செவ்வாய், 23 டிசம்பர், 2025

திமுகவின் ‘234 வேட்பாளர்கள்’ ரெடி.. ஸ்டாலின் அதிரடி! கூட்டணி கட்சிகள் குழப்பம்

 மின்னம்பலம் - Mathi  : முன்னாடி ஒரு ப்ளாஷ்பேக்கை சொல்றேன்.. 2014-ல் மக்களவைத் தேர்தல் நடந்தப்ப தமிழகம் வித்தியாசமான களமா இருந்துச்சு.. அதிமுக கூட்டணியில சிபிஐ, சிபிஎம் எல்லாம் அப்ப ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாங்க.. ஆனா தொகுதிகளை ஒதுக்குறதுல உடன்பாடு ஏற்படாம போச்சு.. அப்ப அதிமுக தனிச்சே போட்டியிடும்னு ஜெயலலிதா அறிவிச்சாங்க.. அந்த தேர்தல்ல திமுக ஒரு அணி, இடதுசாரி கட்சிகள் ஒரு அணி, பாஜக ஒரு கூட்டணி, காங்கிரஸ் தனித்து போட்டியிட ரொம்ப பரபரப்பா இருந்தது களம்.. கடைசியில ஜெயலலிதா 37 தொகுதிகளில் ஜெயிச்சாங்க.. அகில இந்திய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்ததாக 3-வது பெரிய கட்சியாக அதிமுக விஸ்வரூபம் எடுத்துச்சு..
ஆமாய்யா.. ரொம்ப முக்கியமான தேர்தல்தான் அது.. இப்ப எதுக்கு இந்த ப்ளாஷ்பேக்?
சொல்றேன்.. இப்ப 2026 எலக்‌ஷனும் நெருங்கிடுச்சு.. ஆனா தேர்தல் களம் அப்படி ஒன்னும் தெளிவா இல்லை…. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வருது.. எந்த கூட்டணியும் பைனலாகவும் இல்லை..



திமுக கூட்டணியில இருக்கிற காங்கிரஸ், ஐவர் குழுவை எல்லாம் அனுப்பி பேச்சுவார்த்தையை தொடங்குச்சு.. ஆனா திடீர்னு விஜய் கூடவும் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்துச்சு.. பிரவீன் சக்கரவர்த்தின்னு தனிநபர்தான் விஜய்யை சந்திச்சுருந்தாருன்னு சொல்ற காங்கிரஸ் அவரு மேல ஆக்‌ஷன் எடுத்திருக்கலாம்.. எடுக்கலையே.. ஏன்னா டெல்லியில் இருந்து கேசி வேணுகோபால் சொல்லித்தான் விஜய்யை பிரவீன் சந்திச்சதால எந்த நடவடிக்கையும் எடுக்கலை..

பாஜக கூட்டணிக்கு அதிமுக போனதாலதான் காங்கிரஸ் அதிமுகவோட பேச்சுவார்த்தை நடத்தலை.. இல்லைன்னா திமுக கூட்டணியில இருந்துகிட்டே அதிமுக, தவெகன்னு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் காங்கிரஸ்.. இதுலதான் சிஎம் ஸ்டாலின் ரொம்பவே அப்செட் ஆகிட்டாராம்..

இதை பத்தி அறிவால சோர்ஸ்களிடம் பேசுனப்ப, ”கூட்டணி பேச்சுவார்த்தையை முதல் ஆளா தொடங்குச்சு காங்கிரஸ்.. அதே ஜோரில் விஜய் கூட பேசுறாங்க.. டெல்லியில எங்க சீனியர் லீடர்ஸ் டிஆர் பாலு, கனிமொழி கிட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எல்லாம் நல்லாதான் பேசுறாங்க.. இணக்கமாத்தான் இருக்காங்க.. ஆனாலும் கூட்டணியை குழப்பிவிடுற ஆளுக மீது நடவடிக்கை எடுக்கனும்தானே.. அதை காங்கிரஸ் மேலிடம் செய்யலை.. அதனால சிஎம்-க்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும்..

இத்தனைக்கும் விஜய்யை சந்திச்சு பேசுனதை நியாயப்படுத்துறாங்க காங்கிரஸ் லீடர்ஸ்.. ‘பாஜக பக்கம் போகக் கூடாதுன்னுதான் விஜய்யை போய் பார்த்தோம்னு’ சொல்றாங்க..

அதே மாதிரி சிபிஎம் எம்.பி சு. வெங்கடேசன், விஜய்யை போய் பார்த்தாரு.. முதல்ல இப்படி ஒரு சந்திப்பே நடக்கவே இல்லைன்னாரு.. அப்புறமா, அதிமுக- பாஜக கூட்டணிக்கு தவெக போக கூடாதுன்னு விஜய்க்கு கிளாஸ் எடுத்தேன்னு சொல்றாரு சு.வெங்கடேசன்..

விஜய் தன்னை சிஎம் கேண்டிடேட்டுன்னு சொல்றாரு.. அவரு எப்படி பாஜக- அதிமுக கூட்டணிக்கு போவாரு? இவங்க விஜய்யை சந்திச்சதை நியாயப்படுத்த, எங்க கோபத்தை தணிக்க இப்படி எல்லாம் சொல்லிக்கிறாங்க..

இவங்க எல்லாம் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சந்திச்சு பேசுறதுல விஜய்யும் திமுக கூட்டணியில சிக்கல் வரும்.. காங்கிரஸ் நம்ம கூட வரும்.. காங்கிரஸ் வந்தா விசிகவும் கூடவே வரும்னு ரொம்பவே காத்துட்டு கிடக்கிறாரு விஜய்..

இப்படி தினம் ஒரு அக்கப்போரை கூட்டணி கட்சிகள் இழுத்துவிடுறாங்க..

இன்னொரு பக்கம், அதிமுகவுக்காக அதானியை பாஜக களமிறக்குது.. பீகார் மாதிரி கடைசி நேரத்துல ரூ10,000 உதவித் தொகை அறிவிப்பை பாஜக வெளியிட்டாலும் ஆச்சரியமில்லைன்னும் சொல்றாங்க..

இவ்வளவையும் கூட்டி கழிச்சு பார்த்துதான் சிஎம் தெள்ள தெளிவா ஒரு முடிவெடுத்துட்டாரு.. கூட்டணிக்குள்ள யாரு வர்றாங்க..யாரு வர்றலைன்னு எல்லாம் நாம கவலைப்பட வேண்டாம்.. 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்துவோம்னு முடிவு செஞ்சுட்டாரு..

ஏற்கனவே இண்டலிஜென்ஸ் ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு… PEN டீம் ஒரு ரிப்போர்ட் தந்திருக்கு.. சிஎம் தனியா ஒரு ஏஜென்சி மூலமாக ரிப்போர்ட் வாங்கியிருக்காரு.. இதை எல்லாம் வெச்சு 234 தொகுதிகளுக்குமே வேட்பாளர் லிஸ்ட்டை சிஎம் ரெடி செஞ்சுட்டாரு..

சிஎம்மோட இந்த லிஸ்ட்டில சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் சான்ஸ் இருக்குது.. உதயநிதிக்காக இளைஞரணி கோட்டாவும் ஒதுக்கியிருக்காரு..

234 தொகுதியிலும் நாம நிக்கிறோம்னு இறங்கி வேலை செய்யவும் சொல்லியாச்சு.. தொகுதிக்கு செலவுக்கு அனுப்ப வேண்டியதையும் அனுப்பியாச்சு.. மிச்சத்தை வேட்பாளர்கள் பார்த்துக்குவாங்க..

இப்ப நிலவரத்துக்கு 234 தொகுதிகளிலும் இறங்கிடுவோம்.. கூட்டணி பைனலாகும் போது அட்ஜஸ்மெண்ட்ஸை அப்ப பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாரு சிஎம் ஸ்டாலின்.. 2014 லோக்சபா எலக்‌ஷன்ல சோலோவா களமிறங்கி அதிமுகவை ஜெயலலிதா ஜெயிக்க வெச்சாரு இல்லையா.. அந்த மாதிரிதான் எங்க சிஎம் அதிரடியாக இறங்கிட்டாரு” என்கின்றன என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

கருத்துகள் இல்லை: