மின்னம்பலம் :
காஷ்மீரிலுள்ள சிஆர்பிஎஃப் முகாமில் வீரர் ஒருவர் சுட்டதில், அவருடன் பணியாற்றிய மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) முகாம் அமைந்துள்ளது. நேற்று (மார்ச் 20) இரவு 10 மணியளவில், இந்த முகாமிலிருந்த 187ஆவது பட்டாலியனைச் சார்ந்த வீரர்கள் நான்கு பேருக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அஜித்குமார் என்ற சிஆர்பிஎஃப் வீரர் தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களைச் சுட்டார்.
இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த பொகர்மல், டெல்லியைச் சேர்ந்த யோகேந்திர சர்மா, ஹரியானாவைச் சேர்ந்த உமேத் சிங் ஆகியோர் இறந்துபோனது தெரியவந்துள்ளது. மூன்று பேரைச் சுட்டதுடன், அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார். இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அஜித்குமார் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்.
தகவல் அறிந்ததும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மோதல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அங்குள்ள வீரர்களிடம் விசாரணை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக