![]() |
ராதா மனோகர் : எமில் சவுந்தரநாயகம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தளம் அமைக்க முயற்சித்த வரலாறு!
Emil Savundranayagam அமெரிக்க கொரியா போர் காலத்தில் (Korean War (25 June 1950 – 27 July 1953)
சீனாவுக்கு பெற்ரோலியம் விற்கும் வியாபாரியாக தோன்றினார் .
உண்மையில் இவர் அமெரிக்க ஏஜெண்டாக செயல்பட்டு சீனாவை ஏமாற்றினார்.
சீனாவிற்கு பெற்ரோலியம் கிடைத்து விட கூடாது என்ற நோக்கத்தில் அமேரிக்கா இவரை பயன்படுத்தியது.
இரண்டு தடவைகள் இவர் சீனாவிடம் பணத்தை பெற்று சீனாவை ஏமாற்றினார்
இவரின் போலி பெற்றோலிய கம்பனிகள் மூலம் வாங்க சீனா முயன்றது!
எமில் சவுந்தர நாயகத்தை ஒரு உண்மையான பெற்றோலிய வியாபாரியாக சீனா நம்பியதற்கு இவரின் அமெரிக்க பின்னணியை காரணம்.
இதன் மூலம் எப்படியும் சீனாவிற்கு கிடைத்து விடக்கூடாது என்ற அமெரிக்க நோக்கத்தை நிறைவேற்றினர்
இந்த சம்பவத்தின் மூலம் இவருக்கு அமெரிக்க அரசு மட்டத்தில் இருந்த செல்வாக்கை புரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில்தான் இவரின் யாழ்ப்பாண அமெரிக்க தளம் பற்றிய செய்தி கவனம் பெறுகிறது.

எமில் இங்கிலாந்தில் இருந்த காலங்களில் அமெரிக்க தூதுவர்களோடு இது பற்றி பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார்.
இறுதியில் இவரது கோரிக்கையை என்ன காரணத்தாலோ அமெரிக்க அரசு ஏற்று கொள்ளவில்லை
எமில் சவுந்தரநாயகத்தின் மனைவி வழியில் உள்ள நிலத்தையும் இதற்காக தருவதற்கு தயாராக இருந்தார்.
ஆகவே அந்த அளவுக்கு இந்த பேச்சு வார்த்தை கணிசமான அளவு முன்னேறி இருக்க வாய்ப்புள்ளது.
இது பற்றி ஒரு இணையத்தில்
Emil Savundra's journey from a Tamil family in colonial Ceylon to a visionary with aspirations to establish a US airbase in Jaffna is a tale of ambition and strategic foresight. Despite facing rejection from the Royal Air Force during World War II, Savundra's determination remained unshaken.
Had the airbase been established, it could have served as a cornerstone for Sri Lanka's membership in the Indo-Pacific alliance. Such an alliance would have bolstered regional security and cooperation, countering emerging threats and challenges in the region. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்போது யாழ்ப்பாண பலாலி விமான தளத்தில் அமெரிக்க விமானப்படை விமானம் இரண்டு அல்லது மூன்று தடவைகள் வந்து இறங்கி உள்ளதாக தெரிகிறது.
இது நிவாரண பணிகளுக்கானது என்று கூறப்படுகிறது.
ஆனாலும் இவை உரிய அனுமதியை பெறாமல்தான் வந்து இறங்கியதாக ஒரு உறுதி படுத்த படாத செய்தி உலா வருகிறது!
மேலும் எமில் சவுந்தரநாயகத்தின் ஏராளமான உயர்மட்ட மோசடிகள் ஊழல்கள் காரணமாக அமெரிக்க இவரது யோசனையை புறக்கணித்திருக்க வாய்ப்புள்ளது .
பிற்காலத்தில் இந்த யோசனையை புறக்கணித்தது தவறு என்று அமெரிக்க கருதி இருக்கவும் கூடும்
குறிப்பாக எழுபதுகளில் சோவியத்தின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு காலங்களில் இதன் தேவை பற்றி மீண்டும் கவனம் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. என்றும் அந்த இணையத்தில் குறிப்பிட பட்டுள்ளது.
Emil Savundranayagam! 6 July 1923
Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam
இலங்கையை சேர்ந்த திரு எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய அந்த காலத்து உலகமகா கில்லாடியின் கதை
இவரை பற்றிய பெருமை மிகு வீராவேச கதைகளை பலரும்
கூறுவதை சிறு வயதில் கேட்டிருக்கிறேன் .
அவை எல்லாம் ஒரு கிராமத்து பேச்சு வழக்கு போல இருந்தது .
யாரவது ஒரு புத்திசாலியை அவன் ஒரு எமில் அவன் ஒரு எமில் சவுந்தரநாயகம் என்ற ஒரு புகழ் வசனமாக இருந்தது. ஆனால் யாரும் அதை பற்றி முழுமையாகவோ விரிவாகவோ கூறுவதில்லை. பலருக்கும் அதுபற்றி முழு விபரமும் தெரிந்திருக்கவில்லை.
எந்த ஊடகமும் தமிழில் எழுதவே இல்லை. ஒரு ஈழத்தமிழிழர் இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறாரே?
ஏன் ஒருவருக்கும் அதுபற்றி சரியாக தெரியவில்லை? எவ்வளவு முக்கியமான ஒரு வரலாறு பற்றி ஏன் ஈழத்தமிழ் ஊடகங்கள் ஒன்றுமே எழுதவில்லை என்று சிந்தித்தேன். .
இது தமிழ் ஊடகங்களுக்கே உள்ள ஒரு பொறுப்பற்ற தன்மைதான் .
வெறும் வெற்று கோஷங்களும் நுனிப்புல் மேய்ச்சலுமே தமிழ் ஊடகங்களின் ..குறிப்பாக இலங்கை தமிழ் ஊடகங்களின் வரலாறாக இருக்கிறது .
அதன் வெளிப்பாடுதான் ஈழத்தமிழர்களின் அரசியல் கருத்துக்கள் பலவும் ஒரு நுனிப்புல் மேய்ச்சல் விவகாரமாகவே இருக்கிறது .
எந்த கிரிமினலையும் அவனது கிரிமினல்தனத்தை ஒரு கதாநாயக பாவத்தோடு கொண்டாடும் மனோபாவம் வளர்ந்தது .
எமில் ஒரு மோசமான குற்றவாளி . ஆனால் சிறுவயது முதலே அவரை ஒரு பெரிய கதாநாயகன் போன்றுதான் நான் கேள்வி பட்டிருக்கிறேன்.
எமில் சவுந்தரநாயகம் கொஞ்சம் பிந்தி பிறந்திருந்தால் தலைவனாகி இருப்பான் . மக்களும் போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே என்று கொண்டாடி இருப்பார்கள்.
ஏனெனில் இலங்கையின் வரலாற்றில் வேறெந்த மனிதரின் சாகச தில்லுமுல்லுகளை விட பல மடங்கு அதிக தில்லாலங்கடி எல்லாம் அறுபதுக்கு முன்பே எமில் சவுந்தரநாயகம் என்ற ஈழத்தமிழர் அரங்கேற்றி உள்ளார் .
கெட்டவன் என்றாலும் அவன் கெட்டிக்காரன் என்ற அடிமை மனோபாவம்தான்
ஏனெனில் எமில் சவுந்தரநாயகம் ஈழத்தமிழ் மக்களால் அந்த காலத்தில் மறைமுகமாக ஒரு கதாநாயகன் போன்றே கருத்தப்பட்டார் .
அந்த மனோபாவத்தில் இருக்கிறது அத்தனை கோளாறுகளும்.
இவர் ஐம்பது அறுபதுகளில் ஐரோப்பாவையும் கடந்து உலகையே கலக்கிய ஒரு மோசடிக்காரன்
இவரது முழுபெயர் ( Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam ).இவரது மனைவி பெயர் புஷ்பம் .இவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்ததாக தெரிகிறது .. இவரின் மோசமான நடவடிக்கைகளால் இவரது குடும்பம் வாழ்க்கை முழுவதுமே தலைமறைவாக வாழவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அன்றைய பிரித்தானிய யுத்த அமைச்சர் ஒரு பெண் உளவாளியோடு தொடர்பு கொண்டிருந்தமையால் பிரித்தனிய அரசே கவிழ கூடிய நிலை உருவானது , அந்த பெண் உளவாளி எமில் சவுந்தர நாயகத்தில் பணத்தில் பிரித்தானிய அமைச்சரை வேவு பார்த்ததாக நம்பபட்டது, அதில் அந்த அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார், எமில் தப்பி விட்டார்,
இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது 24 வயது நிரம்பிய எமில் சவுந்தர நாயகம் அங்கு வர்த்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் .ஆனால் அதில் வெற்றி பெறமுடியவில்லை, அந்த இளம் வயதிலேயே இவருக்கு சர்க்கரை நோய் தாக்கியது, நிரந்தரமாகவே இன்சுலின் பாவிக்கும் அளவுக்கு சர்க்கரை நோய்க்கு ஆட்பட்டிருந்தார். பிரிட்டிஷ் விமான படையில் சேர்வதற்கு முயற்சித்தார். இரண்டாவது உலக யுத்தம் காரணமாக அது கைகூடவில்லை.
அக்காலகட்டத்தில் கொரியா யுத்தம் நடந்தது , சீனாவின் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை அமுலில் இருந்தது, சீன பொருளாதரத்தை சீரழிக்கும் அமெரிக்க முயற்சியில் எமில் சவுந்தர நாயகத்தின் டம்மி கம்பனி ஈடுபட்டது.
சீனாவுக்கு பெற்றோலிய எண்ணைய் ஏற்றுமதி செய்யும் போலி கம்பனி ஒன்றை தனது அமெரிக்க தொடர்புகள் மூலம் உருவாக்கினார் .சீனாவை ஏமாற்றி பெரும் தொகையான பணத்தை பெற்றுக்கொண்டார்.
இல்லாத ஆயிலுக்கு பணம் அனுப்பி ஏமாந்தது சீனா. இந்த விதமான நடவடிக்கைகள் ஒரு தடவையோடு மட்டும் நிற்கவில்லை என்பதுதான் இதில் வேடிக்கை.
இதன் பின்
1954 இல் அரிசி ஏற்றுமதி மோசடியில் அகப்பட்டு பெல்ஜியத்தில் சிறை தண்டனை பெற்றார் . இல்லாத அரிசியை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் இருந்து இலகுவாக வெளியே வந்தார்,
இவர் எப்பொழுதும் பல சக்தி வாய்ந்த பிரமுகர்களை தனது லஞ்சத்தால் கையில் வைத்திருந்தார், இவரது உள்வட்டதில் ஐரோப்பிய அரசியல் பொருளாதார பிரமுகர்கள் மட்டுமல்லாமல் வத்திகான் வரை அங்கத்தினர் இருந்தனர்.
1958 இல் மீண்டும் இவர் தலைதூக்கினர், இந்த தடவை இவர் ஆபிரிக்க நாடான கானாவின் குடியரசு தலைவரின் நண்பரானார் .
ஏராளமான ஊழலில் திளைத்திருந்த அன்றய கானாவின் முழு கனிம வளங்களையும் ஒரு போலி கம்பனியின் பெயரில் மொத்தமாக எழுதி வாங்கினர்.
அதில் ஒரு பகுதி வெற்றியை பெற்று அங்கிருந்து திருப்பி அனுப்பட்டார், அவர் அங்கு இருப்பது அந்நாட்டு தலைவர்களுக்கு மிகபெரும் அரசியல் பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என்ற ஒரே காரணத்தால் அவர் அதில் தப்பினார்.
இவரது அடுத்த மோசடி கோஸ்டா ரீகாவில் அரங்கேறியது.
1959 இல் கோஸ்டா ரிக்காவில் ஏராளமான காப்பி கொட்டைகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசாங்கம் திணறி கொண்டிருந்தது .கோஸ்டா ரிக்காவின் பொருளாதார சிக்கலில் சவுந்தரவின் திருட்டு புத்திக்கு வேலை இருந்தது, அந்த நாட்டுக்கு பொய்யான வாக்குறுதிகள் போலியான கம்பனி மூலம் முதல் தொகையை கொடுத்து சிறு அளவிலான காப்பியை வாங்கினார்.
சவுந்தர நாயகத்தின் கம்பனியை நம்பிய கோஸ்டா ரீக்கா பெருமளவு காப்பியை கப்பலில் அனுப்பியது, கதை அவ்வளவுதான் ,
கோஸ்டா ரிக்காவின் பொருளாதாரமே ஆட்டம் கண்டது. ஆனாலும் அதில் இருந்து எமில் தப்பி விட்டார்/
இவர் 10 February 1960 இல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருந்தார்
இவர் ஒரு டாக்டர் ஒரு எஞ்சினியர் என்றெல்லாம் அறியப்பட்டவர். ஆனால் அவை எல்லாம் உலகை ஏமாற்ற இவர் புனைந்த கதை என்பது தெரியவருகிறது, விமான ஓட்டிக்கான லைசென்ஸ் வைத்திருந்தார் .
1962 இல் பிரித்தானியாவில் இவர் தொடங்கிய Fire, Auto and Marine Insurance Company என்ற இன்சுரன்ஸ் கம்பனி மூலம் மக்களை ஏமாற்றி போலி பாலிசிகளை விற்று (400,000) நான்குஇலட்சம் வாடிக்கையாளர்களை தெருவில் நிறுத்தினார்.
வழமையான இன்சுரன்ஸ் கம்பனிகளை போலல்லாது அப்பொழுதுதான் அறிமுகமாகி இருந்த கம்பியுட்டர் தொழில்நுட்பம் இவருக்கு ஒரு மோசடி வழியை காட்டியது. வாடிக்கையாளர்கள் வழமையான இன்சுரன்ஸ் கம்பனிகளிடம் நஷ்ட ஈடு பெற்று கொள்வதில் உள்ள தடைகள் கம்பியுட்டர் மூலம் இயக்கப்படும் தனது கம்பனியின் நிர்வாகத்தில் இருக்காது என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தினார் .
மிகவும் பிரபலமாக இருந்த கம்பனிகளை பின்னுக்கு தள்ளி இவரது FAM கம்பனி கொடிகட்டி பறந்தது ,
சட்டத்தில் உள்ள ஓட்டைகள் இவருக்கு கைகொடுத்தது ,
இவரது சொத்துக்களின் அன்றைய மதிப்பு 540,000 பவுன்களும் £870,000 பவுன்கள் பெறுமதியான இவரது கம்பனியின் சொத்துக்களும் இருந்தது,
இவர் மிகவும் படாடோபமாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார். ரோல்ஸ் ராய்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்கள். விலை உயர்ந்த படகு. படகோட்ட போட்டிகளில் மிகுந்த ஆசை கொண்டிருந்த எமில் ஒரு படகு ரேசில் விபத்து ஏற்பட்டு முதுகு முள்ளந்தண்டில் நோய்வாய்ப்பட்டார்.
மிகவும் பிரமாண்டமான அரண்மனை போன்ற வீடு , அந்த காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த அழகியான கிறிஸ்டீன் கீலர் போன்ற பெண்களின் சகவாசம் உயர்ந்த இடத்தில இருந்த அரசியல்வாதிகள் போன்ற பிரமுகர்களின் பார்ட்டி போன்றவற்றில் தாராளமாக செலவு செய்தார்,
இறுதியில் இவருக்கு எட்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது .. ஆனாலும் இவருக்கு ஏற்பட்டிருந்த நோயின் காரணமாக இவர் வைத்திய சாலையில் தனது இறுதி காலத்தை கழித்தார்
இவர் 21 December 1976 at age 53.வயதில் காலமானார் . ஒரு நேர்மையான மனிதராக வாழ்ந்திருந்தால் இவர் எவ்வளவோ பெரிய சாதனைகளை நிகழ்த்தி இருப்பார், அவரிடம் குடிகொண்டிருந்த மோசடி குணாதிசயங்கள் எவ்வளவு திறமை இருந்தும் கல்வி இருந்தும் இறுதியில் பலரின் வயித்தெரிச்சலை வாரி கொட்டி கொண்டு மறைந்து போனார்
இவரது வாழ்க்கை வரலாறு இன்னும் முழுவதுமாக எழுதப்படவில்லை - மீள்பதிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக