திங்கள், 29 டிசம்பர், 2025

திமுக அரசை விமர்சிப்பதா? காங். பிரவீன் சக்கரவர்த்திக்கு ஜோதிமணி எம்.பி. எதிர்ப்பு

 மின்னம்பலம் - Mathi : தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் என திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி முன்வைத்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவுகள் ஆய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.


இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் தமிழ்நாடு என திமுக அரசை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார் பிரவீன் சக்கரவர்த்தி. இது மிகப் பெரிய விவாதப் பொருளாகி உள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தியின் இக்கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி. ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு பிரவீன் சக்கரவர்த்தி கருத்து தெரிவிப்பது சரியானது அல்ல என்றும் ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

மேலும், “ தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்கள், கல்வி- சுகாதாரம்- தொழில்துறை முதலீடு- சமூக நீதி- நகர்ப்புற கட்டமைப்பு உள்ளிட்டவைகளுக்குதான் பயன்படுத்தப்பட்டுள்ளன. புல்டோசர் ராஜ்ஜியமான உ.பி.யுடன் தமிழ்நாட்டை எப்படி ஒப்பிட முடியும்? தமிழ்நாடு மிகவும் முன்னேறி உள்ளது; தமிழ்நாட்டை நாமே ஏமாற்றக் கூடாது எனவும் ஜோதிமணி எம்.பி. கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: