ஞாயிறு, 17 மார்ச், 2019

அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் . நீண்ட இழுபறிக்குப்பின் பட்டியல் வெளியீடு!

அ.தி.மு.க (20) – சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி) பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும். பா.ம.க (7) – தர்மபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் பா.ஜ.க ( 5) – கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை தே.மு.தி.க (4) – கள்ளக்குறிச்சி, வடசென்னை, திருச்சி, விருதுநகர் புதிய தமிழகம் (1) – தென்காசி தமிழ் மாநில காங்கிரஸ் (1) – தஞ்சாவூர் புதிய நீதிக்கட்சி (1) – வேலூர் என்.ஆர்.காங்கிரஸ் (1) – புதுவை ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி
கூட்டணி
vikatan.com -கலிலுல்லா.ச : நீண்ட இழுபறிக்குப்பின் அ.தி.மு.கவின் தொகுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.
தமிழகத்தில் கடந்தாண்டு இறுதி முதலே தேர்தல் ஜீரம் தொடங்கிவிட்டது. தாங்கள் யாருடன் கூட்டணி சேர்கிறோமோ, அந்த கட்சிகள் மீதான விமர்சனத்தை தவிர்த்துக்கொண்டன தமிழக அரசியல் கட்சிகள். இதன் மூலம், ஓரளவு திராவிடக்கட்சிகளுடன் யார் யார் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்பதை யூகிக்க முடிந்தது. அதனைத்தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கின. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசி வந்தபோது, கிரவுண்ட் பிளாசாவில் அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி ஓகே ஆனது.  இப்படி தி.மு.கவுக்கு முன்பே கூட்டணி ரேஸில் வேகமெடுத்தது அ.தி.மு.க. தொடர்ந்து அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், இணைந்த பின்பு, தே.மு.தி.கவுடனான பேச்சுவார்த்தை மட்டும் இழுபறியிலே சென்றது.

பல கட்டப்பேச்சுவார்த்தைக்குப் பின்பு, இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும், தொகுதி ஒதுக்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டதால், தேர்தல் ரேஸில் பின்தங்கியது அ.தி.மு.க. கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது தொகுதி பட்டியலை தி.மு.க வெளியிட்டது. இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அ.தி.மு.கவைப்பொறுத்தவரை தே.மு.தி.கவும், பா.ம.கவும் ஒரே தொகுதிகளை கேட்டு வந்தது, தொகுதி பங்கீட்டில் தலைமைக்கு தலைவலியை கொடுத்தது. இதன் காரணமாக நேற்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசி தொகுதி பங்கீட்டு குறித்து தெளிவுபடுத்தினார் எடப்பாடி பழனிசாமி.இந்நிலையில் எந்தெந்த தொகுதிகள், எந்ததெந்த கட்சிகளுக்கு என்ற தொகுதி பட்டியலை வெளியிட்டுள்ளது அ.தி.மு.க.
அதிமுக
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தொகுதி பங்கீடு அறிவிப்பை அ.தி.மு.க அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை வாசித்தார்.அதன்படி,
தொகுதி ஒதுக்கீடு
அ.தி.மு.க (20) – சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி) பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும்.
பா.ம.க (7) –  தர்மபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம்
பா.ஜ.க ( 5)  –  கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை
தே.மு.தி.க (4)  – கள்ளக்குறிச்சி, வடசென்னை, திருச்சி, விருதுநகர்
புதிய தமிழகம் (1) – தென்காசி
தமிழ் மாநில காங்கிரஸ் (1) – தஞ்சாவூர்
புதிய நீதிக்கட்சி (1) –  வேலூர்
என்.ஆர்.காங்கிரஸ் (1) – புதுவை
ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், தி.மு.க – அ.தி.மு.க 8 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகின்றன. அவை, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, நெல்லை ஆகிய தொகுதிகள் களம்காண்கின்றன.
vikatan.com

கருத்துகள் இல்லை: