![]() |
மதுஷா : : பதுளை பேரழிவில் 14 பேரின் உயிரைக் காத்த நாய்! முன்கூட்டியே சத்தம் செய்து எச்சரிக்கை செய்தது
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில், பதுளை, மாஸ்பண்ண பகுதியில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட ‘சூட்டி’ என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று, முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து சுமார் 14 மனித உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி கனமழை பெய்துகொண்டிருந்தபோது, அந்த நாய் தொடர்ந்து ஊளையிட்டு தனது உரிமையாளரை எச்சரித்துள்ளது.
நாயின் விசித்திரமான செயல்பாட்டை உணர்ந்து வெளியில் சென்று பார்த்த வீட்டின் உரிமையாளர், மலையில் இருந்து பாறைகள் உருண்டு வரும் சத்தத்தைக் கேட்டு, உடனடியாகத் தன் குடும்பத்தினரையும், அண்டை வீட்டார்களையும் எச்சரித்துள்ளார். இதன் விளைவாக, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் இருந்து அந்தக் கிராமத்தில் வசித்த குழந்தைகள் உட்பட 14 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தப்பித்துள்ளனர். ஓய்வுபெற்ற வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி டி.எம். தென்னகோன் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக