புதன், 16 அக்டோபர், 2019

பிஎம்சி வங்கி ரூ.90 லட்சம் வைப்பு பணம் எடுக்க முடியாததால் மாரடைப்பால் மரணம் ..ஜெட் ஏர்வேஸ் முன்னாள் ஊழியர்


பிஎம்சி வங்கியில் ரூ.90 லட்சம் வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் முன்னாள் ஊழியர் மாரடைப்பால் மரணம்தினத்தந்தி :   மும்பை  பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் ரூ. 90 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் வைத்துள்ள  51 வயது ஜெட் ஏர்வேஸ் முன்னாள்  ஊழியர் மாரடைப்பால் மரணமடைந்து உள்ளார். மோசடி புகார் தொடர்பாக பிஎம்சி வங்கி  கடந்த மாதம் முதல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரபட்டது. இதனால்  வைப்புத்தொகையாளர்களின் வைப்பு தொகை திரும்பப் பெறுதல் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் 11 ஆயிரம் கோடிக்கு  மேல் டெபாசிட் வைத்திருக்கும் வங்கியின்  வைப்புத்தொகை வாடிக்கையாளர்கள்  நகரம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். திங்களன்று பணம் எடுக்கும் வரம்பு ரிசர்வ் வங்கியால் ரூ. 40,000 ஆக உயர்த்தப்பட்து. இதனால்  77% வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புகளை முழுமையாக திரும்பப் பெற முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வரம்பு இதற்கு முன் ரூ 1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இது 10 ஆயிரமாகவும் தொடர்ந்து ரூ 25 ஆயிரமாகவும்  உயர்த்தப்பட்டது.

சஞ்சய் குலாத்தி (வயது 51) ஜெட் ஏர்வேஸ் முன்னாள்  ஊழியர். மும்பை புறநகர் ஓஷிவாராவில் வசித்து வருகிறார்.  பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் ரூ.90 லட்சத்திற்கு மேல்  டெபாசிட் செய்து இருந்தார். அவரது வைப்புத்தொகையும் சிக்கலில் உள்ளதால் மன அழுத்தத்திற்கு  உள்ளாகி இருந்தார். இந்த நிலையில்  சஞ்சய் குலாத்தி மாரடைப்பால்  மரணமடைந்தா

கருத்துகள் இல்லை: