தினத்தந்தி : ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு நேற்று (வியாழக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய
அரசு ரத்து செய்தது. அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு
யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 சட்டத்தின்
படி அம்மாநிலத்தின் லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும்
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும்
பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறுசீரமைப்பு சட்டம் விதி 54-ன் படி,
ஜம்மு-காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை கலைப்பதற்கான
உத்தரவை பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சட்ட மேலவையில் பணியாற்றிவந்த 116 ஊழியர்களும் வரும் 22-ம் தேதியில் இருந்து தங்கள் வருகையை பொது நிர்வாகத் துறையிடம் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஜம்மு-காஷ்மீர் மேலவை செயலாளர் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் சட்ட மேலவை கட்டிடம், பர்னிச்சர், மற்றும் மின் சாதனங்களை எஸ்டேட்ஸ் இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர்
மேலவை செயலாளர் தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு, வணிகம்,
சட்டசபை விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சட்டசபை செயலகத்திடம்
ஒப்படைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக