ஞாயிறு, 14 டிசம்பர், 2025

ஆர்.எஸ்.பாரதி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்!

 மின்னம்பலம் - கவி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான காலஅவகாசம் நாளை (டிசம்பர் 14) உடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்க திமுகவின் சட்டத்துறையும் தொண்டர்களும் தீவிரமாகப் பணியாற்றினர். கட்சி சார்பின்றி பணியாற்றினர்.



இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 19ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. சுமார் 85 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இதில் எந்தளவுக்கு என்ற உண்மை நிலவரம் தெரிந்தவுடன், அநியாயமாக நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை பெற்றுத் தருவதில் திமுக தீவிரம் காட்டும்” என்று கூறினார்.

மேலும் அவர், “இந்தியாவிலேயே SIR வேண்டும் என்று நீதிமன்றம் சென்ற ஒரே கட்சி அதிமுக தான். அதிமுகவில் இருந்து சிலர் திமுகவுக்கு செல்லலாமா, நடிகர் கட்சிக்கு செல்லலாமா என்ற மனநிலையில் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்ததையும், அமித் ஷா பலமுறை வந்ததையும் சுட்டிக்காட்டி பேசிய ஆர்.எஸ்.பாரதி, “இவர்களின் அத்தனை பிரச்சாரங்களுக்குப் பிறகும், எல்லா தொகுதிகளும் எங்களுக்கு கிடைத்தது.

அதனால் அமித்ஷா மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கேயே இருக்க வேண்டும். அப்போதுதான் திமுக 202 (159-இல் இருந்து) தொகுதிகளில் வெல்லும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: