tamil.oneindia.com - Shyamsundar I : சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திடம் (திமுக) காங்கிரஸ் கட்சி உறுதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
கணிசமான பிரதிநிதித்துவம் கோரும் காங்கிரஸ், மூன்று விதமான பார்முலாக்களை முன்மொழிந்துள்ளது. இதை கேட்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் அமைத்த ஐந்து பேர் கொண்ட குழு, கடந்த புதன்கிழமை, திமுக தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது. இதில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த தலைவர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ராகுல் காந்தியின் ரைட் ஹேண்ட் போல செயல்படுகிறார். இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கம். இவர் ஸ்டாலினை தனியாக சந்தித்துள்ளார். ஸ்டாலினுடன் தனி ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையில்தான் அவர் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்துள்ளாராம். திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த ஐவர் குழு சந்திப்பு, மரியாதை நிமித்தமானது எனத் தெரிவிக்கப்பட்டாலும், 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் குறித்தே முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளில் தங்கள் கட்சி வலுப்பெற்று, செல்வாக்கு உயர்ந்துள்ளதால், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர்.
காங்கிரஸ் 3 பார்முலா
காங்கிரஸ், மூன்று விதமான பார்முலாக்களை முன்மொழிந்துள்ளது. இதை கேட்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம். 75 சட்டமன்றத் தொகுதிகள்; அல்லது 40 தொகுதிகளுடன் அமைச்சரவைப் பதவிகள்; அல்லது 30 தொகுதிகளுடன் ஐந்து மாநிலங்களவை இடங்கள்.
இக்கோரிக்கை, தமிழக அரசியலில் நிலைபெறவும், திமுக கூட்டணியின் மூலம் தனது இருப்பைப் பலப்படுத்தவும் காங்கிரஸின் திட்டத்தை வெளிப்படுத்துகிறது. 75 தொகுதிகள் காங்கிரஸை முக்கிய காட்சியாகும் அல்லது 40 தொகுதிகள் மற்றும் அமைச்சரவைப் பதவிகள் சட்டமன்ற, நிர்வாக அதிகாரங்களைச் சமநிலைப்படுத்தும். திமுக பெரிய எண்ணிக்கையை மறுக்கும் பட்சத்தில், 30 தொகுதிகளுடன் 5 மாநிலங்களவை இடங்கள் மாற்றுத் திட்டமாகும்.
திமுக தலைவர்கள் இக்கோரிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் திமுக தலைவர்கள் யாருக்கும் மேற்கண்ட 3 பார்முலாவிலும் விருப்பம் இல்லை. 75 தொகுதிகள் வழங்குவது காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தைப் பலவீனப்படுத்தும் என்று சிலர் கருத, அதிக இடம் கொடுத்தால் நாம் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்று நினைக்கிறார்கள். இக்கோரிக்கைகள், கூட்டணி இத்தகைய அழுத்தத்தில் நீடிக்குமா என்ற விவாதங்களைத் தூண்டிவிட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி 75 இடங்களை வாங்கி, 60 இடங்களை வென்றால் சமயத்தில் எதிர்க்கட்சி ஆகும் வாய்ப்பு (அதிமுக குறைவாக வெல்லும் பட்சத்தில்) கூட நமக்கு வரும் இது மாநிலத்தில் நாம் புதிய பலம் பெற உதவும் என்று "சிலர்" நினைக்கிறார்கள்.
இறுதி ஒப்பந்தம் வெறும் தொகுதிக் கணக்கீடுகளைத் தாண்டி, சாதி, பிராந்திய பலம், தேர்தல் கணக்கீடுகள், கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கு போன்ற பல காரணிகளாலேயே வடிவமைக்கப்படும் எனப் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 2026 நெருங்குவதால், அடுத்த வாரங்களில் பேச்சுவார்த்தைகள் தீவிரமாகும். தற்போது, காங்கிரஸின் கோரிக்கைகள் பேரம்பேசும் ஆயுதமாகவே உள்ளன; பந்து திமுகவின் கைகளில் உள்ளது.
தவெகவை வைத்து காங்கிரஸ் பூச்சாண்டி காட்டுவதால் விரைவில் இதில் திமுக முக்கிய முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக