வெள்ளி, 18 அக்டோபர், 2019

மிசாக் காலம் ..ஸ்டாலின் மீது கடுமையான தாக்குதல் .. சிட்டி பாபு எப்படி இறந்தார்? துக்ளக்’ இதழிலிருந்து....

ஸ்டாலின்- சிட்டிபாபு
ஒருநாள் இரவு 11 மணிக்கு மேல் என் அறைக் கதவு திறக்கப்பட்டு, என் கால்மீது ஏதோ விழுந்தது போன்ற சப்தம். எழுந்து பார்த்தால், ஒரு உருவம். ‘யார் என்று குரல் கொடுத்தேன். அப்படி என் மீது விழுந்தவர் மு.க.ஸ்டாலின். அவரது உடல் முழுவதும் பிரம்படி அடையாளம்.
மிசாக் காலம் .. நெருக்கடி நிலை பிரகடனம் செய் யப்பட்டதன் பின்னணி, அதன் பாதிப்புகள், மிசா கைதிகள் அனுபவித்த கொடுமைகள் பற்றி இப்பகுதியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நினைவு கூர்கிறார்:
“இந்தியாவில் நெருக்கடி நிலை 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி பிரகடனம் செய்யப்பட்டது. இந்த முடிவை அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி எடுப்பதற்கு அரசியல் போக்குகளும், சில சம்பவங்களும் காரணமாக அமைந்தன. லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய முழுமைப் புரட்சி இயக்கத்திற்குக் கிட்டிவந்த பரவலான ஆதரவு, சமஷ்டிபூர் ரயில் பாதையில் நடந்த குண்டுவெடிப்பில் அன்றைய ரயில்வே அமைச்சர் மிஸ்ரா உயிரிழந்தது, ஃபெர்னாண்டஸ் மீதான பரோடா டைனமைட் சதி வழக்கு ஆகியவை அச்சமயத்திய நிகழ்வுகளாகும்.
“நெருக்கடி நிலை கொண்டு வரப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக, அலஹாபாத் உயர்நீதி மன்றத்தில் ராஜ்நாராயணனால் தொடரப்பட்டிருந்த தேர்தல் வழக்கில், “ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது” என்று நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்திருந்தார்.
இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதுதான் அவர் எமர்ஜென்ஸியைக் கொண்டு வரத் தூண்டுகோலாக அமைந்தது எனலாம். சித்தார்த்த சங்கர் ரே, தினேஷ் சிங், சஞ்சய் காந்தி ஆகியோர் இந்த ஆலோசனையை அவருக்குத் தெரிவித்ததாகவும் பேச்சு இருந்தது. அலஹாபாத் தீர்ப்பை செல்லாத தாக்கும் வகையில் இந்திரா காந்தி சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்.
“நீதிபதிகள் இடமாற்றம், ஸினியாரிட்டியை மீறி தலைமை நீதிபதி நியமனம் ஆகியவற்றை அவரது அரசு மேற்கொண்டதோடு, அரசியல் சட்டத்தின் பேச்சுரிமை, எழுத்துரிமை சம்பந்தப் பட்ட பிரிவுகளில் கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டன. ‘உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம்“ என்று சொல்லக் கூடிய,  விமிஷிகி (விணீவீஸீtமீஸீணீஸீநீமீ ஷீயீ மிஸீtமீக்ஷீஸீணீறீ ஷிமீநீuக்ஷீவீtஹ் கிநீt) அமலுக்கு வந்தது. எனக்குத்தெரிந்து எமர்ஜென்ஸியை இரு மாநில அரசுகள்தான் - தமிழ்நாடும், குஜராத்தும்தான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒழுங்கீனமான முறையில் இரு தீவுகள் போல் தமிழ்நாடும், குஜராத்தும் இருப்பதாக இந்திராகாந்தி விமர்சித்தார். முன்னதாக எமர்ஜென்ஸியை ஆதரிக்கும்படி கோரி அன்றைய தமிழக முதல்வர் கலைஞருக்கு இந்திரா காந்தி தூது அனுப்பினார். ஆனால், கலைஞர் அதை ஏற்கவில்லை. ‘எமர்ஜென்ஸியை எதிர்த்து தி.மு.க. கண்டனக் கூட்டமும் நடத்தியது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான், தி.மு.க. ஆட்சி மீது குற்றச்சாட்டுகளைக் கூறி எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த மனுவுக்கு உயிரூட்டி, தி.மு.க. ஆட்சி யைக் கலைக்கும் முடிவை இந்திரா காந்தி எடுத்தார். “யாரை எல்லாம் அரசு தேடுகிறதோ, அவர்களுக்கு தமிழ்நாடு அடைக் கலம் தருகிறது (ஜிணீனீவீறீஸீணீபீu லீணீs தீமீநீஷீனீமீ sணீஸீநீtuக்ஷீணீக்ஷீஹ்) என்றும் குற்றச் சாட்டு கூறப்பட்டது. குறிப்பாக ஃபெர் னாண்டஸுக்கு இங்கே அடைக்கலம் தந்ததாகக் கூறப்பட்டது. 1976  ஜனவரி 31 ஆம் தேதி தி.மு.க. ஆட்சி இங்கு கலைக்கப்பட்டது. ‘
“தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை எமர்ஜென் ஸியின் பாதிப்புகள் இங்கே பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், ஆட்சி கலைப்புக்குப் பிறகு அதன் விளை வுகள் கடுமையாக வெளிப்பட்டன.
“ஜனவரி 31 ஆம் தேதி திண்டிவனத்தில் நடந்த திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மணியம்மையாருடன் நானும் சென்றிருந்தேன். நான் பேசி முடித்து விட்டு கீழே இருந்தபோது, சென்னையிலிருந்துதொலைபேசிமூலம்தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாகக் கிடைத்த செய்தியை, ஒரு துண்டுச் சீட்டில் எழுதி என்னிடம் கொடுத் தார்கள். நான் உடனே மணியம்மையாரிடம் அதைக் கொடுத்தேன். அவர் இதைக் கூட்டத்தில் அப்படியே படித்து விட்டு, நாம் மேலும் சோதனை களைச் சந்திக்கவேண்டி வரலாம். கட்டுப்பாடுடன் செயல்படுவோம்‘’ என்று கூறினார்.
‘‘திண்டிவனத்திலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு சென்னைதிரும்பியதும்,பெரியார்திடல் அமைந் துள்ள பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர். திடலுக்கு வந்ததும் ஒரு உயர் போலீஸ் அதிகாரி, என்னைக் கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினார். என்னோடு விடுதலை மேலாளர் சம்பந்தம் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் மாலைதான் எங்களை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர். கமிஷனர் அலுவலகத்தில் நாங்கள் இருந்த போதுதான் நீலநாராயணன், ஆசைத்தம்பி, ஆர்.டி.சீதாபதி, எம்.ஆர்.ராதா என்று ஒவ்வொருவராகக் கைது செய்து அழைத்து வந்தனர். வீட்டில் இருப்பவர்களுக்கு, நாங் கள் எங்கிருக்கிறோம் என்பது தெரியாது.
‘‘அப்போதுசென்னைமத்தியசிறையில் வித்யாசாகர் என்பவர் சிறைக் கண்காணிப்பாள ராகவும், கயூம் என்பவர் ஜெயிலராகவும் இருந்தனர். அரசியல் கைதிகளை, குறிப்பாக தி.மு.க.வினரையும், எங்களையும் மோசமாக நடத்தத் தொடங்கினர். 9 ஆவது பிளாக் என்ற, தொழுநோயாளிகள் வைக் கப்பட்டிருந்த கொட்டடியில் எங்களை அடைத்தனர். ஸ்தாபன காங்கிரஸைச் சேர்ந்த மாரிசாமி, கொண் டல்தாசன், மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஹரிபட் ஆகியோர் சிறையில் இருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எமர்ஜென்ஸியை ஆதரித்ததால், அக்கட்சியைச் சேர்ந்த யாரும் மிசாவில் கைதாகவில்லை.
‘தினமும் மதியம் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு மட்டும்தான் கதவைத் திறப்பார்கள். குளிக்காமல், உடை மாற்ற முடியாமல், உள்ளாடையை மாற்ற முடியாமல் தொடர்ச்சியாக 3 நாட்கள் நான்  இருக்க நேர்ந்தது  மிசாவில் சிறைப்பட்ட போதுதான். பிப்ர
வரி 2 ஆம் தேதி “ரோல் கால் என்று வெளியே அழைத்து, ஒவ்வொருவரையும் குண்டாந்தடியால் நையப் புடைத்து, நடக்க முடியாமல் உள்ளே அனுப்பினார்கள். மரியாதைக் குறைவாக, கேவலமான சொற்களால்தான் அழைத்தார்கள்.
‘விடுதலை சம்பந்தம் முதுகுத் தண்டில் ஆப ரேஷன் செய்தவர் என்பதால், அவரை அடித்த போது, “வேண்டாம் அவரை விட்டு விடுங்கள் என்று நான் தடுத்ததற்கு, இழிவாக என்னைத் திட்டி, நீ என்னடா வக்காலத்தா? என்று என்னையும் கேட்டு  அடித்தார்கள். முரசொலி அடியார், ஆர்க்காடு வீரா சாமி, முன்னாள் மேயர் சிட்டிபாபு, கோடம் பாக்கம் குமார் ஆகியோர் சிறைக் காவலர்களால் மோசமாகத் தாக்கப்பட்ட னர்.
“ஒருநாள் இரவு 11 மணிக்கு மேல் என் அறைக் கதவு திறக்கப்பட்டு, என் கால்மீது ஏதோ விழுந்தது போன்ற சப்தம். எழுந்து பார்த்தால், ஒரு உருவம். ‘யார் என்று குரல் கொடுத்தேன். அப்படி என் மீது விழுந்தவர் மு.க.ஸ்டாலின். அவரது உடல் முழுவதும் பிரம்படி அடையாளம்.
“சிறை யில் சில ரை மோசமாகத் தாக்கியதோடு, உணவிலும் சிறுநீர் கலந்து கொடுத்து, அதனாலும் சிலரது உடல்நிலை கெட்டது. சிறைக்குள் இந்த நிலை என்றால், வெளியே பத்திரிகைச் செய்தி களில் கடும் தணிக்கை அமலானது. சென்னையில் இருந்த பி.ஐ.பி. அலுவலகத்தில், பத்திரிகைகளில் இடம் பெறும் செய்திகளை முன்கூட்டியே காட்டி ஒப்புதல் பெற வேண்டும். பத்திரிகைகள் அங்கு தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளை வெளியிடக் கூடாது. உதாரணமாக, “விடுதலையில் தந்தை பெரியார்'' என்று குறிப்பிடக் கூடாது; பெரியார் என்று மட்டுமே வெளியிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். ஆனால், மணியம்மையார் உத்தரவுப்படி தந்தை பெரியார் என்றே வெளியிட்டு வந்தோம்.
“அப்போது தி.மு.க. தலைவர் கலைஞர், யாரெல்லாம் மிசாவில் கைதாகியிருக்கிறார்கள் என்பதை எப்படி வெளிப்படுத்தினார் என்றால், அண்ணா நினைவு நாளுக்கு வர இயலாதவர்கள் என்று முரசொலியில் அவ்ர்களின் பெயர்களைப் பட்டியலிட்டார்.
“சிறையில் இருந்தவர்களிடம், நீங்கள் எல்லாம் எப்போது விடுதலை ஆவீர்கள் என்பதோ, உயிரோடு தான் அனுப்பப்படுவீர்களா என்பதோ தெரியாது” என்று வித்யா சாகர் மிரட்டினார். “எங்களை மன்னித்து விடுங்கள்; கட்சியை விட்டு விலகி விடுகிறோம் என்று எழுதிக் கொடுத்தால் வெளியே போய் விடலாம்'' வெள்ளைக் காகிதங்களைக் கொடுத்து மனமாற்றம் செய்யும் முயற்சியும் நடந்தது.
‘பின்னர் சில மாதங்கள் கழித்து கவர்னரின் ஆலோசகராக இருந்த சுப்ரமணியம் சென்னை சிறைக்குவந்தபோது,அவரிடம்நானும், மாறனும் சிறைக் கொடுமைகள் பற்றி ஒரு மகஜர் அளித்தோம். அதன்மீது ஒரு விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். அதன் பிறகுதான் சிறையில் நிலவிய சூழ் நிலையில் மாற்றம் வந்தது. சிறைக் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டார். பகவதி முருகன் என்பவர் கண் காணிப்பாளராகவும், மணி என்பவர் ஜெயிலராகவும் வந்தனர்.
“சென்னை மத்திய சிறையில்தான் இந்த நிலையே தவிர, வேலூர், திருச்சி சிறையில் இருந்த அரசியல் கைதிகள் தாக்கப்படவில்லை. சென்னை சிறையில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள்பற்றி, பின்னர் நீதிபதி இஸ்மாயில் விரிவாக விசாரணை நடத்தி, அரசியல் கைதிகள் தாக்கப்பட்டது பற்றியும், மோசமாக ‘நடத்தப்பட்டது' பற்றியும் விசாரணைக் கமிஷன் அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.
“எமர்ஜென்ஸியின்போது, அரசியலைச் சேர்ந்த சில ஆயிரம் பேர் பாதிப்புகளுக்கு ஆட்பட்டா லும், பெருவாரியான மக்களுக்கு இத்தகைய பாதிப்பின் தாக்கம் தெரியாததால், எமர்ஜென்ஸியின்போது ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கின; அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப் பயந்தார்கள்; கல்யாணங்கள்ஆடம்பரமாக நடத்தப்படக் கூடாது; குடும்பக் கட்டுப்பாடு - போன்ற அம்சங்கள் காரண மாக எமர்ஜென்ஸியைப் பாராட்டி, வரவேற்கும் நிலை இருந்தது.
‘‘ஆனால், ஜனநாயக நெறிமுறைகளுக்குப் புறம்பான நிகழ்வுகளுக்கும், சட்ட மீறல்களுக்கும் இடமளித்த எமர்ஜென்ஸி, ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது’’
தொகுப்பு: எஸ்.ரமேஷ்
(நன்றி: ‘துக்ளக்', 2.11.2016)
Read more:
நெருக்கடி நிலை பிரகடனம் செய் யப்பட்டதன் பின்னணி, அதன் பாதிப்புகள், மிசா கைதிகள் அனுபவித்த கொடுமைகள் பற்றி இப்பகுதியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நினைவு கூர்கிறார்:
“இந்தியாவில் நெருக்கடி நிலை 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி பிரகடனம் செய்யப்பட்டது. இந்த முடிவை அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி எடுப்பதற்கு அரசியல் போக்குகளும், சில சம்பவங்களும் காரணமாக அமைந்தன. லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய முழுமைப் புரட்சி இயக்கத்திற்குக் கிட்டிவந்த பரவலான ஆதரவு, சமஷ்டிபூர் ரயில் பாதையில் நடந்த குண்டுவெடிப்பில் அன்றைய ரயில்வே அமைச்சர் மிஸ்ரா உயிரிழந்தது, ஃபெர்னாண்டஸ் மீதான பரோடா டைனமைட் சதி வழக்கு ஆகியவை அச்சமயத்திய நிகழ்வுகளாகும்.
“நெருக்கடி நிலை கொண்டு வரப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக, அலஹாபாத் உயர்நீதி மன்றத்தில் ராஜ்நாராயணனால் தொடரப்பட்டிருந்த தேர்தல் வழக்கில், “ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது” என்று நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்திருந்தார். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதுதான் அவர் எமர்ஜென்ஸியைக் கொண்டு வரத் தூண்டுகோலாக அமைந்தது எனலாம். சித்தார்த்த சங்கர் ரே, தினேஷ் சிங், சஞ்சய் காந்தி ஆகியோர் இந்த ஆலோசனையை அவருக்குத் தெரிவித்ததாகவும் பேச்சு இருந்தது. அலஹாபாத் தீர்ப்பை செல்லாத தாக்கும் வகையில் இந்திரா காந்தி சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்.
“நீதிபதிகள் இடமாற்றம், ஸினியாரிட்டியை மீறி தலைமை நீதிபதி நியமனம் ஆகியவற்றை அவரது அரசு மேற்கொண்டதோடு, அரசியல் சட்டத்தின் பேச்சுரிமை, எழுத்துரிமை சம்பந்தப் பட்ட பிரிவுகளில் கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டன. ‘உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம்“ என்று சொல்லக் கூடிய,  விமிஷிகி (விணீவீஸீtமீஸீணீஸீநீமீ ஷீயீ மிஸீtமீக்ஷீஸீணீறீ ஷிமீநீuக்ஷீவீtஹ் கிநீt) அமலுக்கு வந்தது. எனக்குத்தெரிந்து எமர்ஜென்ஸியை இரு மாநில அரசுகள்தான் - தமிழ்நாடும், குஜராத்தும்தான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒழுங்கீனமான முறையில் இரு தீவுகள் போல் தமிழ்நாடும், குஜராத்தும் இருப்பதாக இந்திராகாந்தி விமர்சித்தார். முன்னதாக எமர்ஜென்ஸியை ஆதரிக்கும்படி கோரி அன்றைய தமிழக முதல்வர் கலைஞருக்கு இந்திரா காந்தி தூது அனுப்பினார். ஆனால், கலைஞர் அதை ஏற்கவில்லை. ‘எமர்ஜென்ஸியை எதிர்த்து தி.மு.க. கண்டனக் கூட்டமும் நடத்தியது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான், தி.மு.க. ஆட்சி மீது குற்றச்சாட்டுகளைக் கூறி எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த மனுவுக்கு உயிரூட்டி, தி.மு.க. ஆட்சி யைக் கலைக்கும் முடிவை இந்திரா காந்தி எடுத்தார். “யாரை எல்லாம் அரசு தேடுகிறதோ, அவர்களுக்கு தமிழ்நாடு அடைக் கலம் தருகிறது (ஜிணீனீவீறீஸீணீபீu லீணீs தீமீநீஷீனீமீ sணீஸீநீtuக்ஷீணீக்ஷீஹ்) என்றும் குற்றச் சாட்டு கூறப்பட்டது. குறிப்பாக ஃபெர் னாண்டஸுக்கு இங்கே அடைக்கலம் தந்ததாகக் கூறப்பட்டது. 1976  ஜனவரி 31 ஆம் தேதி தி.மு.க. ஆட்சி இங்கு கலைக்கப்பட்டது. ‘
“தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை எமர்ஜென் ஸியின் பாதிப்புகள் இங்கே பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், ஆட்சி கலைப்புக்குப் பிறகு அதன் விளை வுகள் கடுமையாக வெளிப்பட்டன.
“ஜனவரி 31 ஆம் தேதி திண்டிவனத்தில் நடந்த திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மணியம்மையாருடன் நானும் சென்றிருந்தேன். நான் பேசி முடித்து விட்டு கீழே இருந்தபோது, சென்னையிலிருந்துதொலைபேசிமூலம்தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாகக் கிடைத்த செய்தியை, ஒரு துண்டுச் சீட்டில் எழுதி என்னிடம் கொடுத் தார்கள். நான் உடனே மணியம்மையாரிடம் அதைக் கொடுத்தேன். அவர் இதைக் கூட்டத்தில் அப்படியே படித்து விட்டு, நாம் மேலும் சோதனை களைச் சந்திக்கவேண்டி வரலாம். கட்டுப்பாடுடன் செயல்படுவோம்‘’ என்று கூறினார்.
‘‘திண்டிவனத்திலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு சென்னைதிரும்பியதும்,பெரியார்திடல் அமைந் துள்ள பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர். திடலுக்கு வந்ததும் ஒரு உயர் போலீஸ் அதிகாரி, என்னைக் கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினார். என்னோடு விடுதலை மேலாளர் சம்பந்தம் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் மாலைதான் எங்களை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர். கமிஷனர் அலுவலகத்தில் நாங்கள் இருந்த போதுதான் நீலநாராயணன், ஆசைத்தம்பி, ஆர்.டி.சீதாபதி, எம்.ஆர்.ராதா என்று ஒவ்வொருவராகக் கைது செய்து அழைத்து வந்தனர். வீட்டில் இருப்பவர்களுக்கு, நாங் கள் எங்கிருக்கிறோம் என்பது தெரியாது.
‘‘அப்போதுசென்னைமத்தியசிறையில் வித்யாசாகர் என்பவர் சிறைக் கண்காணிப்பாள ராகவும், கயூம் என்பவர் ஜெயிலராகவும் இருந்தனர். அரசியல் கைதிகளை, குறிப்பாக தி.மு.க.வினரையும், எங்களையும் மோசமாக நடத்தத் தொடங்கினர். 9 ஆவது பிளாக் என்ற, தொழுநோயாளிகள் வைக் கப்பட்டிருந்த கொட்டடியில் எங்களை அடைத்தனர். ஸ்தாபன காங்கிரஸைச் சேர்ந்த மாரிசாமி, கொண் டல்தாசன், மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஹரிபட் ஆகியோர் சிறையில் இருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எமர்ஜென்ஸியை ஆதரித்ததால், அக்கட்சியைச் சேர்ந்த யாரும் மிசாவில் கைதாகவில்லை.
‘தினமும் மதியம் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு மட்டும்தான் கதவைத் திறப்பார்கள். குளிக்காமல், உடை மாற்ற முடியாமல், உள்ளாடையை மாற்ற முடியாமல் தொடர்ச்சியாக 3 நாட்கள் நான்  இருக்க நேர்ந்தது  மிசாவில் சிறைப்பட்ட போதுதான். பிப்ர
வரி 2 ஆம் தேதி “ரோல் கால் என்று வெளியே அழைத்து, ஒவ்வொருவரையும் குண்டாந்தடியால் நையப் புடைத்து, நடக்க முடியாமல் உள்ளே அனுப்பினார்கள். மரியாதைக் குறைவாக, கேவலமான சொற்களால்தான் அழைத்தார்கள்.
‘விடுதலை சம்பந்தம் முதுகுத் தண்டில் ஆப ரேஷன் செய்தவர் என்பதால், அவரை அடித்த போது, “வேண்டாம் அவரை விட்டு விடுங்கள் என்று நான் தடுத்ததற்கு, இழிவாக என்னைத் திட்டி, நீ என்னடா வக்காலத்தா? என்று என்னையும் கேட்டு  அடித்தார்கள். முரசொலி அடியார், ஆர்க்காடு வீரா சாமி, முன்னாள் மேயர் சிட்டிபாபு, கோடம் பாக்கம் குமார் ஆகியோர் சிறைக் காவலர்களால் மோசமாகத் தாக்கப்பட்ட னர்.
“ஒருநாள் இரவு 11 மணிக்கு மேல் என் அறைக் கதவு திறக்கப்பட்டு, என் கால்மீது ஏதோ விழுந்தது போன்ற சப்தம். எழுந்து பார்த்தால், ஒரு உருவம். ‘யார் என்று குரல் கொடுத்தேன். அப்படி என் மீது விழுந்தவர் மு.க.ஸ்டாலின். அவரது உடல் முழுவதும் பிரம்படி அடையாளம்.
“சிறை யில் சில ரை மோசமாகத் தாக்கியதோடு, உணவிலும் சிறுநீர் கலந்து கொடுத்து, அதனாலும் சிலரது உடல்நிலை கெட்டது. சிறைக்குள் இந்த நிலை என்றால், வெளியே பத்திரிகைச் செய்தி களில் கடும் தணிக்கை அமலானது. சென்னையில் இருந்த பி.ஐ.பி. அலுவலகத்தில், பத்திரிகைகளில் இடம் பெறும் செய்திகளை முன்கூட்டியே காட்டி ஒப்புதல் பெற வேண்டும். பத்திரிகைகள் அங்கு தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளை வெளியிடக் கூடாது. உதாரணமாக, “விடுதலையில் தந்தை பெரியார்'' என்று குறிப்பிடக் கூடாது; பெரியார் என்று மட்டுமே வெளியிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். ஆனால், மணியம்மையார் உத்தரவுப்படி தந்தை பெரியார் என்றே வெளியிட்டு வந்தோம்.
“அப்போது தி.மு.க. தலைவர் கலைஞர், யாரெல்லாம் மிசாவில் கைதாகியிருக்கிறார்கள் என்பதை எப்படி வெளிப்படுத்தினார் என்றால், அண்ணா நினைவு நாளுக்கு வர இயலாதவர்கள் என்று முரசொலியில் அவ்ர்களின் பெயர்களைப் பட்டியலிட்டார்.
“சிறையில் இருந்தவர்களிடம், நீங்கள் எல்லாம் எப்போது விடுதலை ஆவீர்கள் என்பதோ, உயிரோடு தான் அனுப்பப்படுவீர்களா என்பதோ தெரியாது” என்று வித்யா சாகர் மிரட்டினார். “எங்களை மன்னித்து விடுங்கள்; கட்சியை விட்டு விலகி விடுகிறோம் என்று எழுதிக் கொடுத்தால் வெளியே போய் விடலாம்'' வெள்ளைக் காகிதங்களைக் கொடுத்து மனமாற்றம் செய்யும் முயற்சியும் நடந்தது.
‘பின்னர் சில மாதங்கள் கழித்து கவர்னரின் ஆலோசகராக இருந்த சுப்ரமணியம் சென்னை சிறைக்குவந்தபோது,அவரிடம்நானும், மாறனும் சிறைக் கொடுமைகள் பற்றி ஒரு மகஜர் அளித்தோம். அதன்மீது ஒரு விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். அதன் பிறகுதான் சிறையில் நிலவிய சூழ் நிலையில் மாற்றம் வந்தது. சிறைக் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டார். பகவதி முருகன் என்பவர் கண் காணிப்பாளராகவும், மணி என்பவர் ஜெயிலராகவும் வந்தனர்.
“சென்னை மத்திய சிறையில்தான் இந்த நிலையே தவிர, வேலூர், திருச்சி சிறையில் இருந்த அரசியல் கைதிகள் தாக்கப்படவில்லை. சென்னை சிறையில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள்பற்றி, பின்னர் நீதிபதி இஸ்மாயில் விரிவாக விசாரணை நடத்தி, அரசியல் கைதிகள் தாக்கப்பட்டது பற்றியும், மோசமாக ‘நடத்தப்பட்டது' பற்றியும் விசாரணைக் கமிஷன் அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.
“எமர்ஜென்ஸியின்போது, அரசியலைச் சேர்ந்த சில ஆயிரம் பேர் பாதிப்புகளுக்கு ஆட்பட்டா லும், பெருவாரியான மக்களுக்கு இத்தகைய பாதிப்பின் தாக்கம் தெரியாததால், எமர்ஜென்ஸியின்போது ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கின; அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப் பயந்தார்கள்; கல்யாணங்கள்ஆடம்பரமாக நடத்தப்படக் கூடாது; குடும்பக் கட்டுப்பாடு - போன்ற அம்சங்கள் காரண மாக எமர்ஜென்ஸியைப் பாராட்டி, வரவேற்கும் நிலை இருந்தது.
‘‘ஆனால், ஜனநாயக நெறிமுறைகளுக்குப் புறம்பான நிகழ்வுகளுக்கும், சட்ட மீறல்களுக்கும் இடமளித்த எமர்ஜென்ஸி, ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது’’
தொகுப்பு: எஸ்.ரமேஷ்
(நன்றி: ‘துக்ளக்', 2.11.2016)
-விடுதலை,4.11.16

கருத்துகள் இல்லை: