Karuppu Neelakandan :
மறைந்தவர்களுக்கு அஞ்சலி குறிப்புகளை எழுதுவதை விட மிகையாகப் புகழ்வது தமிழில் மிக ஆர்வக்கோளாறான கடும் நோய்..
சுதாங்கன் தன் வாழ்நாள் முழுவதும் பச்சை பார்ப்பனராகவும் காஸிப்
எழுத்து மனநோயாளியாகவும் ஸநாதன சந்தர்ப்பவாதியாகவுமே இருந்துவந்தவர்.
பெரியார் திடலில் வந்து ஒரு முறை
'நான் பிராமணன்தான்' ' வர்ணம்
தீட்டப்பட்டவன்தான்' என மார்பின் குறுக்காக பூணூல் அணிபவன்தான் என
சைகையில் பெருமிதத்தோடு காண்பிக்க மொத்த கூட்டமுமே அவரது அருவெறுக்கத் தக்க
அந்த ஆபாச செய்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து
மன்னிப்பு கேட்க கோரியது பிடிவாதத்தோடு மறுத்த அவரை. மதிமுக தொண்டர்களும்
திக தோழர்களும் அன்றைக்கு நாகரீகமாகவும் பாதுகாப்போடும் வெளியேற
உதவவில்லையென்றால் அவர் கதி அன்றைக்கு அதோகதிதான்.
அவர் தினமணி யில் ஹிந்துவில் ஜெயா டிவியில் வேலை பார்த்த காலத்திலும் தந்திரமாக நயவஞ்சமாகவும் பார்ப்பனியத்தை புகுத்தியபடியும் வளர்த்தபடியேதானிருந்தார். இதையெல்லாம் சொல்வதால் எந்த மனித இறப்பையோ இழப்பையோ எள்ளிநகையாடுவதோ எதிர்த்து எழுதுவதோ எனது நோக்கமல்ல வாழ்நாள் முழுவதும் பார்ப்பனிய ஸநாதனத்தை பேணியவரை வானாளாவப் புகழ்வது நாம் பிறந்த சமூகத்திற்கே வெட்கக் கேடானது. அவரை இழந்துவாடும் அவரது சமூக்கிற்கும் அவரது குடும்பத்திற்கும் அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக