வியாழன், 17 அக்டோபர், 2019

கல்கி பகவான் 40 இடங்களில் ரெய்டு ... 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர் அம்மா பகவான் என்கின்ற ... வீடியோ


மகன் கிருஷ்ணா உடன் கல்கி பகவான்கல்கி பகவான்லாஸ் ஏஞ்சல்ஸ் டு பெங்களூரு பிசினஸ்! - கல்கி பகவான் மகனை வளைத்த வருமான வரித்துறை?
 vikatan.com - மலையரசு : வேலூர் குடியாத்தம் அருகே உள்ள நத்தம்தான் விஜயகுமார் என்னும் கல்கி பகவானின் சொந்த ஊர். தந்தை ரயில்வே பணியில் இருந்ததால் விஜயகுமார் 6 வயது இருக்கும்போதே குடும்பத்துடன் சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவி பல்வேறு ஆன்மிகப் பணிகளைச் செய்து வந்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்தி வரும் இவருக்கு சென்னையில் மட்டும் 20 இடங்களில் கிளைகள் உள்ளன.
அண்மையில் இந்த ஆசிரமம் சர்ச்சை ஒன்றில் சிக்கியது. வெளிநாட்டு பக்தர்களுக்கு போதை பொருள்களைக் கொடுத்ததுடன், சிறப்பு பூஜை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுகிறது என்ற புகார் எழுந்தது. நீதிமன்றம் வரை சென்ற இந்த சர்ச்சை இப்போதுதான் கொஞ்சம் ஓய்ந்துள்ளது.
இதற்கிடையே கல்கி பகவான் மகன் என்.கே.வி கிருஷ்ணா பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இன்று கிருஷ்ணாவுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ரெய்டு நடந்து வருகிறது. சுமார் 40 இடங்களில் இந்த ஐ.டி ரெய்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 20 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவின் கோவர்த்தனபுரம் கல்கி ஆசிரமம், அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணா நடத்தி வரும் நிறுவனங்களில் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை மறைத்ததாகவும் வருமான வரிஏய்ப்பு நடத்தியதாகவும் சமீபகாலமாக புகார் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாரையடுத்தே ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் இந்த கல்கி பகவான்?
வேலூர் குடியாத்தம் அருகே உள்ள நத்தம்தான் விஜயகுமார் என்னும் கல்கி பகவானின் சொந்த ஊர். தந்தை ரயில்வே பணியில் இருந்ததால் விஜயகுமார் 6 வயது இருக்கும்போதே குடும்பத்துடன் சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். டான் பாஸ்கோவில் பள்ளி படிப்பு, வைஷ்ணவா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆரம்ப காலகட்டத்தில் எல்.ஐ.சி ஏஜென்டாகப் பணியாற்றினார். அந்த நாள்களில் தத்துவஞானி ஜே.கே-வின் கருத்துகளில் தீவிரப் பற்று கொண்டு அவரது தியானக் கூட்டங்களுக்குத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, ஆந்திராவில் இருந்த `ரிஷி வேல்யூ ஸ்கூல் ஆஃப் ஜே.கே. ஃபவுண்டேஷ'னில் ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்புகிடைக்கவே அங்கே சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், திடீரென 1989-ல், `நான் விஷ்ணுவின் அவதாரம். என் பெயர் கல்கி பகவான்' எனத் தனக்குத்தானே பறைசாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்பு, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் கல்கி ஆசிரமத்தை நடத்தி வந்தார். இந்த ஆசிரமத்துக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் வருவது வழக்கம். விஜயகுமாரின் ஒவ்வொரு செயலும் வித்தியாசமாக இருந்ததால் மிகவும் பிரபலமடைந்ததார்.

பாலிவுட், கோலிவுட் என உலகம் முழுக்க கல்கி பகவான் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால், எத்தனையோ பிரபலங்கள் பக்தர்களாக உள்ளனர். பின்னாளில் அசுர வளர்ச்சிகண்ட இவரது ஆசிரமம் நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைத் தொடங்கியது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்களைக் கொண்ட கல்கி பகவானை தனிப்பட்ட முறையில் பார்க்க வேண்டும் என்றாலே 50,000 ரூபாயும், அவரது மனைவி பத்மாவதியை (அம்மா பகவான்!) சந்திக்க வேண்டும் என்றால் 25,000 ரூபாயும் வசூலித்த பின்பே பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது. அசுர வளர்ச்சிக்கு மத்தியில் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறார் கல்கி பகவான். 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் கோடிக் கணக்கில் சொத்துகள் இருக்கும் நிலையில் ஒன்னெஸ் யூனிவர்சிட்டி என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றையும் நடத்தி வருகிறார் கல்கி பகவான்.
உலகம் முழுவதும் அமைதியைப் பரப்பும் நோக்கில் இந்தப் பல்கலைக்கழகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளையில், கல்கி பகவான் மகன் கிருஷ்ணா, லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு கம்பெனி உள்பட இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். பெங்களூருவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பிசினஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களைக் குறிவைத்தே தற்போது அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: