பகவானை"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு!.
tamil.oneindia.com - hemavandhana : சென்னை: கல்கி பகவானையே காணவில்லையாம்.. விஷ்ணுவின் அவதாரம் என்று அறிவித்து கொண்ட 70 வயது சாமியாரும், அவரது மனைவி அம்மா பகவானும் மாயமாகிவிட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னையில் டான் போஸ்கோவில் ஸ்கூல் படித்தார். டி.ஜி வைஷ்ணவாவில் காலேஜ் முடித்தார்.
இதற்கு
பிறகு கொஞ்ச நாள் எல்ஐசி ஏஜெண்ட்டாக இருந்தபோது, ஜே.கிருஷ்ணமூர்த்தியின்
சிந்தனைகளுக்கு அறிமுகம் ஆனார்.. அவரது சிந்தனைகள் விஜயகுமாரை ஈர்த்தது..
அப்போதுதான் தியானத்தின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டு, கல்வி நிறுவனத்தை
ஆரம்பித்தார். தன் பெயரையும் கல்கி பகவான் என்றும் சூட்டிக் கொண்டார்.
திடீரென ஒரு நாள் தன்னை ஒரு கடவுளாகவும் அறிவித்துகொண்டார். அதாவது தன்னை விஷ்ணுவின் அவதாரம் என்றும் இனிமேல் தன்னுடைய பெயர் கல்கி பகவான் என்றும் பகிரங்கமாக சொல்ல தொடங்கினார். இவர் கல்கி பகவான் ஆகிவிட்டதால், இவரது மனைவி பத்மாவதி "அம்மா பகவான்" ஆகிவிட்டார்.
சித்தூர்
ஆசிரமத்துக்கு பக்தர்கள் மாநிலங்களிலிருந்து, வெளிநாடுகளில் இருந்து
பெருக்கெடுத்து வர ஆரம்பித்து விட்டனர். ஆசிரமத்திலேயே அவர்கள் தங்கி
படிக்கவும்தான், செக்ஸ் புகார்கள், வீடியோக்கள் வெளிவந்து பரபரப்பை தந்தன.
அதன்பிறகு சாமியாரின் செயல்பாடுகள் பெரிய அளவில் பேசப்படவேயில்லை.
அவருக்கும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. சாமியார் மகன் கிருஷ்ணாவின்
பிடியில் எல்லா ஆசிரம பொறுப்பும் வந்தது.
உள்நாடு
மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வழங்கும் ஏகப்பட்ட நிதி, அதை
வைத்து ரியல் எஸ்டேட் தொழில் பார்ப்பது.. வேலூரில் 1000 ஏக்கர் நிலம்,
ஆந்திராவில் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்காவில் நிலம் என்று அடுக்கடுக்காக
சொத்துக்கள் குவிந்தன... வரி ஏய்ப்பு புகாரும், பணப்பரிவர்த்தனைகளை மறைத்த
புகார்களும் வெளிவர ஆரம்பித்தன.
அதிகாரிகள்
நாடு முழுவதும் உள்ள 40 கல்வி ஆசிரமங்களில் 2 நாள் ரெய்டு நடத்தி 500
கோடியை பறிமுதல் செய்தனர். இவ்வளவுக்கும் முழு முதற் காரணம் கிருஷ்ணாதான்.
இந்த ரெயிடு நடக்கும் சமயங்களில் கிருஷ்ணாவும் அவரது மனைவியும்தான்
அதிகாரிகளின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்கள். ஒரு சில கேள்விகளுக்கு
நிறுவன ஊழியர்கள் பதில் அளித்தார்கள்.
ஆனால்,
சம்பந்தப்பட்ட சாமியாரை ஆசிரமத்தில் காணோமாம். அவருக்கு உடம்பு சரியில்லை
என்று தகவல் வந்ததோடு சரி.. அதற்கு பிறகு என்னானார் என்றே தெரியவில்லை.
சாமியார் மனைவி புஜ்ஜம்மாவையும் காணவில்லையாம். இதைவிட அதிர்ச்சி, இந்த
சாமியார் தம்பதி 2 வருடங்களாகவே இங்கு இல்லையாம். நிறுவன பொறுப்புகளை மகன்
கவனித்து வந்தாலும், இந்த தம்பதி இப்போ எங்கே இருக்கிறார்கள் என்பதுதான்
பெரிய கேள்வியாக எழுந்து வருகிறது. விஷ்ணுவின் அவதாரமும், அம்மா பகவானும்
எங்கே இருக்கிறார்களோ
tamil.oneindia.com - hemavandhana : சென்னை: கல்கி பகவானையே காணவில்லையாம்.. விஷ்ணுவின் அவதாரம் என்று அறிவித்து கொண்ட 70 வயது சாமியாரும், அவரது மனைவி அம்மா பகவானும் மாயமாகிவிட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னையில் டான் போஸ்கோவில் ஸ்கூல் படித்தார். டி.ஜி வைஷ்ணவாவில் காலேஜ் முடித்தார்.
திடீரென ஒரு நாள் தன்னை ஒரு கடவுளாகவும் அறிவித்துகொண்டார். அதாவது தன்னை விஷ்ணுவின் அவதாரம் என்றும் இனிமேல் தன்னுடைய பெயர் கல்கி பகவான் என்றும் பகிரங்கமாக சொல்ல தொடங்கினார். இவர் கல்கி பகவான் ஆகிவிட்டதால், இவரது மனைவி பத்மாவதி "அம்மா பகவான்" ஆகிவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக