புதன், 16 அக்டோபர், 2019

காங்கிரஸ் எம்பி பஜகாவில் சேர்ந்தார் .. கர்நாடகா காங்கிரஸ் கே சி ராமமூர்த்தி ...


.hindutamil.in : புதுடெல்லி . கர்நாடகாவின் கே.சி.ராமமூர்த்தி ராஜினாமாவை அடுத்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மேலும் ஓர் இடத்தை இழந்துள்ளது. பெங்களூருவில் ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு ராமமூர்த்தி காங்கிரஸில் சேர்ந்தார். இவர் கர்நாடகாவில் பல கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார், தற்போது வழக்கில் சிக்கியுள்ள டி.கே.சிவக்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படுகிறது. டிகே சிவக்குமார் தற்போது நிதிமுறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு நெருக்கமான ராமமூர்த்தி தன் எம்.பி. பதவியைத் துறந்தார். இவரது பதவிக்காலம் ஜூன் 2022 வரை உள்ளது.
 இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 45 எம்.பி.க்களே உள்ளனர். அடுத்த ஜூனில் எம்.பி.க்கள் ராஜிவ் கவுடா, ஹரிபிரசாத் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களில் பாஜகவிடம் 7 எம்.பி.க்களை எதிர்க்கட்சிகள் இழந்துள்ளன. ராமமூர்த்தியும் பாஜகவில் சேர்கிறார். தெலுங்கு தேச எம்.பி.க்கள் 4 பேர், சமாஜ்வாதி கட்சியிலிருந்து 2 எம்.பி.க்கள் காங்கிரஸிலிருந்து ஒரு எம்.பி. என்று ராஜினாமா படலம் தொடர்கிறது.
தற்போது ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 83 எம்.பி.க்கள் உள்ளனர், இனி எந்த ஒருசட்டத்திற்கும் எதிர்ப்பு இருந்தாலும் சுலபமாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்

கருத்துகள் இல்லை: