nakkheeran.in :கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில்
அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இதன் பாதிப்பு
அதிகமாக இருப்பதால், மருத்துவமனைகள் நிரம்பின. கரோனா நோயாளிகளுக்கு இடம்
கிடைக்காமல் தவித்தனர். இதனால் கரோனா ஏ சிம்டம்ஸ் இருப்பவர்கள் (வாசனை
தன்மை அறிய முடியாதது, உணவில் சுவை அறிய முடியாதது) வீட்டிலேயே இருந்து
சிகிச்சை அளிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இது பெரும் வரவேற்பை
பெற்றது.
இந்நிலையில் இதனை தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த தமிழக
சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதன்படி தற்போது வேலூர், சேலம்,
கன்னியாகுமரி உட்பட 5 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி கரோனா டெஸ்ட் எடுத்து பாசிட்டிவ் என வந்தவர்கள் ஏ சிம்டம்ஸ் உள்ளவர்களாகவும், 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருந்தால் அவர்களை வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது சுகாதாரத்துறை. இதற்காக 10 தினங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை, பல்ஸ் மீட்டர், தெர்மாமீட்டர் போன்றவை 2,500 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. மேலும், மருத்துவர்களுடன் தினமும் ஆலோசனை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்படி வேலூர் மாவட்டத்தல் 5 நபர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுகிறார்கள் என்கிறார் வேலூர் மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குநர் மணிவண்ணன். இதனை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக