கர்நாடக துணை முதல்வர் புரந்தேந்திரப்பா,, அவர் குடும்பத்தினர் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன! ஒன்று சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி இன்னொன்று சித்தார்த்தா இன்ஸ்டிட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்!
ஒரு ஏஜண்ட் ஒருவரை அமர்த்திக் கொள்கிறார்கள்! அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா செல்கிறார்! அங்கிருந்து மருத்துவம் முதலாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 300 பேர்களை அழைத்து வருகிறார்! அவர்களை நீட் பரீட்சை எழுத வைக்கிறார்! அவர்களும் ரேங்க் வாங்கி பாஸ் ஆகிறார்கள்! அவர்கள் கௌன்சிலிங்க் எங்கு வேண்டுமென்றால் சித்தார்த்தா காலேஜையே சொல்கிறார்கள்!
முதல் ரவுண்ட் கௌன்சிலிங் வருகிறார்கள்! அதற்கு ரெக்கார்ட் வெரிபிகேஷன் இல்லை என்பதால் நீட் மார்க்கை கொடுத்து சீட் பெறுகிறார்கள்! பின் சேராமல் விடுகிறார்கள்! இதற்கு அவர்களுக்கு பைன் எதுவும் இல்லை! அடுத்து இரண்டாம் ரவுண்ட் கௌன்ஸின்லிங் வருகிறது! அதிலும் அவர்கள் வருகிறார்கள்! சேராமல் விடுகிறார்கள்! ஆனால் இங்கு 2 லட்சம் ஃபைன் கட்ட வேண்டும்! அதை ஏஜண்ட் கட்டுகிறார்!
அடுத்து மாப் அப் ரவுண்ட் என்ற ரவுண்ட் வருகிறது! இதற்கும் அவர்கள் வருகிறார்கள்! இதிலும் சேராமல் விடுகிறார்கள்! இதற்கு ஃபைன் 2 லட்ச ரூபாய் அதையும் ஏஜண்ட் கட்டி விடுகிறார்! அவ்வளவுதான் ! இப்போது அத்தனை சீட்களும் கல்லூரியிடமே மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு ஒப்படைக்கப் படுகின்றன. நிர்வாகம் மொத்தத்தில் எவ்வளவு செலவு செய்கிறது ?
இரண்டாம் கௌன்ஸில்ங் ஃபைன் 2 லட்சம், மாப் அப் கௌன்சிலிங் பைன் 2 லட்சம், பரீட்சை எழுதிய மானவர்களுக்கு கூலி 2 லட்சம், ஏஜண்ட்டுக்கு 2 லட்சம் ஆக மொத்தம் 8 லட்சம் செலவழிக்கிறது! இப்படி 8 லட்ச ரூபாய் செலவு செய்து சரண்டர் செய்யப்பட்ட சீட்டை 50 முதல் 70 லட்சங்களுக்கு விற்கிறது! இந்த லட்சணத்தில் தான் நீட் பற்றி பொளந்து கட்டுகிறார்கள். ...
By Saravanan Saru நம்மூரிலிருந்தும் "கோட்டா" விற்கு நிறையபேர் நீட் பயிற்ச்சிக்காக செல்கிறார்க<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக