சனி, 19 செப்டம்பர், 2020

கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு ! சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் !!

 
vinavu :கருவறைத் தீண்டாமைக்கு முடிவுகட்டு! அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு ! என்ற முழக்கம் கடந்த 23.08.2020 அன்று டிவிட்டரில் பரவலாக டிரண்ட் செய்யப்பட்டது. அதன் தொகுப்பு உங்களுக்காக. பாருங்கள்... பகிருங்கள்... அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இன்றுவரை ஆகம கோவில்களில் தகுதிபடைத்த பார்ப்பனர் அல்லாதா அர்ச்சகர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழக அரசால் கடந்த 2006 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் உரிய முறையில் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இன்றும் பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளனர். இதனை எதிர்த்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தொடர்ந்து போராடிவருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பல ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.    டிரண்டிங் தொகுப்பு

இந்நிலையில் ஆகஸ்டு 22, 2006 அன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 23.08.2020 அன்று டிவிட்டரில், ஜனநாய சக்திகள் மற்றும் சமூகநீதிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்


#SaveTemplesFromBrahmanism
#கருவறையில்_தீண்டாமை என்ற ஹேஸ்டேக்களை முன்வைத்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர் அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்து தருகிறோம். இம்முழக்கங்களை டிவிட்டரில் மட்டுமல்லாது தெருவெங்கும் எடுத்துச் செல்வோம்! கருவறைத் தீண்டாமைக்கு முடிவுகட்ட அணிதிரள்வோம் வாரீர்…

கருத்துகள் இல்லை: