இங்கு இந்தியாவின் முன்னணி விமானம் தாங்கி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன . இந்நிலையில் அந்த கடல் புறாவின் முதுகில் பொருத்தப்பட்டிருந்த வழக்கத்திற்கு மாறான அந்தக் கருவியை உள்ளூர் மக்கள் கண்டறிந்து , வனத்துறையின் கடல்சார் பிரிவுக்குத் தகவல் தெரிவித்தனர்
இது பற்றிய விசாரணையில் , இது ஒரு உளவுச் சாதனம் அல்ல , மாறாக கடல் புறாவின் இடப்பெயர்வு குறித்து ஆய்வு செய்யும் ஒரு அறிவியல் கருவி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
அந்த ஜிபிஎஸ் கருவியில் இருந்த இ-மெயில் முகவரி , சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தது . இந்த கடற்பறவை ஆர்க்டிக் பகுதி உட்பட சுமார் பத்தாயிரம் கி . மீ . தூரம் பயணித்து கர்நாடக கடற்கரைக்கு வந்துள்ளது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது
அதிகாரிகள் அந்தச் சாதனத்தில் உளவு கேமராக்கள் அல்லது பிற சந்தேகத்திற்கிடமான மென்பொருள்கள் உள்ளதா என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் . தற்போது அந்த கடல் புறா வனத்துறையினரின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறது . இதேபோன்ற ஒரு சம்பவம் நவம்பர் இரண்டாயிரத்து இருபத்து நான்கு - ல் கார்வாரில் ஒரு கழுகுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது , அதுவும் பின்னர் ஆராய்ச்சிப் பறவை என உறுதி செய்யப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக