மின்னம்பலம் -Mathi : “2026 தேர்தல் சுவரு இன்னும் எத்தனை விசித்திரங்களைத் தருமோ” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
திமுக, அதிமுகன்னு ரெண்டு பக்கமும் தேமுதிக விடாம பேசிகிட்டுதான் இருக்கு..
இந்த களேபரத்துல விஜயகாந்தின் 2-வது வருஷ நினைவு நாளை குருபூஜையா நடத்துது தேமுதிக.. இதுக்கு சிஎம் ஸ்டாலின், இபிஎஸ்-ன்னு எல்லா கட்சித் தலைவர்களுக்கும் நேரில் போய் சுதீஷ் இன்விடேஷன் கொடுத்துகிட்டு இருக்காரு..
இதுக்கு நடுவுலதான், “தேசிய ஜனநாயக கூட்டணியில எங்களுக்கு 6 சீட் மட்டுமே ஒதுக்க முடியும்னு தகவலை வெளியிட்ட கட்சி அழிந்தே போகும்னு” பிரேமலதா சாபம் கொடுக்க பரபரப்பாகிடுச்சு.
பொறுய்யா… தேமுதிக யாரோடதான் கூட்டணி வைக்குமாம்? பிரேமலதா ஏன் சாபம் விட்டாங்களாம்?
சொல்றேன்யா.. விஜயகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமானவங்ககிட்ட நாம் பேசுனப்ப, “திமுக, அதிமுக-ன்னு ரெண்டு சைடுலயும் பேசுறது உண்மைதான்.. ரெண்டு பக்கமும் டிமாண்ட் சொல்லி இருக்கிறோம்தான்..
பாஜக சைடுல இருந்து இப்ப ரீசண்ட்டா சென்னை விசிட்டுக்கு பின்னாடி யூனியன் மினிஸ்டர் பியூஷ் கோயல் பேசிகிட்டு இருக்காரு..
போன 2019 லோக்சபா எலக்ஷனப்ப கேப்டன் (விஜயகாந்த்) உடம்பு சரியில்லாம வீட்டில் இருந்தாரு.. அப்ப தமிழிசை, தமிழக பாஜக தலைவராக இருந்தாங்க.. அவங்களோட பியூஷ் கோயல், கேப்டன் வீட்டுக்கே வந்து நலம் விசாரிச்ச கையோடு அண்ணியிடம் (பிரேமலதா) கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துனாங்க.. அந்த எலக்ஷனில 4 லோக்சபா சீட் எங்களுக்கு கொடுத்தது அதிமுக..
கேப்டன் மறைந்தப்பவும் பியூஷ் கோயல், வீட்டுக்கே வந்து துக்கம் விசாரிச்சாரு.. எப்பவுமே, “கேப்டன் எங்க பழைய நண்பர்னு” சொல்வாரு பியூஷ் கோயல்..
இந்த டைம் சென்னைக்கு வந்து கூட்டணி பத்தி அதிமுகவோட பேசுன பியூஷ் கோயல் எங்களை கண்டுக்காம விட்டுட்டாருன்னு வருத்தம் இருந்துச்சு.. ஆனா, பியூஷ் கோயல் இப்ப எங்ககிட்ட கூட்டணி பத்தி பேசுகிட்டுதான் இருக்காரு.. இதுல ஹேப்பிதான்.. அதிமுகவில இருந்து சேலம் இளங்கோவனும் பேசுறாரு” என்றனர்.
அப்ப பிரேமலதா யாருக்கு சாபம் கொடுத்தாங்களாம்?
அதைப்பத்தி கேட்டப்ப, “அதிமுகவிடம் டபுள் டிஜிட் சீட், ராஜ்யசபா சீட், தேர்தல் நிதின்னு நாங்க கேட்கிறோம்.. நாங்களும் பேசிகிட்டேதான் இருக்கிறோமே தவிர எதுவும் பைனலாகாம இழுபறியாவே இருக்கு.. இப்படியான நிலையிலதான் என்டிஏ கூட்டணியில தேமுதிகவுக்கு 6 சீட்டுதான்னு ஒரு நியூஸ் வைரலாச்சு.. இதை நிச்சயமா அதிமுகதான் கசியவிட்டுருக்கும்னு நினைக்கிறோம்.. அதனாலதான் அண்ணி அப்படி சாபம் விட்டாங்க” என்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.
தேமுதிககிட்ட பேசிகிட்டே அதிமுக ஏன் அவங்களை சீண்டுதாம்?
அதுதான் எல்லோருக்கும் குழப்பம்.. இதை பத்தி அதிமுக மாஜி அமைச்சர்கள்கிட்ட பேசுனப்ப, ’ஷாக்’ தகவல்களை கொட்டுறாங்க.. அதாவது, “இப்ப எல்லாம் பொதுச்செயலாளர் (இபிஎஸ்) ரொம்ப பெருசா எங்களை மாதிரி சீனியர்ஸ்கிட்டகூட டிஸ்கஷன் செய்யுறதே இல்லை… அவருக்கு ரொம்பவே நெருக்கமான எஸ்.பி.வேலுமணிகிட்ட கூட சீரியசா எலக்ஷனை பத்தி பேசுறதும் இல்லை.. ஏதோ ஒரு டிஸ்டன்சை மெயின்ட்டெயின் பண்றாரு..
நாங்களும் என்னான்னு விசாரிச்சா, பொதுச்செயலாளர் மனைவி, நம்பிக்கையான ஒரு ஜோசியர்கிட்ட ஜாதகம் பார்த்தாங்களாம்.. அந்த ஜோசியர், “பொதுச்செயலாளருக்கு ஹஸ்தம் நட்சத்திரம்.. கன்னி ராசி.. விபரீத ராஜயோகம் வரும்”னு உறுதியாக சொல்லி இருக்காரு.. அதாவது எப்படியாவது பொதுச்செயலாளர் சிஎம் ஆகிடுவாருன்னு சொல்றாராம் ஜோசியர்.
இதை முழுசாவே நம்புறாரு எங்க பொதுச்செயலாளர்..
அதனால எங்ககிட்ட மட்டுமில்ல பாஜக, தேமுதிக, பாமகன்னு கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஒருவிதமா அசால்ட்டாதான் டீல் செய்யுறாரு.. உதாரணமா, தேமுதிக தரப்புல இருந்து என்ன என்ன டிமாண்ட் வெச்சாங்கன்னு சேலம் இளங்கோவன், பொதுச்செயலாளர்கிட்ட அண்மையில சொன்னாரு.. அப்ப கூட, “அப்படியா, பார்க்கலாம்… பார்க்கலாம். அவங்க எங்க போவாங்க.. நம்மகிட்டதான் வருவாங்க.. வரும் போது பார்க்கலாம்”னு ரொம்பவே அசால்ட்டாதான் சொன்னாரு” என அடுக்கி வைக்கிறாங்க..
ஓஹோ.. திமுகவோட தேமுதிக நடத்துன பேச்சுவார்த்தை என்னாச்சாம்?
தேமுதிககிட்ட திமுக ரொம்ப காலமாகவே பேச்சுவார்த்தை நடத்திகிட்டே இருக்கு.. 15 சீட், ராஜ்யசபா சீட், எலக்ஷன் நிதின்னு எல்லாமும் பேசிகிட்டு இருக்காங்க.. டிஸ்கஷன் செய்யுறாங்க..
ஆனால் திமுககிட்ட தேமுதிக வைக்கிற டிமாண்ட்தான் ரொம்பவே ஷாக்கிங்கா இருக்காம்.. அதான் இழுபறியா இழுத்துகிட்டு போகுதாம்..
அப்படி என்னப்பா திமுககிட்ட ஷாக்கிங் டிமாண்ட் வைச்சதாம் தேமுதிக?
இதைபத்தி அறிவாலய சோர்ஸ்களிடம் விசாரிச்சப்ப, “இத்தனை வருஷ திமுக வரலாற்றுல எலக்ஷன் சீட், எலக்ஷன் நிதி, வாரிய பதவின்னுதான் கூட்டணி கட்சிகள் பொதுவா டிமாண்ட் வெச்சிருக்கு.. எங்க வரலாற்றுலயே இப்பதான் சார் முதல் முறையாக ‘கட்ட பஞ்சாயத்து பேசனும்’னு ஒரு டிமாண்ட்டை கேட்குறோம்..
அதாவது, போன மே மாசம் ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் காலேஜை பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் கல்வி குரூப்ஸ்க்கு விஜயகாந்த் பேமிலி வித்துட்டாங்க.. இதுக்காக ஒயிட்லயே ரூ.150 கோடி வாங்கினாங்க.. அது இல்லாம பிளாக்குலயும் ரூ20, 30 கோடி வரைக்கும் வாங்கி இருக்காங்களாம்..
இந்த டீலிங்கில விஜயகாந்த் குடும்பத்துக்கு இப்ப திடீர்னு திருப்தி இல்லையாம்.. அதனால ஆளும் கட்சியான திமுக தலையிட்டு, தனலெட்சுமி குரூப்கிட்ட பேசி இன்னும் கொஞ்சம் கூடுதலா அமெளண்ட் வாங்கித் தரனும்னு சொல்றாங்க..
அதே மாதிரி சுதீஷ் பெருந்தொகையான பணத்தை ஜாயிண்ட் வென்ச்சரா ஒரு இடத்துல முதலீடு செஞ்சிருக்காரு.. அந்த ஜாயிண்ட் வெச்சர் பார்ட்னர், நஷ்டம்னு எஸ்கேப்பாகிட்டாரு.. அவருகிட்டு இருந்தும் திமுகதான் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை வாங்கி தரனும்னும் சொல்றாங்க..
இப்படி எல்லாம் விசித்திரமா டீலிங், டிமாண்ட் பேசுறதால எங்க கட்சி தலைமையும், என்ன சொல்றதுன்னு தெரியாம ரொம்பவே யோசிச்சுகிட்டே இருக்காங்க” என சொல்வதாக ஷேர் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக