ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

இந்தி எதிர்ப்பு டி-ஷர்ட்டுகளுக்கு திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்.. அமெரிக்கா, குவைத் மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து ஆர்டர்கள்

இந்தி எதிர்ப்பு டி-ஷர்ட்டுக்கு திருப்பூரில் குவியும் ஆர்டர்கள் - தயாரிப்பு தொடங்கிய பின்னணி என்ன? மு.ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக : தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி
கார்த்திகேயன்

கார்த்திகேயன்

தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டது சமீபத்தில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பின்னலாடை தலைநகரமான திருப்பூரில் இந்த டி-ஷர்ட்டுகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. முதன்முதலாக இந்த டி-ஷர்ட்டை தயாரித்த பின்னலாடை நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன், கடந்த நான்கு நாட்களில் மட்டுமே பத்தாயிரம் டி-ஷர்ட்டுகளை தயாரித்து அனுப்பியுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கிறார்.   

"கடந்த 5 வருடங்களாக திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழக - மாணவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறேன். 'திராவிட சிறகுகள்' என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறேன். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தி மொழி திணிப்பு பிரச்சனைக்கு எதிராக இன்றைய இளைஞர்கள் ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளை அணிந்து போராடி வருகின்றனர். அதை நாங்கள் தயாரித்து வழங்குவது பெருமையளிக்கிறது" என கூறுகிறார் கார்த்திகேயன்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் விருப்பத்திற்கினங்க இந்த டி-ஷர்ட்டுகளை இவர் சென்ற மாதம் தயாரித்து வழங்கியுள்ளார்.

"தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் அலுவலகத்திலிருந்து இந்த டி-ஷர்ட்டுகளை தயாரிப்பதற்கான ஆர்டர்கள் முதலில் வந்தன. இந்தி எதிர்ப்பு வாசகங்களின் வடிவங்களை அவர்கள் அனுப்பி வைத்தனர். அதை டி-ஷர்ட்டுகளில் அச்சடித்து அனுப்பினோம், அடுத்த சில நாட்களில் இவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை தயாரித்து தருமாறு ஏராளமான ஆர்டர்கள் எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. வாசகத்தின் வடிவத்தை பயன்படுத்துவதற்கான உரிய அனுமதியை பெற்று தயாரிப்பு பணிகளை தொடங்கினோம். இந்தி மொழியை திணிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிரான தமிழர்களின் குரல் வடிவமாக இந்த டி-ஷர்ட்டுகள் தற்போது மாறியுள்ளன. கடந்த நான்கு நாட்களில் மட்டு


மே பத்தாயிரம் டி-ஷர்ட்டுகளை தயாரித்து உலகெங்கும் அனுப்பியுள்ளோம்" என தெரிவிக்கிறார் இவர்.

பனியன் தயாரிப்பு

கடந்த சனிக்கிழமை அன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் indian’ என்று அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டையும், மெட்ரோ படத்தில் நடித்த நடிகர் சிரீஷ் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டையும் அணிந்து, அந்த புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

இதனை பாராட்டியதோடு, இதேபோன்ற டி-ஷர்ட்டுகளை அணிந்த இளைஞர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொ


ழி அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

"எந்த மொழியையும் கற்றுக்கொள்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதைதான் நாம் ஆண்டாண்டு காலமாக எதிர்த்து வருகிறோம். அந்த எதிர்ப்பின் நவீன வடிவம் தான் இந்த டி-ஷர்ட்டுகள். தமிழகம் மட்டுமின்றி தெலங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிஷா ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளது. குறிப்பாக, இந்தி எதிர்ப்பு டி-ஷர்ட்டுகள் பிரபலமடைந்த அடுத்த நாளிலிருந்து குஜராத் மாநிலத்தில் இருந்து ஆர்டர்கள் வந்தது. இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, குவைத் மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து இந்த டி-ஷர்ட்டுகளுக்கான ஆர்டர்கள் வந்துள்ளன" என்கிறார் கார்த்திகேயன்.

யுவன் சங்கர் ராஜா மற்றும் கனிமொழியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திமுக-வின் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சாந்தனு பாக்கியராஜ், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர் சுந்தரராஜன் என பல்வேறு தரப்பினரும், 'I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலின்

"இந்தி மொழிக்கு எதிராக பேசிவிட்டு, இந்தி பேசுபவர்களை வைத்து தானே டி-ஷர்ட் தயாரிக்கிறாய் என சிலர் கேட்கின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 பணியாளர்களை வைத்து தான் இந்த டி-ஷர்ட்டுகளை தயாரிக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். தினமும் ஆயிரக்கணக்கான ஆர்டர்கள் வந்து குவிகின்றன. முடிந்தவரை அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பி வருகிறோம். புதிய ஆர்டர்களாக சுமார் 2000 குறுந்தகவல்கள் வந்துள்ளன. இன்னும் அவற்றை படிக்க முடியவில்லை. நாங்கள் எதிர்பார்க்காத அளவில் ஆர்டர்கள் வந்து குவிகின்றன. அதேநேரத்தில், சிலர் கைப்பேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் திட்டுகின்றனர், அசிங்கமாக பேசுகின்றனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இந்தி எதிர்ப்புக்கான டி-ஷர்ட்டுகளை அயராமல் தயாரித்து வருகிறோம்." என்கிறார் பின்னலாடை நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன்.

இந்த குறிப்பிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்து வருவதால் திருப்பூரில் இயங்கி வரும் மற்ற பின்னலாடை நிறுவனத்தினரும், இவரிடமிருந்து வடிவங்களை பெற்று தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளனர்.

தபால் செலவு உட்பட இந்த டி-ஷர்ட்டுகளுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரையாக விலை நிர்ணயிக்கப்பட்டு திருப்பூரிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை: