் படம் பார்ப்பதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. ஆனால், “நல்ல சினிமா என்பது ஒரு பாடம்” என்பதை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஒரு புதிய முன்னெடுப்பைக் கையில் எடுத்துள்ளது.

cyclone ditwa: பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

  tamil.oneindia.com  -Rajkumar R  : சென்னை: டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.12.2025) தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார்.
டிட்வா புயல் நேற்று பின்னிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 30 நவம்பர், 2025

50 குடும்பங்களும் வீடுகளும் மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!

 இலக்கியா : : ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை! நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம்.
நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது.
இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள்.

பதுளையில் ஏற்பட்ட பேரழிவு : வெளியானது அச்சமூட்டும் அறிவிப்பு

 தமிழ் மிரர் :பதுளை மாவட்டத்தில் இன்று (30) பிற்பகல் நிலவரப்படி, நிலச்சரிவு, மண்சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட பேரழிவுகளால் 71 பேர் உயிரிழந்துள்ளனர், 53 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 7,973 குடும்பங்களைச் சேர்ந்த 32,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக சிறி பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
மாவட்டத்தில் நிறுவப்பட்ட 181 தங்குமிடங்களில் 5,524 குடும்பங்களைச் சேர்ந்த 22,373 பேர் தற்போது தங்கியுள்ளனர், மீதமுள்ளவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். பேரிடர்களில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 151 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன, 1,073 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார்.

சனி, 29 நவம்பர், 2025

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யாழ் பேருந்திலிருந்து அனைவரும் மீட்பு – யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றிய ராணுவம்

 தமிழ் மிரர் :கலா ​​ஓயா பாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்
யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி
யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 28 நவம்பர், 2025

கொழும்பு அடுத்த 24 மணி நேரத்தில் மூழ்கும் அபாயம் – நீரியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

Sri lanka Flood:வீரகேசரி : சமீபத்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வெள்ளம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு முழுவதும் பெரும் அளவில் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என்று நீரியல் & பேரிடர் மேலாண்மைக்கான இயக்குநர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இயற்கை அழிவுகளுக்கும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு

 ராதா மனோகர் :  இயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் ...
Collective Consciousness ... become  Collective Unconsciousness.  Then it will create material realities
தனி மனிதர்களுக்கு இருக்கும் மன நிலை அவர்களை வாழ்வை தீர்மானிக்கும் என்பதை பற்றி பல தடவைகள் எழுதி உள்ளேன்.
அவற்றை பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டலும் அதுதான் உண்மை.
பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது.  இங்கே நான் சொல்ல வரும் விடயம் அது அல்ல.
உலக வரலாற்றில் எங்கெல்லாம் இயற்கை அழிவுகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் அதை தொடர்ந்து அல்லது அதற்கு முன்பாகவே மக்கள் அமைதி இழந்து  நாட்டில் குழப்பங்கள் நிலவுவதை காணலாம்.
இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் . பிரபஞ்சம் இயங்கும் பொறி முறையை பற்றிய போதிய புரிதல் இன்றைய உலகுக்கு  கிடையாது என்பதே உண்மை

ஐராவதம் மகாதேவனும் தமிழும்!

May be a black-and-white image of one or more people and glasses

 Giri Sundar  : நவம்பர் 26, ஐராவதம் மகாதேவன் அவர்களின் நினைவுநாள். அவர் கல்வெட்டு ஆய்வாளர் என்பது பலரும் அறிந்தது. ஆனால் அவர் தினமணி ஆசிரியராகத் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. அதனைத் தம் கட்டுரையில் நினைவுகூர்ந்திருக்கின்றார் தினமணி நாளிதழின் இணை ஆசிரியரும் கட்டுரையாளருமான திரு. எம். பாண்டியராஜன். அதனை இங்கே பகிர்ந்திருக்கிறேன்!
தமிழும் ஐராவதம் மகாதேவனும்!
-எம். பாண்டியராஜன்
அறிஞர் ஐராவதம் மகாதேவன் என்றதும் பெரும்பாலும் தொல்லியல், ஆரியர் வருகைக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம், புகளூர்த் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைப் பேசி, மிகக் குறைவாகவே தினமணி பற்றிக் குறிப்பிட்டு விட்டுவிடுகிறார்கள்.

வெள்ளக் காடாக மாறிய இலங்கை - இதுவரை 70 க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு பதுளையில் மட்டும் 31 பேர் உயிரிழப்பு

 bbc.com : திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை
இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள நிலவரம், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலை ஆகியவற்றைக் காட்டும் சில புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
கொழும்பு - பதுளை பிரதான சாலையில் உள்ள ஒய் சந்திப்பில் இருந்து பண்டாரவெல செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தியத்தலாவ வழியாகச் செல்லும் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாறை கால்வாயில் கார் வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

 தினகரன் :அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்ததும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கால்வாயில் மூழ்கிய கார் மீட்கப்பட்டது.

வியாழன், 27 நவம்பர், 2025

1951 கலைஞரின் கார் -.மணமகள் - சுப்பிரஜா - கலைவாணர்!

May be an illustration of text that says "KARUNANDHI AND ANNADURAI seated beside the car gifted to Karunanidhi by N.S. Krishnan for penning the creenplay of the film "Manamagal" in 1951. எெங்கே கொக்கேபிவிம்ாரின் பிலிம்ாரின் மணமகள்"

ஆனந்த்குமார் சித்தன்  :  கலைவாணர் என் எஸ் கே பொருளாதார ரீதியாக தோல்விகளை சந்தித்த காலம்..
லட்சுமி காந்தன் என்கிற பத்திரிகையாளர் கொலை வழக்கில் இவரையும் சேர்த்து விட்ட பின்னர், போராடி வெளியே வந்த காலம்..
அப்போது
1950 களில் மலையாளத்தில் சுப்ரபா என்று ஒரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது.. அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க நினைத்தார் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்.
அதை அப்போதைய நண்பரான கலைஞரிடம் சொன்னார்..
பின்னர்
சுப்ரபா நாடகத்தின் எழுத்தாளர் அடூர் முன்ஷி பரமேஸ்வரன் பிள்ளையும், கலைஞரும் இணைந்து திரைக்கதை உருவாக்கினர்.
படத்தின் வசனம் முழுமையாக கலைஞர் எழுதினார்..
கட்டாயத்திருமணமும், பெண் சுதந்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை என் எஸ் கே தயாரித்து இயக்கினார்.

ஹாங்காங் பிரமாண்ட குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 36 பேர் உயிரிழப்பு .. பலரின் நிலை தெரியவில்லை

நக்கீரன் : ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! பலர் உயிரிழப்பு .. பலரின் நிலை தெரியவில்லை 
ஹாங்காங்கின் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காக்கில் உள்ள பல அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனைத்து தளங்களிலும் தீப்பற்றி எரிந்த நிலையில், இந்த விபத்தில் 36  பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

புதன், 26 நவம்பர், 2025

‘செங்கோட்டையன் தவெவில் -பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்...’ - திருமாவளவன் சந்தேகம்

 hindutamil.in -  தமிழினி   : சென்னை: “செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்குப் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கைகளும் நீண்டிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். அவருக்கு நெடிய அனுபவம் உள்ளது. ‘
அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது அதிமுகவுக்கும், எடப்பாடிக்கும் பின்னடைவாகத்தான் இருக்கும். தனிப்பட்ட முறையில், தன்னிச்சையாக அவர் இந்த முடிவை எடுத்திருந்தால், நாம் எதுவும் சொல்ல முடியாது.

சிறையில் உள்ள புலிகள் ஆதரவு பெண்ணுக்கு எஸ்.ஐ.ஆர்., படிவம்

https://images.dinamalar.com/data/large_2025/Tamil_News_lrg_4092141.jpg

 தினமலர் -சென்னை: சிறை கைதியாக உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு வினியோகம் செய்ய, எஸ்.ஐ.ஆர்., படிவம் அச்சடித்து இருப்பதும், அவரிடம் நம் நாட்டு பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் என, சகல விதமான ஆவணங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 45. இவர், 2019ல், சுற்றுலா விசாவில் தமிழகம் வந்து, சென்னை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த இவர், 2021ல், விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல முயன்றார். அவரை, தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விஜய்.. செங்கோட்டையனை வாண்டடாக கேட்டது ஏன்? விஜயகாந்த் எடுத்த அதே ரூட்!

 tamil.oneindia.0Rajkumar R  :  சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது/ ஏற்கனவே பல தலைவர்கள். குறிப்பாக செஞ்சி ராமச்சந்திரன், மருது அழகராஜ், காளியம்மாள் ஆகியோர் விஜய் தரப்பை அணுகிய நிலையில் அவர்கள் கட்சியில் இணைவதற்கு விஜய் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் செங்கோட்டையனை விஜய் தரப்பே அணுகி கட்சியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குப் பின்னணி என்ன என்பது குறித்தான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது.

செவ்வாய், 25 நவம்பர், 2025

5 வயது சிறுவனை மரத்தில் கட்டி தொங்க விட்ட ஆசிரியைகள்- சத்தீஸ்கர் மாநிலம்

Teachers hang student from tree

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy  :சத்தீஸ்கரில் வீட்டுப்பாடம் முடிக்காத நான்கு வயது மாணவனை ஆசிரியைகள் மரத்தில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் பகுதியில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் வாஹினி வித்யா மந்திர் பள்ளி செயல்பட்டு வருகிறது. நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் திங்களன்று காலை வழக்கம் போல் பள்ளி தொடங்கியது. அப்போது நர்சரி வகுப்பு ஆசிரியை காஜல் சாகு என்பவர் குழந்தைகளுக்கு அளித்த வீட்டுப்பாடத்தை சரிபார்த்தார். அப்போது அவரது வகுப்பில் ஒரு மாணவர் மட்டும் வீட்டு பாடங்களை முடிக்காதது கண்டு ஆத்திரம் அடைந்தார்.

“கொழும்பு ஹோட்டலில் தாக்குதல் சம்பவம் – வாடிக்கையாளர்கள் மீது இனவாதக் குற்றச்சாட்டு தவறு”

 மதுஷா : கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளில் ஹோட்டல் ஊழியர்களால், வாடிக்கையாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
எனினும் உண்மையில் வாடிக்கையாளர்களால் கொடூரமான முறையில் ஊழியர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது தாக்குல் மேற்கொண்டதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் சம்பவத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஊழியர்கள் மீது தாக்குதல்

திங்கள், 24 நவம்பர், 2025

திமுகவிடம் காங்கிரஸ் 45 தொகுதி கேட்கிறது - டபிள் டிஜிட்டாவது கிடைக்குமா?

 மின்னம்பலம் : 45 சீட்.. காங்கிரஸ் ஐவர் குழு 'அதிரி புதிரி’.. திமுக ‘ஷார்ப்’ ரியாக்சன் என்ன? 
கூட்டணி விவகாரத்துல காங்கிரஸ் ரொம்ப வேகமா இருக்கேன்னு டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான சீனியர்களிடம் நாம் பேசிய போது, “பீகார் தேர்தல் முடிஞ்ச கையோடு டெல்லியில 12 மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பொறுப்பாளர்கள், சீனியர் லீடர்ஸை ராகுல் அழைச்சு பேசுனாரு.. SIR பத்தி பேசுறதுக்குன்னு சொன்னாலும் ஒவ்வொரு ஸ்டேட்டுலயும் எலக்‌ஷன் வரப் போறதால அதுபத்தியும் டிஸ்கஷன் போனது..
இந்த கூட்டத்துல, தமிழகத்துல காங்கிரஸ் வேற கூட்டணி ஆப்சனை எதுவும் பார்க்குதுன்னா சிலர் கேட்டுப் பார்த்தாங்க.. அதுக்கு கார்கேவும் ராகுலும், திமுக கூட்டணியைத் தவிர வேற சான்ஸே இல்லை.. ஆனா எத்தனை சீட், எந்த தொகுதிங்கிற விவகாரம் எல்லாத்தையும் நீங்களே பார்த்துக்கனும் என கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்க..

இலங்கை கடுகண்ணாவ மண்சரிவில் 6 பேர் உயிரிழப்பு


 ஜாப்னா முஸ்லீம் : கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தவர் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.
அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

ஞாயிறு, 23 நவம்பர், 2025

கார்த்தி சிதம்பரம் : சென்னையை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை!

 தினமலர் : திருப்புத்தூர் : ''தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை,'' என,காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் அவர் அளித்த பேட்டி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஏற்கக் கூடியதே. 
ஆனால் வாக்காளர் நீக்கப்பட தகுந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அளிக்க வேண்டும். முப்பது நாட்களுக்குள் வாக்காளர் பட்டியலை திருத்த முடியுமா என்பது தான் கேள்வி. 
தேர்தல் கமிஷனுக்கு, 2026ல் தமிழக சட்டசபைத்தேர்தல் வரும் என்பது தெரியும். 

இலங்கை இந்தியா பாகிஸ்தான்- குடியுரிமையும் பொய் பிரச்சாரங்களும்

Prime Minister Jawahalal Nehru Prime Minster D.S.Senanayaka

ராதா மனோகர்
: இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை  பற்றி இந்த நிமிடம் வரை ஏராளமான வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.
அதில் கவனிக்க வேண்டிய சில விடயங்களை பற்றி இப்போது பாப்போம்.
இலங்கை இந்தியா பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் பிரித்தானியாவிடம் இருந்து ஏறக்குறைய சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளாகும்.
இந்த மூன்று நாடுகளின் பல பிரச்சனைகள் பெரிதும் பொதுவானவை.
அந்த பிரச்சனைகள் எப்படி எதிர்கொள்ள பட்டன என்பது ஆய்வுக்கு உரியது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ( பங்களாதேஷ் உள்ளிட்ட) ஒரு போர்முனையில் பிரியவேண்டிய சூழ்நிலை உருவானது.
இரு பகுதி எல்லைகளும் பிரிக்கப்பட்ட போது இரத்த ஆறு ஓடியது.
மேற்கு பாகிஸ்தான்  எல்லையிலும் கிழக்கு பாகிஸ்தான்  எல்லையிலும் ஒரு வரை ஒருவர் வெட்டி கொன்றார்கள்.
இதில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது 
அண்ணளவாக  இரண்டு கோடி மக்கள் இடம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது..
கோடிக்கணக்கான குடும்பங்கள் ஈவு இரக்கம் இல்லமால் நிரந்தரமாக பிரிக்கப்பட்டன.

மன்மோகன்சிங் வழக்கின் தீர்ப்பை மீறும் தேர்தல் ஆணையம்- பீகாரிகள் தமிழக வாக்காளர்களாக முடியுமா?

Election Commission Biar Voters
மின்னம்பலம் 0 -வி. அருண்  2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் மே மாதத்திற்குள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் 27.10.2025 ஒரு ஆணையை வெளியிட்டது. அதில், தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களின் வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர சீர்த்திருத்தம் SIR மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையானது, 04.11.2025 முதல் 04.12.2025-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 4.11 2025 அன்று வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் 27.10 2025ல் அறிவித்த போதிலும், தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 41 லட்சத்து வாக்காளர்களுக்கு, ஒரு வாக்காளருக்கு இரண்டு படிவங்கள் என்ற வகையில் நான்கு பக்கங்கள் கொண்ட கணக்கீட்டு படிவம் (Enumeration,Form) கொடுக்க வேண்டும். ஆனால் 4. 11.2025 தேதியில், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், முறையாக BLO-க்களுக்கு தேவையான அளவுக்கு பயிற்சி கொடுக்காமல், அவசரகதியிலும் இதை நடைமுறைப்படுத்த ஆணையிட்டது

ஈரோடு தமிழன்பன் காலமானார் .

 Annamalai Arulmozhi  : திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் இரங்கல் அறிக்கை!!
நமது அருமைத் தோழர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் தமது 92ஆம் வயதில் (22.11.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரின் இழப்பு எளிதில் ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பாகும். 
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பரம்பரை என்று போற்றத் தகுந்த கவிஞர்களுள் முதல் வரிசையில் திகழ்ந்தவர். முற்போக்குச் சிந்தனையாளர்! இன உணர்வாளர்! சமூகநீதியாளர்! மானுடநேயர்!
சென்னிமலையில் பிறந்தாலும் எந்தச் சிறப்பைப் பெற்றாலும் எந்த விருதினை ஏற்றாலும், அவை அத்தனையும் ஈரோட்டுப் புகழே என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தன்னுடைய பெயருக்கு முன்னால், ஈரோட்டை இணைத்துக்கொண்டு, வெறும் பெயரோடு என்றில்லாமல் அந்த உணர்வோடு கலந்துவிட்ட பெரியார் பற்றாளர், அற்புதமான ஒப்பற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

சனி, 22 நவம்பர், 2025

திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு அறிவிப்பு

 மின்னம்பலம் - Mathi  : 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுகவுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த காங்கிரஸ் கட்சி 5 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது.
இந்த குழுவில்
1) கிரிஷ் ஜோடங்கர் (தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்)
2) செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்)
3) சூரஜ் ஹெக்டே (காங்கிரஸ் செயலாளர்)
4) நிவேதித் ஆல்வா (காங்கிரஸ் செயலாளர்)
5) ராஜேஷ்குமார் (தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்)
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தீர்ப்பு! பவாரியா கொள்ளையர்கள் குற்றவாளிகள்

 மின்னம்பலம் - Kavi  : முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே. சுதர்சனம் கொலை வழக்கில், இன்று (நவம்பர் 21) சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
18 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், பவாரியா கொள்ளையர்களான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்தார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் நவம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் நடந்த கொலை

“விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்” - அப்பாவு கருத்து

 hindutamil.in  - அ.அருள்தாசன் :  திருநெல்வேலி: “விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கை அளித்துள்ள நிலையில், அவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது:
 “இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்தளவுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 ஆண்டு காலமாக மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்து வந்துள்ளார்.

கரிகாலன் : எல்லாவித அநியாயங்களையும் வக்கிரத்தோடு அரங்கேற்றி வரும் திரு.ஷபீர் அகமது,

 Karikalan Kiru  : எல்லாவித அநியாயங்களையும் வக்கிரத்தோடு அரங்கேற்றி வரும் திரு.ஷபீர் அகமது, அவரை நோக்கி வரும் விமர்சனங்களையும் கேள்விகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் "மத ரீதியான தாக்குதல்" என்று 'victim' வேடம் போட்டு  தப்பிக்கப் பார்க்கிறார். வேறு வழி? துரோகம் செய்யும் அனைத்து கோடாரிக் காம்புகளும், தங்கள் குட்டு வெளிப்பட்டவுடன் கைகொள்ளும் அதே அரதப் பழசான வழியைத் தான் திரு.ஷபீரும் தேர்ந்தெடுத்துள்ளார்.
இவருக்கு ஆதரவாக 2 சங்கங்கள் அறிக்கை வெளியிட்டு,கோதாவில் குதித்துள்ளன.
1. தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் 
2. சென்னை பத்திரிகையாளர் சங்கம் 
இதில் தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் மற்றும் அதன் நிர்வாகிகளின் பின்னணியை பார்த்தாலே திரு.ஷபீரின் victim card தானாகவே டார் டாராக கிழிந்துவிடும். 

கைதிகளின் பற்களை உடைத்த ஐபிஎஸ் அதிகாரி பல்பீந்தார் சிங் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

பல்வீர் சிங் | கோப்பு படம்

 hindutamil.in - கி.மகாராஜன்  : மதுரை: விசாரணைக் கைதிகளின் பற்களை உடைத்தது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “அம்பை டிஎஸ்பியாக பணிபுரிந்த போது அருண்குமார் என்பவரை சட்டவிரோதமாக காவலில் வைத்து பல்லை உடைத்ததாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இதுபோன்ற சம்பவங்களை குறிப்பிட்டு என் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வெள்ளி, 21 நவம்பர், 2025

அனில் அம்பானியின் ரூ.1,452 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

 தினமலர் : புதுடில்லி: வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், அனில் அம்பானிக்கு சொந்தமான 1,452 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
'ரிலையன்ஸ்' குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66, வங்கி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றம்சாட்டப்பட்டது.

வியாழன், 20 நவம்பர், 2025

மாநில சட்டமன்றங்களின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் உச்ச நீதிமன்றம்?

 Vasu Sumathi  :  "சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை என்றாலும், ஆளுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் ஒப்புதல் வழங்க காலக்கெடுவை நிர்ணயித்த இருவர் அடங்கிய அமர்வின் ஏப்ரல் 8 தீர்ப்பில் உள்ள உத்தரவுகள் செல்லாது.  அவை அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது." -  ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. 
இதற்கு முன் கொஞ்சம் நியாயமாக தீர்ப்பு வழங்கிய உநீம.. இப்போது பல்டியடித்து, மீண்டும் அரசுக்கு சாதகமாகவே உப்பு சப்பில்லாத ஒரு முடிவை சொல்லியிருக்கிறது. முழு ஆணையும் வந்த பிறகு விரிவாக அலசலாம். ஆனால் இது ஆரோக்கியமான தீர்ப்பாக இல்லை. 
"ஆளுநரிடம் 3 அரசியலமைப்பு சார்ந்த வாய்ப்புகள் உள்ளன - ஒப்புதல், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைத்தல், சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புதல். 
ஆளுநர் இந்த மூன்று வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தன் விருப்புரிமையைப் பயன்படுத்துகிறார். 

ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை

 பிபிசி தமிழ் : 'மனைவி இல்லை, மரியாதை போய்விட்டது'- 
ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை
ராய்ப்பூரின் அவதியா பாராவின் வளைந்த குறுகிய தெருக்களில், ஒரு பழைய வீடு இருக்கிறது. சுமார் 84 வயதான ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா அந்த வீட்டில்தான் வசிக்கிறார்.
இந்த வீட்டின் பாழடைந்த சுவர்களில் பெயர்ப் பலகைகள் ஏதுமில்லை, வெற்றியின் அறிகுறிகள் ஏதுமில்லை. ஆனால் இந்த சுவர்களால் பேச முடிந்தால், ஒரு மனிதர் 39 ஆண்டுகள் நீதியின் கதவைத் தட்டிய கதையை அவை சொல்லும். அந்தக் கதவு இறுதியில் திறந்தபோது, அவரது வாழ்க்கையின் பெரும்பாலான ஜன்னல்கள் ஏற்கனவே மூடியிருந்தன.

புதன், 19 நவம்பர், 2025

திருகோணமலையில் ஒரு உணவகத்தை வைத்து பௌத்த சைவ சண்டைக்கு தூபம் போடும் இனவாதிகள்

 ராதா மனோகர் : இலங்கை ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இனவாத மதவாத சேற்றுக்குள் இருந்து மெதுவாக மேலெழுந்து வருகிறது!
இப்போது என்ன காரணம் கொண்டும் வெறுப்பு அரசியலை தூண்டி விடுவது சரியல்ல.
எல்லாவற்றிலும் மேலாக பௌத்தம் தமிழர்களின் மதமும்தான் சிங்கள மொழியும் தமிழர்களின் மொழிதான்.
அது பௌத்தத்தை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய மொழி,
பார்ப்பனர்கள் கடலை கடக்க கூடாது என்ற அந்த காலத்து வழக்கப்படி அவர்கள் இலங்கைக்கு வரவில்லை.
எனவே இலங்கையில் அவர்களால் ஆபத்து இல்லை. 
இந்த காரணத்தால்தான் அது ஓரளவு மக்கள் பேசும் மொழியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது .
மேலும் தமிழ் மொழியை சைவர்கள் கைப்பற்றி தமிழும் சைவமும் ஒன்று என்ற ரீதியில் மன்னர்களின் ஆதரவோடு அதை நடைமுறைப்படுத்தினர்.
அதனால்தான் தமிழர்களின் திருக்குறளையே எந்த காலத்திலும் சைவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

பொன்ராஜ் : பாஜகவை வீழ்ந்த தெருவில் இறங்கி போராடவேண்டும்!

 Rebel Ravi : பாஜக + தேர்தல் ஆணைய கூட்டணியை வீழ்த்த பொன்ராஜ் அவர்கள் கடந்த ஆறுமாதமாக ஊடகங்களில் தொடர்ந்து வலியுறுத்தும் தீர்வு இதுதான்…!
ராகுல்காந்தி அவர்கள் வாக்கு திருட்டை வெளிப்படுத்துவதால் மட்டும் பாஜகவை வீழ்த்த முடியாது…!
ராகுல் காந்தியும் பல மாநில கட்சிகளின் தலைவர்கள் தனிதனியாக போராடுவதாலும் பாஜகவை வீழ்த்த முடியாது…!
உச்ச நீதிமன்றத்தில் வாக்கு திருட்டு மற்றும் S.I.R. உள்ளிட்டவற்றை எடுத்து சென்றாலும் அது கிடப்பில் போடப்படும். அதனாலும் பாஜகவை வீழ்த்த முடியாது…! 
தேர்தல் ஆணையர் பாஜக நிர்வாகியாக செயல்படுவதால் பாஜகவை வீழ்த்த முடியாது…! 

செவ்வாய், 18 நவம்பர், 2025

இலங்கை சிறைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்

 jaffnamuslim.காம் : "வெடிக்கத் தயாராக" மெகசின் சிறைச்சாலை
இலங்கையின் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாக கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.
நாட்டின் சிறைச்சாலைகளின் உத்தியோகபூர்வ கொள்ளளவு 10,750 ஆக இருக்கும் நிலையில், தற்போது சுமார் 37,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா- கைவிடப்பட்ட சூட்கேசில்

file video :   

 ஹிரூ நியூஸ் : கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட ஒரு சூட்கேஸை சுங்கத்துறையினர் சோதித்தபோது, அதில் ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார், சூட்கேஸில் 11.367 கிலோ கஞ்சா இருந்ததாகவும், அதன் சந்தை மதிப்பு ரூ.113,670,000 எனப் பதிவாகியுள்ளதாகவும்.
இந்த சூட்கேஸ் மார்ச் 17ஆம் திகதி விமான நிலையத்தில் கைவிடப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் நேற்று (17) போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிகார் - காங்கிரஸ் அதிக தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் மிரட்டி வாங்கி எதிர்கட்சிகளை வெற்றி பெற வைக்கிறது

May be an image of text that says "DALTI MEMERS 3 O GALIT MEMES 1d Dalit Memers Collective X Broomin privilege: Nobody questions his incompetence. All blame is conveniently shifted to the EVMs."

 Rebel Ravi :   பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். - என்ன செய்யப் போகிறது திமுக?
பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக் கேட்டு ஆர்ஜேடி-யுடன் ஆரம்பத்திலிருந்தே மல்லுக்கு நின்றது காங்கிரஸ். கடைசியில், 61 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், 7 தொகுதிகளில் ஆர்ஜேடி-யுடனேயே நட்புடன்(!) மோதியது காங்கிரஸ். கடைசியில், காங்கிரஸுக்கு கைவசமானது என்னவோ 6 தொகுதிகள் தான்.
தமிழகத்திலும் 1996 முதல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் அபாரமான தோல்விகளையே சத்தித்திருக்கிறது
1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. 
இதேபோல், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வுக்கு அழுத்தம் கொடுத்து 63 இடங்களை பெற்ற காங்கிரஸ், ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. ஓர் இடத்தில் காப்புத் தொகையையும் காவுகொடுத்தது.
இதேபோல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 41 இடங்களை தந்தது திமுக. அதில் எட்டில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. 

SIR மூலமாக தமிழக வாக்காளர் பட்டியலில் பீகாரிகள்? தேர்தல் ஆணையத்துக்கு திமுக கேள்வி Biharis in Tamil Nadu

 மின்னம்பலம் -  Mathi :  இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக பீகார் வாக்காளர்களையும் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க முயற்சி நடைபெறுவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது.
திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட அறிக்கையில், தேர்தலை முறையாக, ஒழுங்காக, நேர்மையாக, உண்மையாக நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை. ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நடப்பது எல்லாம் குளறுபடிகளின் உச்சமாக இருக்கிறது.
இதற்கு முன்பு தேர்தல் நடந்த மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்திற்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள்.

வட இந்தியா தோற்றது ஏன்? அரசியல் கோட்பாடு வறுமையே முதன்மை காரணம்


 ராதா மனோகர்
  : வட இந்தியாவில் இன்று  நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் மூல காரணம் அங்குள்ள அரசியல் கோட்பாட்டு வறுமைதான்.
மறுபுறத்தில் தமிழ்நாடு எல்லா விதத்திலும் முன்னேறி செல்வதற்கும் எத்தனையோ காரணங்களை கூறினாலும்,
நீதிக்கட்சியில் இருந்து இன்றைய திமுக வரை வளர்ச்சி பெற்ற அரசியல் கோட்பாடுதான் காரணம்  என்று நான் கருதுகிறேன்.
தமிழக அரசியல் கட்சிகளும் ஏராளமான இயக்கங்களுக்கும் கடும்  அரசியல் சமூக விவாதங்களை தொலைக்காட்சிகளில் நடத்துவதை  அன்றாடம் நாம்   காண்கிறோம்.
இப்படிப்பட்ட காட்சிகளை இந்த அளவுக்கு இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாது.
தென்னக மாநிலங்களில் கொஞ்சம் காணலாம்..
வடமாநில தொலைக்காட்சிகள் இன்னும் ஒரு வளர்ச்சி அடையாத மக்களின் மூட நம்பிக்கைகளுக்கு மலிவு தீனி போடுவதையே 24 மணிக்கூறும் செய்கின்றன.

திங்கள், 17 நவம்பர், 2025

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - வங்கதேச முன்னாள் பிரதமர் - நீதிமன்றம் கூறியது என்ன?

 BBC News தமிழ்  : வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
தாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், அந்த உத்தரவு "ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது" என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

தோழர் திருமாவை மிக தரம் தாழ்ந்த சொற்களால் இலங்கை எம்பி திரு அர்ஜுனா ராமநாதன்

Dr Ramanathan Archchuna ...
Arjuna Ramanathan MP

 தோழர் திருமாவை மிக தரம் தாழ்ந்த சொற்களால் திரு அர்ஜுனா ராமநாதன் எம்பி தனது முகநூலில் பதிவிட்டு உள்ளார். அவர் குறிப்பிட்டது 
யார்ரா இந்த டிங்கி 
எனக்கு அரசியல் சரியாக தெரியாது  
ஆனா நிக்கிற இடத்தை பார்த்தா ஏதோ குனா சூனா மாதிரி தெரியுது?
தோழர் திருமாவளவன் பற்றி இவ்வளவு மோசமான சொற்களால் குறிப்பிட்டமை,
 ஒரு ஜாதி வெறி வாந்தியாகத்தான்  எனக்கு தோன்றுகிறது.
அதென்ன டிங்கி?
அதென்ன குனா சூனா?
ஒரு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த பதிவில் மூலம் என்ன கருத்தை இவர் சொல்ல வருகிறார்?
மூச்சுக்கு மூச்சு தேசிய தலைவர் மாவீரர் தமிழீழ மண் என்று சதா ஓங்கி ஒலிப்பவரின் உள்ளத்தின் அடியில் என்ன உள்ளது என்பதை இதைவிட தெளிவாக யாராலும் சொல்லி விட முடியாது 
செல்வநாயகமும் பிரபாகரனும் விஷம் ஊற்றி வளர்த்த தமிழ் பேரினவாதம் என்பது இதுதான் 

ஞாயிறு, 16 நவம்பர், 2025

டெக்னாலஜி.. SIR ஐ எதிர்கொள்ள திமுக எடுத்த அஸ்திரம்.. பாஜக திகைப்பு!

 Maha Laxmi  : தமிழ்நாட்டின் பல்வேறு வார்டுகளிலும் நடைபெறும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் நிலையில் திமுக இதில் டெக்னாலஜியை பயன்படுத்தி வாக்காளர்களை ஆய்வு செய்து வருகிறது. 
இதற்காக திமுக சிறப்பு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு முறையான அமைப்பை அமல்படுத்தியுள்ளது. 
இதற்காக, வாக்காளர் தகவல்களைத் தொகுத்து பூத் வாரியாகப் பிரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலியை கட்சி பயன்படுத்துகிறது.
இந்த செயலி, பெயர் மற்றும் குரல் உள்ளீடு மூலம் வாக்காளர் பதிவுகளை விரைவாகத் தேடும் வசதியைக் கொண்டுள்ளது.
இதன் மூலம், கட்சித் தொண்டர்கள் வாக்காளர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யத் தேவையான வழிமுறைகளை எளிதாக வழங்க முடிகிறது.
அதாவது ஒரு ஏரியாவில் BLO அதிகாரி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்..

10 நிமிடம் தாமதம்’ – ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்’ தண்டனையால் உயிரிழந்த மாணவி

சிட்-அப் தண்டனை

vikatan : மும்பை மாணவி 10 நிமிடம் தாமதமாக வந்ததால், வகுப்பு ஆசிரியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்துள்ளார். மாணவியிடம் பேக்கை கூட கீழே வைக்க விடாமல் பேக்கோடு சிட் அப் செய்யும் படி செய்ய வைத்துள்ளார்.
இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பீகாரில் காங்கிரஸ் தற்றது ஏன்? 10 முக்கிய விடயங்கள் Why the Congress Became Irrelevant in Bihar:

 மின்னம்பலம் -Mathi : பீகாரில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி (Congress) தற்போதைய சட்டமன்ற தேர்தலில் வெறும் 6 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
மக்களவை எதிர்கக்ட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலம் முழுவதும் யாத்திரை, பிரசாரம் என ‘வம்பாடு’ பட்டும் விழலுக்கு பாய்ந்த நீரைப் போல பயனற்றுப் போய்விட்டது.
   பீகாரில் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு பூத் முகவர்களைக் கூட போட இயலாத அளவுக்கு ‘தொண்டர்கள்’ கூட இல்லாத பரிதாப நிலை மிக அடிப்படை காரணம் என்கின்றனர் அந்த கட்சியின் தலைவர்கள்.
    காங்கிரஸ் கட்சியின் பீகார் முகம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு தலைவர்கள் யாருமே இல்லை. 1990களின் தொடக்கம் முதலே பீகார் மாநிலத்துக்கான காங்கிரஸ் முகமே இல்லை.

சனி, 15 நவம்பர், 2025

உதயநிதி ஸ்டாலின் : பாஜகவுக்கு பதற்றத்தை தரக்கூடிய கட்சியாக நாட்டிலேயே திமுக திகழ்கிறது!

 hindutamil.in   : சிவகங்கை: நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசின் புதுப்பிக்கப்பட்ட வெண்கல சிலையை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். 
பின்னர் அவர் பேசும்போது, “2026 தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுர ஆகிய 2 மாவட்டங்களிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். 

ராகுல் காந்தி ; பீகாரில் நடந்தது நியாயமற்ற தேர்தல்

 மின்னம்பலம் - Kavi  : பீகார் சட்டமன்றத் தேர்தலில் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி தோல்வியடைந்த நிலையில், இத்தேர்தல் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பீகாரில் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. காங்கிரஸ்- ஆர்ஜேடி அடங்கிய மகாபந்தன் கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தல் முடிவு குறித்து தனது எக்ஸ் பக்கம் மூலம் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்த கோடிக்கணக்கான பீகார் வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் இந்த தேர்தல் முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நியாயமானதாக இல்லாத ஒரு தேர்தலில், எங்களால் வெற்றி பெற முடியவில்லை.

புதுக்கோட்டை திமுக தூண் பெரியண்னன் நினைவு பகிர்வு

No photo description available.

 சுப.மோகன் ராஜ் : மரியாதைக்குரிய புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட கழக செயலாளர், தலைவர் கலைஞரின் புலிப்போத்து, 89ல் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், மீண்டும் 96லும் அங்கே வெற்றி பெற்று கழக அரசின் கொறடா வாக பொறுப்பு வகித்தவர்,
89 சட்டமன்ற தேர்தலில் பணபலத்தால் தேர்தலை எதிர்கொண்ட ஆர்எம்.வீ யை தன்னுடைய தொண்டர்கள் பலத்தால் வெற்றி கொண்டவர். 
91ல் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும் கழகம் அறிவித்த வேட்பாளர் மட்டையம்பட்டி விஎன்.மணி அவர்களுக்காக சுற்றி சுழன்று பணியாற்றியவர். கெடுவாய்ப்பாக அன்றைய சூழலில் ராஜீவ் மரணத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழல் கழக வேட்பாளரின் வெற்றியை பாதித்தது.
93ல் மதிமுக பிரிவினையின் போதும் கழகத்தை கட்டிக்காத்த பெருமை அமரர் பெரியண்ணன் அவர்களுக்கு உண்டு.
96 தேர்தலில் வெற்றிபெற்று கழக அரசின் கொறடாவாக பொறுப்பு வகித்த நேரத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

வெள்ளி, 14 நவம்பர், 2025

பொன்ரார்ஜ் : பாஜகவை வீழ்ந்த தலைவர்கள் மக்களை திரட்டி தெருவிற்கு வந்து போராட வேண்டும்.

 Vimalaadhithan Mani  : விஞ்ஞானி பொன்ராஜ் சொல்லும் தீர்வு இதுதான்..
#பாஜக + தேர்தல்ஆணையத்தின் கூட்டணியை வீழ்த்த விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் கடந்த ஆறுமாதமாக எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தும் தீர்வு இது தான்..
ராகுல்காந்தி வாக்கு திருட்டை வெளிப்படுத்துவதால் மட்டும் மாற்றம் பாஜகவை தோற்க்கடிக்க முடியாது..
ராகுல் காந்தியும் // பல மாநில கட்சி தலைவர்கள் தனிதனியாக போராடூவதால் பாஜகவை தோற்கடிக்க முடியாது..
உச்ச நீதிமன்றத்தில் வாக்கு திருட்டு மற்றும் S.I.R. உள்ளிட்டவற்றை எடுத்து சென்றாலும் கிடப்பில் போடப்படும். அதனாலும் பாஜகவை வீழ்த்த முடியாது..

பீகார் தில்லுமுல்லு .. ஸ்டாலின் ஆய்வரங்கம் .. வெளியாகும் 2 அதிரடி அறிவிப்புகள்!

 மின்னம்பலம் :  பீகார் தேர்தல் ரிசல்ட் தெறித்தனமான இருக்கே.. பாஜக- ஜேடியூ கூட்டணி அமோகமாக அறுவடை செஞ்சிருக்கு.. ராகுல் அவ்வளவு நீச்சலடிச்சு பிரசாரம் செஞ்சும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட்தான்.. பாவம்யா.. ராகுலுடன் சேர்ந்த தேஜஸ்வியின் ஆர்ஜேடியும் படுபாதாள குழியில விழுந்துருச்சே..
சரி.. பரிதாப்பட்டது போதும்.. வடக்கதான் வெடி வெடிச்சுட்டாங்க.. தெக்க எங்க இடி இடிச்சது?
சொல்றேன்யா.. பீகார் ரிசல்ட் பத்தி திமுகவின் மூத்த அமைச்சர்கள், சீனியர்கள் எல்லாம் டிஸ்கஷன் செஞ்ச கையோடு சிஎம்கிட்டயும் பேசி இருக்காங்க..
இந்த ஆலோசனைகளில் பேசிய திமுக சீனியர்கள், “பீகாரில் ஆர்ஜேடி தேஜஸ்விகிட்ட காங்கிரஸ் ரொம்பவே மல்லுகட்டி அதிக சீட் கேட்டுச்சு.. காங்கிரஸுக்கு அதிக சீட் கொடுத்தா தோல்வி கன்பார்முன்னு தேஜஸ்வி ரொம்பவே பிடிவாதம் பிடிச்சும் பார்த்தாரு.. ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால 61 சீட் வாங்கி காங்கிரஸ் போட்டியிட்டுச்சு.. இப்ப என்னடான்னா 5 சீட்டுதான் ஜெயிச்சுருக்கு.. குழியையும் பறிச்சது இல்லாம குதிரையையும் கீழே தள்ளிவிட்ட கதையா தேஜஸ்வி கட்சிக்கும் அடி விழுந்துருக்கு.. ராகுல் காந்திக்கு இவ்வளவுதான் செல்வாக்கு போல..

சித்தராமையா பீகார் தேர்தலிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது!

 மாலை மலர்  : பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

வியாழன், 13 நவம்பர், 2025

சீனாவில் ரூ.50,000 கோடி மோசடி: லண்டனில் சிக்கிய யாடி ஷாங்!

 தினமலர் : லண்டன்: சீனாவில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிவிட்டு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணி, விரைவில் தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார்.
கடந்த 2021ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்க முயன்றார்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், அவ்வளவு பெரிய தொகையை லண்டனில் முதலீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவில்லை.
இதையடுத்து, லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத் அருகே, மாதம் 18 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து அவர் வசித்த ஆடம்பர மாளிகையில் போலீசார் சோதனை நடத்தினர்.

பீகாரில் தேஜஸ்வி ஆட்சி அமைக்கிறார்! அடித்து சொல்கிறார் தேஜஸ்வி

 மாலை மலர்  :  பாட்னா  பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

கொழும்பு கொலையில் யாழ்ப்பாண போதைப்பொருள் கடத்தல் குழு தொடர்பு! கைக்குண்டு வாள் அகப்பட்டது

ceylonmirror.net  : வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகக் கைது – நேற்றும் இருவர் வாள், கைக்குண்டு, ஹெரோயினுடன் சிக்கினர்.
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பிரபல வன்முறைக் கும்பல் ஒன்றின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட நபரும், அவரது சகாவும் நேற்று இணுவில் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேற்படி இருவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, வன்முறைக் கும்பலின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட நபரின் உடைமையில் இருந்து 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருமாவளவன் : மக்களின் குடியுரிமை பறிக்கும் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம்- Thirumavalavan Slams Election Commission and deep speech on SIR