புதன், 16 அக்டோபர், 2019

நகை கொள்ளையன் முருகன்... அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட கர்நாடக போலீஸ்!


nakkheeran.in - ஜெ.டி.ஆர் : திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவற்றைத் துளையிட்டு பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புடையை நகைகளை கொள்ளையடித்து நாட்டையே அதிர வைத்தனர். இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த திருவாரூர் முருகனை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், கடந்த 11- ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் அவன் சரணடைந்தான். இதையறிந்த திருச்சி போலீசார், பெங்களூரு சென்று கொள்ளையன் முருகனை காவலில் எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், பெங்களூரு போலீசார் அங்கு நடைபெற்ற கொள்ளை வழக்குகளில் விசாரிக்க வேண்டும் எனக்கூறி அன்றைக்கே திருவாரூர் முருகனை 6 நாட்கள் காவலில் எடுத்தனர்.


பெங்களூர் போலீசார் திருவாரூர் முருகனிடம் விசாரணை நடத்தி கொள்ளை நகைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை தெரிந்துக் கொண்டனர். திருச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், காவலில் இருந்த திருவாரூர் முருகனை அழைத்து வந்து யாருக்கும் தெரியாமல் 12 கிலோ நகைகளை மீட்டுச் சென்ற போது, திருச்சி போலீசாருக்கு தகவல் கிடைக்க பெரம்பலூர் அருகே பெங்களூர் காவல்துறையினரின் வாகனத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது திருச்சி காவல்துறையினர், அவர்கள் வைத்திருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது தான் என தெரிய வந்தது. இருப்பினும் நீதிமன்ற ஆணை பெங்களூர் போலீசாரிடம் இருந்ததால், நகைகளை திருச்சி போலீசாரால் அவற்றை பறிமுதல் செய்ய முடியவில்லை.


இந்த நிலையில் கொள்ளையன் முருகன் பெங்களூரிலும் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதால், அந்த வழக்குகளிலும் மீட்கப்பட்டதாக கணக்கு காண்பித்து நகைகளை காட்சிப்படுத்தி வீடியோவை கர்நாடக காவல்துறையினர் வெளியிடுள்ளனர். அந்த வீடியோவில் கைவிலங்குடன் திருவாரூர் முருகனை அழைத்து வந்து, நகைகள் புதைக்கப்பட்ட இடத்தை முருகன் காண்பிக்க, அவற்றை தோண்டி நகை பையை மீட்கும் காட்சிகள், அதில் பதிவாகியுள்ளது. 
லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில், திருவாரூர் முருகனின் கூட்டாளிகளிடம் 6 கிலோ மட்டுமே மீட்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி போலீசார் மீதமுள்ள நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளனர்.


பெரம்பலூரில் பெங்களூர் போலீசார் நகைகளுடன் சிக்கிய போதே, தமிழக போலீசார் நகைகளை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளனர். அவற்றை வைத்து நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று நகைகளை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளன

கருத்துகள் இல்லை: