திங்கள், 29 டிசம்பர், 2025

எல்லை மீறும் காங்கிரஸ் தலைகள்? கோபப்பட்ட ஸ்டாலின்? அதே தவறை செய்யும் ராகுல்?

 tamil.oneindia.com - Shyamsundar :  சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பல மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்து இருக்கிறார். உள்ளூர் தலைவர்கள் தனிக்காட்டு ராஜாக்கள் போல செயல்பட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கே காரணமாக மாறி உள்ளனர்.
இப்போது தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனி தனி தீவுகளாக செயல்பட தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ் மீது ஸ்டாலின் கொஞ்சம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கேட்ட இடங்களின் எண்ணிக்கையையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்திய தேசிய காங்கிரஸின் தொழிற்துறை பிரிவுத் தலைவராகவும், அக்கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறியதையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.


தொகுதி பங்கீட்டில் மோதல்

சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார உத்திகளை வகுப்பதில் பிரவீன் சக்கரவர்த்தி முக்கியப் பங்காற்றினார். முக்கியமாக தற்போது ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்திக்கு தகவல்களை திரட்டியதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

குறிப்பாக, தரவு மற்றும் அரசியல் பகுப்பாய்வு தொடர்பான விஷயங்களில் ராகுல் காந்தியின் முக்கிய ஆலோசகராக அவர் கருதப்பட்டார். எனினும், கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் அவரது செயல்பாடுகள் கட்சிக்குள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தி உள்ளார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் விஜயை பாராட்டும் விதமாக பிரவீன் சக்ரவர்த்தி போஸ்ட் செய்திருந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் சந்திப்பு நடத்தி உள்ளனர். இதில் கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இவர் மீது காங்கிரஸ் ஆக்சன் எடுக்கவில்லை. காங்கிரசின் இந்த செயல் ஸ்டாலினை கோபப்படுத்தி உள்ளதாம். குறைந்தபட்சம் அவருக்கு கண்டனமாவது தெரிவித்து இருக்கலாம். ஆனால் அதைக்கூட செய்யவில்லை என்று காங்கிரஸ் மீது ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறாராம்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் கடன் அதிகமாக வைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தின் நிலுவை கடன், தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் கடன், உ.பி-யைவிட 2 மடங்கு அதிகம்.

இந்திய மாநிலங்களில் வட்டி சுமை அதிகமாக கொண்ட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடன்/ உள்நாட்டு உற்பத்தி, கொரோனா காலத்தை விட அதிகமாக உள்ளது தமிழ்நாட்டின் கடன்சுமை கவலைக்குரியது" எனத் தெரிவித்துள்ளார். இவரை ராகுல் காந்தி கட்டுப்படுத்த தவறியது.. தொடர்ந்து இவருக்கு கடிவாளம் போடாமல் இருப்பது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் மீது ஸ்டாலின் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்டாலினை கோபப்படுத்த 70 சீட்டுகள்

ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ராகுல் காந்தியின் ரைட் ஹேண்ட் போல செயல்படுகிறார் . இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கம். இவர் ஏற்கனவே ஸ்டாலினை தனியாக சந்தித்துள்ளார். ஸ்டாலினுடன் தனி ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையில்தான் அவர் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்துள்ளாராம்.

கடந்த சில ஆண்டுகளில் தங்கள் கட்சி வலுப்பெற்று, செல்வாக்கு உயர்ந்துள்ளதால், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். இம்முறை சுமார் 70 தொகுதிகளை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்; முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. கிரிஷ் சோடங்கர் இதை நேரடியாக ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். காங்கிரஸ் இவ்வளவு தொகுதிகளை கேட்டதை ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கிரிஷ் சோடங்கர் ஸ்டாலின்

தேர்தலில் வெற்றி பெற்றால், மாநில ஆட்சியில் அதிகாரப் பங்கீடு வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது. வலுவான காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் மக்களை ஈர்ப்பதோடு, சமச்சீரான ஆட்சிக்கு வழிவகுக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். இது, வெறும் துணைப் பங்காளியாக இல்லாமல், முக்கிய சக்தி என்ற காங்கிரஸின் இலக்கை உணர்த்துகிறது. தவெக ஆட்சியில் பங்கு தர தயாராக இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதமாக கிரிஷ் சோடங்கர் இப்படி கேட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்டாலின் இதை விரும்பவில்லை, அவர் கோபப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஸ்டாலின் கோபம்

காங்கிரஸின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தாலும், எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. திமுக தனது தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்த பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் இவை நடக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி உறுதியாக இருப்பதாக இரு கட்சிகளும் பொதுவெளியில் தெரிவித்தாலும், அதிக இடங்கள், அதிகாரப் பங்கீடு கோரிக்கைகள் பேச்சுவார்த்தைகளை சவாலாக அமையலாம். தமிழகத்தின் பெரிய கூட்டணி முக்கியமான தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், வரும் வாரங்களில் தீவிரமான பேரம்பேசல்கள் நடக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
லிஸ்ட் ரெடி

இதனால் காங்கிரசுக்கு திமுக யார் என்று காட்டும் விதமாக ஸ்டாலின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளாராம். ஏற்கனவே உளவுத்துறை, pen அமைப்பு மூலம் எடுக்கப்பட்ட லிஸ்டை வைத்து வேட்பளார்களை தேர்வு செய்து பணிகளை தொடங்க உள்ளாராம். இதை பார்த்து காங்கிரஸ் இறங்கி வந்தால் வரட்டும்.. இல்லையென்றால் பார்த்துக்கொள்ளலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். காங்கிரஸ் மட்டும்தான் இறங்கி அடிக்குமா.. நாங்களும் இறங்கி அடிப்போம் என்று

கருத்துகள் இல்லை: