செவ்வாய், 23 டிசம்பர், 2025

காங்கிரஸிடம் நேரடியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்! காங்கிரஸ் தவேக ரகசிய பேச்சு வார்த்தை!

 tamil.oneindia.com -Rajkumar R  : சென்னை: பிரதமர் மோடிக்கு எதிரான தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 
இதன் ஒரு பகுதியாக, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் புதிய அரசியல் வியூகங்களை காங்கிரஸ் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. 
இந்த சூழலில்தான், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளியான தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து, விஜய் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது.



இதன் காரணமாகவே, காங்கிரஸ் மேலிடம் நடிகர் விஜயுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகளை தென்னிந்திய அரசியலுக்கான பொறுப்பாளராக இருக்கும் பிரியங்கா காந்தி முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vijay tvk Congress
விஜய் தவெக

இதற்கிடையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 2026 தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, காங்கிரஸுக்கு சுமார் 70 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த கோரிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் வழங்கிய தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகள் வழங்க முடியாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு திமுக உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஆட்சியில் பங்கு கொடுக்கும் அளவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாது என்பதே திமுக தலைமையின் நிலைப்பாடு என கூறப்படுகிறது. இதனால், திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பலரும் பேச தொடங்கியுள்ளனர்.

Recommended For You
லீக்கான மேட்டர்.. மோப்பம் பிடித்த உளவுத்துறை! விஜய் மீட்டிங் ப்ளானை கேன்சல் செய்த காங்கிரஸ் புள்ளி!
தவெக கூட்டணி

இந்த சூழலில்தான், காங்கிரஸ் கட்சி புதிய முடிவுகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தென்னிந்திய அரசியலை பிரியங்கா காந்தி கவனிக்க வேண்டும் என்றும், வட இந்திய அரசியலை ராகுல் காந்தி கவனிக்க வேண்டும் என்றும் பொறுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகே, நடிகர் விஜயுடன் பேச்சுவார்த்தை வேகமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் - காங்கிரஸ்

விஜய் - காங்கிரஸ் கூட்டணி உருவானால், தமிழகத்தில் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களிலும் அதன் தாக்கம் இருக்கும் என காங்கிரஸ் நம்புகிறது. விஜய்க்கு அந்த மாநிலங்களிலும் ரசிகர்கள் இருப்பதால், அது தேர்தல் அரசியலில் உதவியாக இருக்கும் என்ற கணக்கீடும் செய்யப்படுகிறது. மேலும், விஜய் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் மட்டுமல்லாமல், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என வெளிப்படையாக பேசிவருவதாகவும் கூறப்படுகிறது.
பிரியங்கா காந்தி

இந்த நிலையில், சில தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும், வலுவான கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கூட இருப்பதாக கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, திமுகவுடன் தொடர்வதை விட, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பதே காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் என்ற முடிவுக்கு பிரியங்கா காந்தி வந்துள்ளதாக பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை: