ராஜீவ் கொலையாளிகள் எல்லோருக்கும் தூக்கு கிடைக்க முழுநேரமும் ஓயாமல் உழைத்த “இதயதெய்வம்” தான் தன் மகனை காக்கும் காவல்தெய்வம் என்று அற்புதத்தம்மாள் போய் அவரை கண்டு உருகி புகழ்ந்து எத்தனை ஆண்டுகள் ஆயின? வந்தானா அவர் மகன்? அந்த நயவஞ்சகமான வீம்பான அறிவிப்புக்காக அவரை ஈழத்தாயே என்று போற்றிப்பாடிய வாய்கள் எவையாவது இன்றுவரை ஏனென்று கேட்டதா? போராடியதா? அதிமுக அரசை கண்டித்தனவா? பேச்சு மூச்சில்லையே என்ன காரணம்?
அதேபோல் நீட் நிறுவனப்படுகொலைகளுக்கு முற்று முழுதான முதன்மைக்காரணமான நாசகார கும்பலின் இன்னொரு மோசடி அறிவிப்பு வந்த அடுத்த நொடி அவர்களுக்கு சாமரம் வீசும் இந்த சில்வண்டு தான் உங்களுக்கு போராளியா? நீட் பிரச்சனை வெறும் கிராமப்புற/அரசு பள்ளி மாணவர் பிரச்சனை தானா? இதுவா அதற்குத்தீர்வு? எவ்வளவு சிக்கலான பிரச்சனையை சினிமாத்தனமாக சுருக்கி நாடகம் நடத்துகிறது அரசு; அதற்கு இது பாராட்டு?
இவரது தந்தை சிவகுமாரின் வரலாறே ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏற்ப ஜால்ரா அடித்து பிழைப்புவாதம் செய்த சந்தர்ப்பவாத சரித்திரம் தானே. கலைஞரை சங்கத்தமிழே என்றார்; மேடைக்கு மேடை அவர் கவிதையை மனனம் செய்து ஒப்பித்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அன்புச்சகோதரி என்றார்; (மூத்தமகன் தான் ஜாதிகெட்டு பெண்ணெடுத்தான். சின்னமகனாவது சொந்தஜாதிப்பெண்ணை கட்டும்படி நீங்கள் தான் அறிவுரை சொல்லணும் என்று அவரிடம் போய் வேண்டுகோள் வைத்தார். அவரும் அப்பார் பேச்சைக்கேட்டு நட என்று கார்த்திக்கு புத்தி சொன்னார்.) மோடி வந்ததும் மஹாபாரத காலட்சேப உபன்யாசியானார். பக்திப்பழமாய் பாஜக மேடைகளில் தோன்றினார். பேசினார்.
அந்த நீண்ட நெடிய “பாரம்பரியத்தின்” அடியொற்றி இதோ அவரது வாரிசும் அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறேன் என்பதை இன்று நிரூபித்திருக்கிறது. இதில் அவருக்கு உருகி உருகி சாமரம் வீசிய நட்டநடுவுநிலை “அறிவுசீவிகளை” “போராளிகளை”நினைத்தால் தான் பரிதாபம் மிஞ்சுகிறது. ஆனால் ஆனானப்பட்ட விஜயகாந்த்தையே தமிழ்நாட்டு முதல்வராக தோளில் சுமந்த மூடர்கூடத்துக்கு கூச்சமாவது மானமாவது. இதையும் துடைத்துப்போட்டுவிட்டு அடுத்து யாரை ஆதரிக்கலாம் என்று போய்க்கொண்டே இருப்பார்கள். இதுகளும் இதுகளின் நியாயங்களும். தூத்தெறி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக