புதன், 16 அக்டோபர், 2019

தமிழகத்தில் இருந்து மாதம் 3.000.கோடி.... வருடத்திற்கு 36.000.கோடி ரூபா வெளி மாநிலங்களுக்கு ஓடுகிறது

கி.பிரியாராம் கிபிரியாராம் : மாதம் மாதம் 10.000.(பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து தொழிலாளி சொன்னான் அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்
வந்தப்பின்தான் யோசித்தேன் இந்த ஒருவன் மாதம் 10.000.அனுப்புகிறான்
இப்படி 10.பேர் அனுப்பினால் ஒருலட்சம்
நூறுபேர் அனுப்பினால் ஒருகோடி
ஆயிரம் பேர் அனுப்பினால் பத்துகோடி
ஒரு லட்சம் பேர் அனுப்பினால் ஆயிரம்கோடி
மனம் அய்யய்யோ என்று அதிர்ச்சியடைந்தது முதலில் இவனின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன் தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் உதாரணத்திற்கு திருப்பூரில் மூணுலட்சம் பேரும் கோவையில்_ஏழுலட்சம் பேரும் சென்னையில்_20.பது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள் அப்போ சேலம் ஈரோடு போன்ற இன்ன பிற மாவடங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள் அதிர்ச்சியில் உறைந்துபோன நான்
சென்னை கோவை திருப்பூர் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து கணக்கு பார்த்தேன் மொத்தம் முப்பது லட்சம்பேர் ஒருவன் மாதம் மாதம் 10.த்தாயிரம் என்றால் 30.லட்சம் பேர்க்கு கணக்கு போட்டேன் #மூனாயிரம்கோடி எனக் காட்டி விட்டு கால்க்லேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது
மாதம் மாதம் 3.000.கோடி என்றால் வருடத்திற்கு 36.000.கோடி இது அனைத்தும் #தமிழ்நாட்டில் புளக்கத்தில் இருந்து கொண்டு தமிழக மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய #இந்தப்பணம் #வடமாநிலங்களில் புலங்கிக் கொண்டுருக்கிறது அங்கே இருக்கும் மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டுருக்கிறது

இது வெரும் தமிழகத்தின் மூனு மாவட்டக் கணக்கு மீதம் இருக்கும் 36 மாவட்டத் திலும். வடமாநில தொழிலாளிகளை குத்து மதிப்பாய் கணக்கெடுத்து கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி மயக்கம் வந்து மூர்ச்சையாகி இறந்தாலும் இறந்து விடுவோம்
இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள் முதலாளிகள் போன்றோர்களை கனக்கெடுத்து அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை
சத்தமின்றி யுத்தமின்றி தமிழனுக்கு எதிராய் நடக்கும் இந்த மாபெரும் பொருளாதார போர்"ல் தமிழன் அழிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது இதை தமிழன் எப்போது உணர்வது.?.
பட்டாலும் கெட்டாலும் வருந்தாத திருந்தாத தமிழன் இருக்கும்வரை தமிழனக்கு எதிரான இந்தப்  பொருளாதாரப்போர் தொடர்ந்து கொண்டே இருக்கும் தமிழா இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் பொருளாதார வளம் வறண்டு இருக்கும் அல்லது மாண்டு இருக்கும்.?.
வாழ்க தமிழ். தமிழ்நாடு. தமிழ் மக்கள்.
ஜோதிமணி

கருத்துகள் இல்லை: