வெப்துனியா :தினகரனின் கட்சியான அமமுக, அதிமுக அணிகளில்
ஒன்று என நீதிமன்றம் கூறியிருந்தாலும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்
அக்கட்சி, தொண்டர்களின் அதிருப்திக்கு ஆளாகி வந்தது. 18 எம்.எல்.ஏக்கள்
தகுதி நீக்கத்திற்கு பின் தினகரனிடம் இருந்து அக்கட்சியின் முக்கிய
பிரமுகர்கள் பிரிந்து செல்ல தொடங்கினர்.
>குறிப்பாக தினகரனின் வலது கை போல்
செயல்பட்டு வந்த செந்தில்பாலாஜி, திமுகவிற்கு சென்றது அமமுகவின் பெரும்
பின்னடைவு ஆகும். இந்த நிலையில் தற்போது அமமுகவின் இன்னொரு பிரமுகருமான
விபி கலைராஜனும் திமுகவில் இணையவுள்ளார்.>திருச்சியில் நாளை திமுக
தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விபி கலைராஜன் திமுகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
முன்னதாக அம்மா மக்கள் முன்னெற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.<
முன்னதாக அம்மா மக்கள் முன்னெற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக