புதன், 20 மார்ச், 2019

தேர்தல் ஆணையத்தின் அடாவடி .. அதிமுக பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் கமலுக்கு கேட்ட சின்னங்கள் தாராளம் .. ஏனைய கட்சிகளுக்கு?

தினமலர் :தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, அவை
ஏற்கனவே போட்டியிட்ட, பழைய சின்னம் கிடைக்காததால், அதிர்ச்சியில் உள்ளன. தி.மு.க., கூட்டணியில், காங்., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொ.ம.தே.க., ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இவற்றில், தேசிய கட்சிகளான காங்., கம்யூ., கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள், அக்கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவதில், சிக்கல் இல்லை. ஏனெனில், அவை தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்றவை.தி.மு.க.,வும் அங்கீகாரம் பெற்ற கட்சி என்பதால், சின்னம் பிரச்னை இல்லை. மற்ற கட்சிகள், தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெறாதவை.
எனவே, தி.மு.க., சின்னத்தில் போட்டியிடும்படி, < அக்கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், தி.மு.க., சின்னத்தில் போட்டி யிட்டால், அக்கட்சியின் வேட்பாளர் கணக்கில்சேருவர் என்பதால், அதை கூட்டணி கட்சிகள் தவிர்த்தன. தற்போது, அக்கட்சிகளுக்கு, ஏற்கனவே அவை போட்டியிட்ட சின்னத்தை பெறுவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த தேர்தல் களில், 'மோதிரம்' சின்னத்தில் போட்டியிட்டது. இம்முறை, மோதிரம் சின்னம், வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், விடுதலை சிறுத்தைகளுக்கு கிடைக்கவில்லை.அதைத் தொடர்ந்து, அக்கட்சி சார்பில், 'வைரம் அல்லது பலாப்பழம்' சின்னம் கேட்கப்பட்டது. அவையும், வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


கடைசியாக, 'மேஜை' சின்னத்தை கேட்டனர்; அதுவும்ஒதுக்கப்படவில்லை. எனவே, விழுப்புரம் தனித் தொகுதியில், அக்கட்சி சார்பில் போட்டியிடும் ரவிகுமார், தி.மு.க.,வின் சின்னத்தில், களம் இறங்க உள்ளார்.அக்கட்சி தலைவர் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில், தேர்தல் ஆணையம், எந்த சின்னத்தை ஒதுக்குகிறதோ, அதில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இந்திய ஜனநாயக கட்சியும், உதயசூரியன்
சின்னத்தில், களம் இறங்க உள்ளது. ம.தி.மு.க., விற்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு ள்ளது.

பிரச்னை



அக்கட்சிக்குரிய, 'பம்பரம்' சின்னம் கிடைப்ப திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, அவை கேட்ட சின்னம் கிடைத்து விட்டதால், அங்கு பிரச்னை எழவில்லை. த.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னமும், பா.ம.க., வுக்கு மாம்பழம் சின்னமும் கிடைப்பது, உறுதியாகி உள்ளது.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: