Sundar P · பட்டினத்தாரின் பேரண்டத் தத்துவம்.பட்டினத்தடிகள் சொல்லும் ஆறு கட்டளைகள் இவை:-
1“பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்”
உயிர்களின் தோற்றம் ஒரு சங்கிலித்தொடர் என்று கண்டுபிடித்திருக்கிறது நவீன
அறிவியல். ஒரு உயிர் இறந்து மண்ணில் விழுந்தவுடன், அதிலிருந்து வேறு ஒரு
உயிர் தோன்றுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர்போல நடக்கிறது என்று
விளக்குவது அறிவியல்.
இந்த அறிவியல் உண்மையை எளிய மொழியில் விளக்குகிறார் பட்டினத்தார்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்....
உலகில் தோன்றும் பொருட்கள் எல்லாம் ஒரு நாள் மறைந்துபோகும்; அதுபோல, மறைந்துபோன பொருட்கள் மீண்டும் தோன்றும்.
உதாரணமாக, ஆடை வடிவமைப்பிலும், மக்களின் நாகரிகப் பழக்கங்களிலும் இத்தகைய சுழற்சியைக்காணலாம்.
காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறது. அப்படி மறையும் சூரியன் மறுநாள் உதிக்கிறது..
இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்......
இந்த உலகில் சில உயிரினங்கள் எண்ணிக்கையில் பெரிதாக இருந்திருக்கலாம்; அவை தற்பொழுது எண்ணிக்கையில் சிறுத்துப்போய் காணப்படலாம்.
கொஞ்ச காலத்துக்கு முன்புவரை எண்ணிக்கையில் சிறிதாக இருந்தவை, தற்பொழுது எண்ணிக்கையில் பெருத்து காணப்படலாம்.
பெரும் செல்வத்தை ஆண்டவர்கள் அனைத்தையும் இழந்து நிற்க நேரிடலாம். வறிய மனிதன், பெரும் செல்வத்தை ஈட்டி உயர்ந்திடலாம்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.....
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம்
பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன்
நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக
மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக
நிலைத்து நிற்கின்றன.
உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்
டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.
5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்...
தந்தையும் தாயும் புணர்ந்து குழந்தை உருவாகிறது.
அந்த குழந்தையும், தன் பெற்றோரிடமிருந்து பிரிந்து பின் புணரும்.
இது ஒரு வட்டச் சுழற்சி.
6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்.....
நாம் மிகவும் விரும்பும் பொருட்களை / செயல்களை பிறிதொரு காலகட்டத்தில் நம்மாலேயே வெறு க்கும் நிலை வரலாம்..
நாம் ஒரு காலத்தில் வெறுத்து ஒதுக்கியவை பின்னாளில் விரும்பி ஏற்கப்படும்
இது காலத்தின் கட்டாயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக