இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு ஆதரவுக் கரம் நீண்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதிகள் 6 பேர் களமிறங்கியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு இன்று (ஆகஸ்ட் 14) கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், “மாணவர்கள் மரணம் காரணமாக சூர்யா தெரிவித்த கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீட் தேர்வு காரணமாக 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதன் வெளிப்பாடாகவே, சூர்யா அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஆகவே, சூர்யா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த விஷயத்தை பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதாக தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் எனவும் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.எழில்
நீட் தேர்வு மற்றும் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில் நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்திருந்தார். இந்நிலையில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில், மதுரை, நாமக்கல், தருமபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குவதாக நடிகர் சூர்யா நேற்று (செப்டம்பர் 13) இரவு 8 மணியளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ”தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக ஆறுதல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்சிங்’ மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தார். சூர்யாவின் இந்த அறிக்கை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதி மன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கோரி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு நேற்று இரவே கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் இணையப்பக்கத்தில் நள்ளிரவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
அதில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் , “என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைமதிப்புக் குட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் அறிக்கை விடுமுறை நாளான ஞாயிறு இரவு 8 மணியளவில் வெளியானது. அதே சமயத்தில் இரவு 12 மணியளவில் நீதிபதி எழுதிய கடிதம் தி இந்து இணையப்பக்கதில் வெளியாகிறது. விடுமுறை நாளன்று இரவில் ஒரு நீதிபதி தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதுகிறார். அது தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம். அது அவரிடம் சென்று சேர்ந்ததா? அவர் படித்தாரா? என்பது கூட தெரியாது.
ஆனால், அதற்குள் நள்ளிரவில் ஊடகத்தில் வெளியாகிறது.இவ்வளவு வேகமாக சூர்யாவுக்கு எதிராக வேலைகள் நடக்க என்ன காரணம்?. சூர்யா நீட்டுக்கு எதிராகச் சொன்ன வாதங்கள் மக்களிடம் சென்று சேருவதற்குள் அவர் குற்றம் செய்துவிட்டார் என்கிற கருத்தை உருவாக்க 'அரசியல் பின்புலத்துடன்' இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்த சூழலில் சூரரை போற்று நாயகனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
minnambalam: தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. ஆனால், இந்தத் தேர்விலாவது தேர்ச்சி பெற்று மருத்துவ சீட் கிடைக்குமா என்று மனப் பதற்றத்திலேயே இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் நேற்று முன்தினம் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்டனர்.
மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, நாமக்கல் மோதிலால், தருமபுரி ஆதித்யா என மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் கட்சியினரும், பிரபலங்களும், மாணவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தும், மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு 'வாழ்த்து' சொல்வதற்குப் பதிலாக 'ஆறுதல்' சொல்வதைப் போல அவலம் எதுவுமில்லை. 'கொரோனா தொற்று' போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்' மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. 'தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை' என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள், 'அனல் பறக்க' விவாதிப்பார்கள்.
>நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லாத நம் கல்வி முறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் அதில், “நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்த துணைநிற்பது போலவே, மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்ப்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.
மகாபாரத காலத்துத் துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை 'பலியிட' நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.
ஒரே நாளில் 'நீட் தேர்வு' மூன்று மாணவர்களைக் கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீவைக்கற 'நீட் தேர்வுக்கு' எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்" என்று நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் சூர்யா.
கவிபிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக