தினமணி : தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் என்ன நிலவரம்?
தொடர்ந்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்து மாநில அளவிலான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 6,41,14,587
எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான வாக்காளர் எண்ணிக்கை: 5,43,76,755
தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை: 97,37,832
தற்போது உள்ள வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள்: சுமார் 2. 77 கோடி
ஆண் வாக்காளர்கள்: சுமார் 2. 66 கோடி
மூன்றாம் பாலினம்: 7,191
மாற்றுத் திறனாளிகள்: சுமார் 4.19 லட்சம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக