tamil.oneindia.com -Nantha Kumar R : சென்னை: இந்தியாவிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக தமிழகத்தில் தான் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முழு டேட்டா பின்வருமாறு:
தமிழகத்தில் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. ‛சார்' விண்ணப்ப படிவங்களை பூர்த்தியிட்டு டிசம்பர் 14ம் தேதி வரை வழங்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.
sir election commission tamil nadu
இதையடுத்து இன்று மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இதுதொடர்பாக அவர்,‛‛வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மாநிலம் முழுவதும் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15.18 சதவீதம் ஆகும்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு முன்பாக மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 என்ற அளவில் உள்ளது'' என்று கூறினார்.
Recommended For You
வரைவு வாக்காளர் பட்டியலில்.. பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? தெரிஞ்சுக்கோங்க!
முன்னதாக ‛சார்' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையின் படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் ‛சார்' நடவடிக்கைக்கு முன்பு 7.6 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.08 ஆக குறைந்தது.
அதேபோல் பாஜக ஆளும் ராஜஸ்தானில் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இங்கு மொத்தம் 5.46 கோடி பேர் வாக்காளர்களாக இருந்த நிலையில் தற்போது 5.04 கோடி பேர் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் கோவாவில் 1.42 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் கோவாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11.85 லட்சத்தில் இருந்து 10.84 லட்சமாக சரிந்துள்ளது.
இதுதவிர பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆளும் புதுச்சேரியில் 1.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை எடுத்து கொண்டால் அங்கு மொத்தம் 10.21 லட்சம் வாக்காளர்கள் இருந்தன. இப்போது 9.18 லட்சம் வாக்காளர்களாக குறைந்துள்ளது.
லட்சத்தீவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 56,384 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 57,813 ஆக வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.லட்சத்தீவில் 1,500 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
You May Also Like
BIG NEWS: நாட்டிலேயே அதிகமாக.. தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
அதற்கு முன்பாக பீகாரில் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தது. அதன்படி பார்த்தால் 2025ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் தமிழகத்தில் தான் அதிக வாக்காளர்கள் (97. 37 லட்சம் பேர்) நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக