சனி, 23 மார்ச், 2019

தமிழக புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு .. சிவகங்கை. இன்னும் அறிவிக்கப்படவில்லை

தேனி-  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
திருச்சி - திருநாவுக்கரசர்
திருவள்ளுர் -  கே.ஜெயகுமார்
புதுச்சேரி- வைத்தியலிங்கம்
கன்னியாகுமரி - எச்.வசந்தகுமார்
ஆரணி  டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத்
கரூர் ஜோதி மணி
விருதுநகர் -  மாணிக்கம் தாகூர்
கிருஷ்ணகிரி -  டாக்டர் ஏ.செல்வகுமார்
சிவகங்கை இன்னும்அறிவிக்கப்படவில்லை
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
மாலைமலர்  : தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும், திருவள்ளுர் தொகுதியில் கே.ஜெயகுமார், புதுச்சேரி தொகுதியில் வைத்தியலிங்கம், கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார், ஆரணியில் டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத்தும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கரூரில் தொகுதியில் ஜோதி மணி என்பவரும், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கிருஷ்ணகிரியில் டாக்டர் ஏ.செல்வகுமாரும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை

கருத்துகள் இல்லை: