dhinamalar : மாஸ்கோ: ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக்
-வி' ஐ, இந்தியாவில் முன்னணி மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி
ஆய்வகத்திற்கு 100 மில்லியன் டோஸ் விநியோகிக்க, ரஷ்யா ஒப்பு கொண்டுள்ளது.
இது
தொடர்பாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,
'ஸ்புட்னிக் -வி' மருந்தை, 300 மில்லியன் டோஸ் அளவு, இந்தியாவில் தயாரிக்க
ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் 100 மில்லியன் டோஸ் மருந்து
இந்தியாவில் செயல்படும் டாக்டர் ரெட்டி ஆய்வகத்திற்கு விற்பனை செய்யப்பட
உள்ளது. இதற்கான, இந்தியாவின் ஒப்புதல் பெறப்படும். இந்தியாவில், மருந்து
தரக்கட்டுபாட்டு தர ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின்னர், தடுப்பு மருந்தை
செலுத்தி பரிசோதனை செய்யப்படும். விநியோகிக்கும் பணியும் துவங்கும்.
விநியோகம் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. aljazeera.com-coronavirus
டாக்டர் ரெட்டி ஆய்வகத்தின் துணை தலைவர் ஜிவி
பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், 'ஸ்புட்னிக்-வி' மருந்தின் முதல் மற்றும்
இரண்டாம் கட்ட பரிசோதனையில் நம்பத்தகுந்த முடிவுகள் கிடைத்துள்ளன.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், 'ஸ்புட்னிக் -வி' மருந்து சிறந்த
வாய்ப்பாக இருக்கும் எனக்கூறினார்.
உலகத்தை
அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு மருந்தை கண்டுபிடிப்பதில் பல உலக
நாடுகள் தீவிரமாக உள்ளன. ஆனால், முதல்நாடாக ரஷ்யா, கொரோனாவுக்கு
'ஸ்புட்னிக்-வி' மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது. ஆனால், இந்த
மருந்து குறித்து விஞ்ஞானிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தை
வாங்குவதற்கு, ரஷ்யாவுடன் பிரேசில், மெக்சிகோ மற்றும் கஜகஸ்தான் நாடுகள்
ஒப்பந்தம் போட்டுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக