புதன், 23 ஜனவரி, 2019

ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக சமுகவலையில் புயல்


உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
வினவு :சென்னை லயோலா கல்லூரி அண்மையில் வீதி விருது விழாவை நடத்தியது. இதில் தோழர் முகிலனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை வினவு தளத்தில் ஏற்கனவே வெளியானவைதான் என்றாலும் இந்துத்துவ கோஷ்டி, லயோலா என்ற கிறித்துவ கல்லூரி நிகழ்ச்சியில் பாரத் மாதாவை ‘இழிவாக’ சித்தரிப்பதாகக் கூறியது. குருமூர்த்தி, எச்.ராஜா, தமிழிசை போன்ற தமிழக காவிப்படையின் தலைகள் இந்து அடையாளங்களையும் பாரத் மாதாவையும் புண்படுத்தியதாக பேசினார்கள்.மத சிறுபான்மையினரை குறிவைத்து காத்திருக்கும் காவி கும்பல் இதுதான் வாய்ப்பென்று லயோலா கல்லூரிக்கு எதிராக களமாடத் தொடங்கியது. ஓவியங்களை காட்சிப் படுத்திய ஒரே காரணத்துக்காக கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றது.  ட்விட்டரில் உள்ள அத்தனை காவிப் படையும் திட்டமிட்டதுபோல், இந்த விசயத்தை வைத்து நாள் முழுக்கவும் களமாடியது. இது சர்ச்சையாக்கப்பட்டு தேசிய ஊடகங்களில் செய்தி ஆனது.

மோடி ஆதரவு தளமான யாஹூ தளத்தின் முகப்பில் இந்த சர்ச்சை குறித்த செய்தி வெளியானது. த வயர், த வீக், இந்தியன் எக்ஸ்பிரஸ், த க்விண்ட் உள்ளிட்ட தளங்களில் காவி கும்பலின் கருத்துரிமை அத்துமீறல் செய்தியானது.
இவர்களின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு பலியாகக்கூடாது என்று லயோலா நிர்வாகம் மன்னிப்புக் கேட்டதோடு, தோழர் முகிலனின் ஓவியங்களை விலக்குவதாக அறிவித்தது. ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வு நடந்து முடிந்துவிட்டது வேறு விஷயம். அதோடு, ஓவியங்கள் விலக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் தமிழ் முகநூல் முகிலனின் ஓவியங்களை வைரலாக்கியது. ஒவ்வொரு ஓவியத்தை பகுப்பாய்வு செய்து பலர் எழுத ஆரம்பித்தனர். சமகால அரசியலின் நிலையை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது எனவும்  தங்களுடைய எண்ணவோட்டத்தை இந்த ஓவியங்கள் பிரதிபலிப்பதாகவும் சிலாகித்து எழுதினர்.
வழக்கம்போல, சங்கிகளின் பிடியில் இருக்கும் அறிஞர்கள் – ஊடகவியலாளர்கள் இப்படியெல்லாம் செய்யலாமா? என்றார்கள். புதிய தலைமுறையில் பணியாற்றும் மனோஜ் பிரபாகர் என்ற ‘பத்திரிகையாளர்’,  ‘லயோலாவின் செயலில் வெட்கமடைவதாகவும் மற்ற மதத்தினரின் சென்டிமெண்டை தாக்கக் கூடாது. ஒற்றுமையை குலைக்க வேண்டாம். கருத்துக்களை சொல்வது வேறு, வேண்டுமென்ற மற்ற மதத்தினரை புண்படுவது வேறு’ என தனது ட்விட்டரில் வியாக்கியானம் பேசி முற்போக்கு பிரிவினரிடமிருந்து செருப்படி வாங்கினார்.
அதில் ஒரு எதிர்ப்புக்குரல், “டேய் வெண்ணை, ஒட்டு மொத்த மதத்தையே ஒரு கும்பல் அரசியல் பெயரால் ஹைஜாக் செய்த போது நவ துவாரத்தையும் மூடிட்டுதானே இருந்தே. நீ யோக்கியசிகாமணி #NotinmyName நு ஒரு எதிர்குரல் கொடுத்து இருப்பியா.” எனக் கேட்டது.
ரேகா கண்ணதாசன் என்பவர், “இந்து மதத்தை ஏற்காத மற்ற மத பெண்களை கற்பழிக்கும் நல்வாய்ப்பை அருள கேட்கிறார் அப்பர் பெருமான். இது சரியா ? நீங்கள், நான் எல்லாம் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்ற கேவலமான இந்து மத கருத்துக்கு அவர்கள் என்றாவது வருத்தம் கோரியது உண்டா ?” என கேட்ட கேள்விக்கு சங்கி பத்திரிகையாளரிடமிருந்து பதில் இல்லை.


ஓவியர் முகிலன்.
அதுபோல முகநூலில் லிபரல் பார்ப்பனர்கள் சிலர், ‘கண்டீசன்ஸ் அப்ளை’யுடன் கருத்து சுதந்திரத்துக்கு குரல் கொடுத்தனர்.  ஆனால், எப்போதுமே சங்கிகளை ஓட ஓட விரட்டும் தமிழ் முகநூலில் தோழர் முகிலனின் ஓவியங்களுக்கு ஆர்ப்பரிப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
வி.உ. இளவேனில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தோழர் முகிலனின் சித்திரங்களை பகிர்ந்து ஒவ்வொன்றுக்கும் ஆழமான தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
ஒக்கி புயலின் போது தனது குடிமக்களை காக்க வராத இந்தியத்தை கேள்வி கேட்கும் விதமாக வரையப்பட்ட ஓவியத்தை பகிர்ந்து “பேருக்குத்தான் இந்தியா; கதறும்போது வந்தியா?” எனக் கேட்டிருக்கிறார் இவர். முகநூலில் ஒலித்த ஆதரவு குரல்கள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்…
சம்சுதீன் ஹீரா:
அதாகப்பட்டது கள நிலவரம் சொல்வது என்னவென்றால்…
உண்மையில் இந்துக்கள் எனப்படும் சாதாரன மக்கள், இந்த பாரத மாதா கோஷ்டி மீதுதான் கொலைவெறியில் இருக்கிறார்கள்…!! ‘இந்துக்கள் மனம் புண்படுகிறது’ என்று இவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதெல்லாம் ஹிந்தி மாநிலங்களில் எடுபடலாம்.. இது கிழவன் கைத்தடியால் பக்குவமாக்கப்பட்ட மண்..!! எந்தப்பருப்பும் வேகாது..!!
ராஜ் அருண்:
முகிலனின் ஓவியத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அராஜகத்தையும் இந்துத்துவா அஜெண்டாவின் நேர்மையற்ற தன்மையும் மோடியின் கார்ப்ரேட் மற்றும் அமெரிக்க சார்பும் பாரதமாதாவை பன்னாட்டுகள் நிறுவனங்கள் ஆக்கிரமத்தையும் ஆணவ படுகொலையும் மீத்தேன், ஸ்டெர்லைட் விசயத்தில் அரசு செய்த கொடுமையும் தான் இருக்கு. நேரடியா பாஜக அரசின் தோல்வியை ஒத்துக்கொள்ள பயந்து இந்து மதத்தை கேவலபடுத்திட்டாங்க, அது கிறிஸ்தவ அமைப்புன்னு கம்பு சுத்துறானுங்க. கடைசி வரைக்கும் டவுசர் பாய்ஸ்க்கு மூளை வளர சான்ஸே இல்ல
பேரா. அருணன்:
லயோலா கல்லூரியை மூடணுமாம்! பாஜக பிராமணியவாதிகள் குமுறுகிறார்கள்! பஞ்சமர்களும் சூத்திரர்களும் படிச்சாலே இவங்களுக்கு பிடிக்காதே!
ரபீக் ராஜா:
முதலாளித்துவச் சார்பு படைப்பாளிகளே….கலைவழி அரசியல் பேசுதலே முதன்மை! ஓவியர் முகிலன் பேசியிருக்கிறார்! காவிக்கூடாரம் அலறுகிறது!
மாதவராஜ்:
இந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போவது பாரத மாதாவுக்கு நேர்ந்த அவமானமாகத் தெரியவில்லை. இந்த நாட்டின் கடனை தாறுமாறாக அதிகரிக்கச் செய்தது பாரத மாதாவை படுத்திய கேவலமாகத் தெரியவில்லை. இந்த நாட்டின் போர் விமானங்களை வாங்குவதில் ஊழல் செய்தது பாரத மாதாவுக்கு ஏற்பட்ட அசிங்கமாகத் தெரியவில்லை.
இந்த நாட்டின் வளங்களையும், செல்வங்களையும் ஒரு சிலரே சுரண்ட அனுமதித்து அவர்களுக்கு பிரதம சேவகம் செய்தது பாரதமாதாவுக்கு செய்த அயோக்கியத்தனமாகத் தெரியவில்லை.
இந்த நாட்டின் சுயமரியாதையை, சயச்சார்பை அடகுவைத்து அமெரிக்காவிடம் வாலாட்டிக் கொண்டு நிற்க வைத்திருப்பது பாரத மாதாவுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகத் தெரியவில்லை.
இதையெல்லாம் படமாக வரைந்தால் மட்டும் பாரதமாதாவுக்கு ஏற்பட்ட களங்கமாகத் தெரிகிறதாம். போங்கடா, நீங்களும் உங்கள் பாரத மாதாவும்!
#WeSupportLoyala #WeSupportFreedomofExpression
சதீஷ் செல்லதுரை:
நான் பார்த்தவரை எந்த சங்கியும் முகிலனின் ஓவியங்களுக்கு பதிலாக எந்த கருத்தும் தர்க்கரீதியான மறுப்பும் கூறியதாக தெரியவில்லை. லயோலா கிருத்துவ கல்லூரி என பாரத மாதாவை வைத்து இந்து கிருத்துவ அரசியல் செய்ய மட்டுமே முற்படுகின்றனர். வசை பாடியுள்ளனர். புண்பட்டதாக புலம்புகின்றனர். ஆனால் அதன் பின்னாலிருக்கும் உண்மையை மறுக்கவில்லை.அல்லது இயலவில்லை.
ஆதவன் தீட்சண்யா:
தோழர் முகிலனின் ஓவியங்களை பரவலாக்கும் பொறுப்பை திறம்பட நிறைவேற்றிவரும் சங்கிகளுக்கு பாராட்டுகள்.
கருப்பு நீலகண்டன்:
சமூகப் பணியாளர்கள், பேராசிரியர் காளீஸ்வரனையும் ஓவியர் முகிலனையும், “வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள் ” என தொடர்ந்து தலித்துகளை போதிய அளவிற்கு தமது கல்வி நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளாத கல்வி நிறுவனமென்றபோதிலும் ஜனநாயக வெளியில் ஒரு சிறும்பான்மை சமூக கல்விநிறுவனத்தை பாதுகாப்பது பெரியார்- அம்பேத்கரியவாதிகளின் கடமை என்கிற பொறுப்பில் திறன்மிகு லொயோலா கல்லூரியையும் இந்துத்துவ ஆதிக்க ஜாதிவெறியர்களிடம் பாதுகாப்போம் நண்பர்களே!!
பிரபாகரன் அழகர்சாமி:
புரட்சிகர ஓவியர் தோழர் முகிலன் மிகவும் அற்புதமான ஒரு கலைஞர். அவருக்கான சரியான வெகுமக்கள் அங்கீகாரம் இன்றுதான் கிடைத்திருக்கிறது எனலாம். லயோலா வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அவருடைய ஓவியங்களை தொகுத்து சிறப்பான அச்சாக்கத்தில் ஒரு தனி நூலாக கொண்டுவரவேண்டும். அவை வரலாற்றின் சாட்சியங்கள் !
ஒடியன் லட்சுமணன்:
லயோலாவில் வைக்கப்பட்டிருந்த ஒவியங்கள் குறித்து கலையைப்போற்றும் முகாமுக்குள்ளேயே தவறு சரி என்று எதிரும் புதிருமாக எழுந்த கருத்துக்கள் அடிபடத்தொடங்கியிருக்கிறது. சிலர் அது சரி என்பதற்கான விமர்சனங்களை கூர்மையாக எழுப்புகிறார்கள். அது ஸ்பெசலிஸ்டுகளின்  சிகிச்சை என்று எடுத்துக்கொள்கிறேன். சிலர் மட்டையடி அடிக்கிறார்கள் அதை முரட்டுவைத்தியம் என்று எடுத்துக்கொள்கிறேன். எல்லா நோயாளிகளும் ஒருவகையினர் அல்ல. சிலர் சிகிச்சை நடைபெற்ற இடத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளை சொல்லியிருந்தார்கள் அது கவனிக்கப்படவேண்டியதே.
சிலர் சில மருந்துகள் ஓவர்டோஸ் என்கிற குற்றச்சாட்டை வைத்திருந்தார்கள். இதற்கு பதில் சொல்லும் செந்தில் அரசுவின் மூன்று நிலைத்தகவலைப்பார்க்கலாம்
இது முதல் நிலைத்தகவல்
உண்மையிலேயே உனக்கு உன் மதம் மேல் நம்பிக்கை இருந்தா, மரியாதை இருந்தா நீ என்ன செய்யணும்? பிஜேபி, சங்கிகள்ட்ட எங்க மத அடையாளங்கள் எங்களுக்கு முக்கியம். அவைகளைப் பயன்படுத்தி அரசியல் செய்யாதீங்க.
உங்களை எதிர்ப்பவர்கள் எங்கள் மத அடையாளங்களையும் சேர்த்து எதிர்த்து புண்படுத்துகிறார்கள். ஆகவே எங்கள் மதத்து திரிசூலம், காவி, ராமன், அனுமன், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி இன்ன பிற நாங்கள் வணங்கும் கடவுள்களை, அதன் அடையாளங்களை வைத்து அரசியல் லாபத்திற்காக பொது சமூகத்திற்கு எதிரான வன்முறையை, கலவரத்தை, கொள்கைத் திணிப்புகளைச் செய்யாதீர்கள். என்று தான சொல்லணும்?
ஆனா நீ அத செய்யாம, அதற்கு எதிர்வினை செய்யுறவங்க கிட்ட வந்து “என் மதத்தை நீ புண்படுத்திட்டன்னு மட்டும்தான கூவுற’ அப்படீன்னா பிரச்சன யார் கிட்ட?…
இது செந்தில் அரசுவின் இரண்டாவது நிலைத்தகவல்
முதன் முதலாக தமிழகத்திலிருந்து சங்கிகளை இடுப்புக்குக் கீழாக இப்படி இறங்கி அடித்த ஓவியங்களை இப்போதுதான் பார்க்கிறேன். மதம் எல்லாம் அதில் ஒன்றும் இல்லை. இந்துத்துவ சக்திகளை சவட்டி எடுத்துருக்காப்ல.
மதம் புண்படுத்தப்பட்டது என்று கூறுபவர்கள் தம் இந்துத்துவ ஆதரவை நேரடியாக அல்லது மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். கேட்டால் பிஜெபியை ஆர்.எஸ்.எஸ் ஐ விமர்சியுங்கள், ஏன் எங்கள் மதத்தை என்று இழுக்கிறார்கள்.
நேரடியாக ஆதரிப்பவரை விட்டு விடலாம். மறைமுகமாக அல்லது அறியாமல் மதம் புண்பட்டதாக அரற்றுவோர்களுக்கு..ஒன்று சொல்லவேண்டும். நீங்கள் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள். அவ்வளவுதான்.
இது செந்தில் அரசுவின் மூன்றாவது நிலைத்தகவல்
சிதறிய ரத்தத்தின் அடர் சிவப்பு நிற வண்ணம் எந்த ஓவியங்களிலும் காண முடியாதது.
தலையில் காவிப்பட்டை, கையில் சூலம் வாள் ஈட்டி ஏந்தித்தானே கலவரங்கள் செய்து உயிர்களைப் பறித்தார்கள்.
வெறும் கண்டன ஓவியங்களுக்காய் இப்போது புண்பட்டதாய் அரற்றும் உனக்கு அன்று நடந்த கொலைகள் குறித்த குற்ற உணர்ச்சி இருக்கிறதா? ஆம் அது குறித்த குற்ற உணர்ச்சி இருந்தால். நீ ஏன் புண்படப் போகிறாய்?
கவிதா சொர்ணவல்லி :
on serious note…தமிழ்நாட்டின் ஒரு கல்லூரியில், நிகழ்த்தப்பட்ட படைப்பு சுதந்திரத்திற்கு எதிரான காவிகளின் அராஜகத்திற்கு, நாம் பணிந்து போயிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் என்பது, மன்னிப்பு கேட்காவிட்டால் கல்லூரிக்கு ஆபத்து வருமோ என்று லயோலா நிர்வாகத்தை பீதியடைய வைக்கிற அளவிற்கு பலவீனமாக இருக்கிற அரசையும் சேர்த்துதான். அதே போல அரசின் கட்டுப்பாட்டில் வரும் பெரியார் பல்கலைகழகத்தில் வலதுசாரி சிந்தனையுடையோர் அனுமதிக்கப்படுவதும், இடதுசாரிகள் மறுக்கப்படுவதும், இந்த “நாமிற்குள்” அடக்கம். தாமரை மயிரில்தான் மலரும் என்று மிக அசட்டையாக கடந்து போகிறோம் நாம். ஆனால், காவிகள் அடிமட்டத்தில் இருந்து அமைப்பு ரீதியாக தங்களை பலமாக்குகிரார்கள். அலுவலக மனிதவளத்துறையில் கோலோச்சுகிறார்கள். ஊடகங்களில் குடியேறி இருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களிடையே விஷத்தை விதைக்கிறார்கள்.
எதையும் யாருக்கும் நிரூபிக்காமல் மெதுவாக, நிதானமாக வேலை பார்க்கிறார்கள். நாம் கோட்டைவிடுகிற இடங்களை சரிபார்த்து, அதை சீர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அன்பன் ரஹ்மான்
இந்து முன்னணி பயங்கரவாதிகளால் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாள் தலித் சிறுமி நந்தினி.
அப்போது “இந்து முன்னணி” என்று தங்கள் மத பெயரை அடையாளமாக வைத்துக்கொண்டு இவ்வாறு செய்ததால் தங்கள் மதம் அவமதிக்கப்பட்டதாக இந்துக்கள் யாரும் இந்து முன்னணியினரை எதிர்க்கவில்லை. இப்போது அதை சித்திரமாக வரைந்தவுடன் என்ன மத நம்பிக்கையை தூக்கிட்டு வர்றீங்க?
திரிசூலத்தை வைத்து குஜராத்தில் சங்கி பயங்கரவாத கூட்டம் கற்பினி பெண்ணின் மர்ம உறுப்பில் குத்தியது. அப்போது இந்து மத அடையாளமான திரிசூலம் அவமதிக்கப்பட்டது தொடர்பாக யாரும் சங்கிகளை கேள்வி கேட்கவில்லை.
நடந்த சம்பவத்தை ஓவியமாக வரைந்தவுடன் இதற்கு மட்டும் இந்து மத நம்பிக்கை என்று வருவது என்ன நியாயம்? உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
மகிழ்நன் பா.:
சங்கிகளை கதறவிட்ட ஓவியர் தோழர் முகிலனுக்கு தூரிகை வழங்கிய அரசியல் கோட்பாட்டின் பெயர்
#கம்யூனிசம் #Communism #பொதுவுடமை
வத்சலா நாகேந்திரன்:
தில்லைச் சமரில் தமிழ் வென்று, கோயில் தீட்சிதர்கள் கையிலிருந்து அறநிலையத் துறைக்கு மாறிய போது, சிற்றம்பல மேடையில் தமிழ் பாடிய தீட்டைக் கழிப்பது சிக்கலாக இருக்கவில்லை.மாறாக, உண்டியலை வைத்து அதற்குப் பூட்டும் போட்டது தான் ரொம்ப அன் ஈஈஈஈஈஸியா இருந்தது. அதே போல, இந்து(அ)தர்மம், நம்பிக்கை புண்படும் போன்ற ஈர வெங்காயங்களை விட, ஓவியங்களும்/அது பேசும் அரசியலும், உயர் நடுத்தர, நடுத்தர வர்க்க “முதல்” முறையாக வாக்களிக்கப் போகும் வயதை எட்டும் மாணவர்களை சென்றடைந்தது தான் கும்பி எரிவதற்கான உண்மைக் காரணம்.
கதிரவன் மாயவன்:
பெண் தீட்டு
கோவிலுக்குள்ளே அர்ச்சகர்களால் பல பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டபோது, எந்தப் பார்ப்பானும் கோவிலுக்குள் தீட்டு கழிக்கவில்லை. ஆனால், சபரிமலையில் பெண்கள் நுழைந்த பின், கோவில் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி, தீட்டு கழிக்கும் சடங்கை செய்தனர் பார்ப்பன நம்பூதரிகள். இவர்கள் சொல்லும் வேத உபநிஷட ஆன்மீக லட்சணம் இது தான். பெண்கள் தீட்டல்ல… மூளை அழுகிய அர்ச்சக ஓசி சோறுகளே இந்த சமூகத்தின் தீட்டு..
பாரதிநாதன்:
பாரத மாதா ஓவியத்தில் மீ டூவா? ரத்தம் கொதிக்கிறது/// தமிழிசை.
அது சரிங்க. இந்துக் கோயிலில் பாலியல் வன்முறைக்கு அசிஃபா என்ற தளிர் உள்ளாக்கப்பட்ட சமயத்தில் உங்கள் ரத்தம் உறைநிலைக்கு போய் விட்டதே ஏன் மேடம்?
புலியூர் முருகேசன்:
எழுத்து, ஓவியம், இசை, பாடல், நாடகம்… என எதைக் கண்டெல்லாம் காவி பயங்கரவாதிகள் பயப்படுகின்றனரோ, அதுவே சிறந்த படைப்பு.
#லயோலா ஓவியங்கள் படைப்பின் உச்சம்.
மாதவராஜ்:
இந்த ஓவியங்களில் கிண்டல் இல்லை. கோபமும் வலியும்தான் மேலெழுந்து நிற்கிறது. அதிகாரத்தில் இருக்கும் இந்துத்துவா மிரட்டல்களுக்கு லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்கலாம். ஆனால், காலம் லயோலா ஓவியக் கண்காட்சியினை வாழ்த்துகிறது. திசையெல்லாம் கொண்டு செல்கிறது. #supportLoyala
கி. நடராசன்:
படைப்பு (ஓவியர்கள்) சுதந்திரத்தில் தலையிடும் பாஜக பாசிஸ்டுகளை வன்மையான கண்டங்கள்  #supportLoyala
சுசீலா:
ஓவியங்கள் அனைத்தும் மிக அருமை … நடந்த, நடந்துக் கொண்டிருக்கும் உண்மைகளை அப்பழுக்கற்ற வகையில் அப்படியே சொல்கின்றன. அதனால் தான் காவித்துவம் பதறி போய் மிரட்டலாக வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த மிரட்டலினால் என்னவொரு பயன் என்றால், வழக்கம் போல் இலவச விளம்பரம் தான். பார்க்காதவர்களுக்கும் செய்தி போய் சென்றிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஒரேயொரு வருத்தம் என்னவென்றால், கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டிருக்கிறது என்பது மட்டும் தான். பிற மதத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரி என்பதால் , இதனை தவிர்க்க முடியாது என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை … இந்த ஹிந்துத்வா ஆட்சியில்!
வரைந்த ஒவியங்கள் மனதை புண்படுத்துகிறது என்றால், நடந்த சம்பவங்கள் அனைத்தும் மனதை என்ன பாடுபடுத்தும்???
கௌரிபால் சாத்திரி:
பாரத மாதா .. பாரத மாதா என்று புலம்புறாங்களே . பாரதமாதாவே இங்கிலாந்து காரன் பெத்துப்போட்டது தானே ..
அருள் எழிலன்:
ஸ்வஸ்திக்கை தவிர்த்து விட்டு ஹிட்லரை வரையமுடியுமா?
முகிலன் வரைந்த ஓவியங்கள் லயோலா கல்லூரியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது தொடர்பாக, பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இந்து மதத்தை அவமதித்து விட்டார்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து முகிலனுக்கும், லயோலாக் கல்லூரிக்கும், பேராசிரியர் காளீஸ்வரன் அவர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறார்கள். முகிலனின் ஓவியங்கள் மிகத் தீர்க்கமாக பாஜகவை விமர்சிக்கிறது. இன்று தமிழினம் சந்திக்கும் உயிராதார பிரச்சனைகளை மையமாக வைத்து பாஜக அதில் செய்த துரோகங்களையும், நடத்திக் கொண்டிருக்கும் நாடகங்களையும் அம்பலமாக்குகின்றன.
இந்த ஓவியங்களில் சூலாயுதமும், பாரதமாதாவும் குறியீடுகளாக வரையப்பட்டுள்ளன. தமிழ் ஓவிய மரபில் அதிலும் குறிப்பாக இந்துத்துவத்திற்கு எதிரான ஓவியங்களில் சூலாயுதமும், பாரதமாதாவும் பல நூறு ஓவியங்களாக இதற்கு முன்னர் வரையப்பட்டுள்ளன. அந்த ஓவிய மரபின் தொடர்ச்சிதான் முகிலனுடையது. மிகத்தீர்க்கமான அரசியல் படங்கள் அவை. நடைபெற்ற இடம் லயோலா என்ற கத்தோலிக்க கல்வி நிறுவனம் என்பது பாஜகவுக்கு மட்டும் உறுத்தவில்லை. இங்கு அறிவுலகில் புரளும் பலருக்கும் அது உறுத்தலாகவே இருக்கிறது. ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம் எதிர்கொள்ளும் சங்கடங்கள், அதன் பதட்டம் என அனைத்தும் புரிந்து கொள்ளக் கூடியதுதான். என்ற போதிலும் ஒரு கேள்வி உறுத்துகிறது.

பாஜகவை விமர்சிக்கும் போது இந்துத்துவத்தை தன் அரசியல் முகமாக வரித்துக் கொண்ட ஒரு அரசியல் பீடத்தை அதன் குறியீடுகளை தவிர்த்து விட்டு வரைவது ஹிட்லரை வரையும் போது அவரது தோள்பட்டை ஸ்வஸ்திக்கை தவிர்த்து விட்டு வரைவது போன்றது. தமிழ் நிலத்தில், இந்தியாவில் இந்துத்துவத்திற்கெதிரான போராட்டத்தின் மரபை இடையில் ஒரு ஓவியன் நிறுத்திக் கொள்ளும் கருத்து அல்லது அது தொடர்பான ஊசலாட்டம் எங்கிருந்து வருகிறது. சிறுபான்மையினரை பாதுகாப்போம் என்ற கோஷத்தை இழந்து சிறுபான்மையினர் இறந்தால் மலர் வளையம் வைப்போம் என்கிற அளவுக்கு அது வலுவிழந்து விட்டதா?
முகிலனின் அரசியல் கோடுகளுக்கு வலுவான ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர் பயணத்தில் அவர் தெளிவாக பயணிப்பார்!
ஆனந்தி:
பாரதமாதா தமிழர் சம்பளத்தை மாதம் ஒன்று ஆனவுடன் பிடுங்கிவிடுகிறாள். விவசாய, தொழிற்வளர்ச்சி தர மறுக்கிறாள். மருத்துவ சீட்டுகளை பிடுங்கி வடநாட்டவருக்கு கொடுத்தாள். TNPSC-ல் வடநாட்டவரை பணி அமர்த்துகிறாள். தமிழக அலுவலகங்களை இந்தி மொழியால் நிரப்புகிறாள். பாரதமாதாவால் என்ன பயன் நம் தலைமுறையினருக்கு??
ஓவியம் என்ன சொல்கிறது?
கார்ப்பரேட்டுகளால் பாதிக்கப்பட்ட பாரதமாதா #metoo சொல்கிறாள். பாரதமாதா பற்று இருப்பவர்கள் காப்பாற்றுங்கள், அவளை.
பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா என உலகமே காறி உமிழ்கிறது. துப்பினா தொடச்சிக்குவேன்னு மானம் கெட்டு அலைவது.
இந்தியன்களுக்கு பொழப்பு.
சங்கிகளின் கருத்துரிமை அத்துமீறலை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில்,
“சென்னை இலயோலா கல்லூரி மாணவர் அரவணைப்பு மன்றமும், மாற்று ஊடக மையமும் இணைந்து ஆறாம் ஆண்டு வீதி விருது விழாவை 2019 ஜனவரி 19, 20 தேதிகளில் நடத்தின. இவ்விழாவின் ஓரங்கமாக, சமகால நடப்புகளை துல்லியமாகவும் கலைநேர்த்தியுடனும் விமர்சிக்கும் ஓவியங்களின் கண்காட்சியும் நடந்தது. ஆனால் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சில ஓவியங்கள் ஆட்சேபகரமாக இருப்பதாக பா.ஜ.க உள்ளிட்ட சில சங்பரிவார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் அந்த ஓவியங்களை நீக்கியதுடன், இதற்காக பகிரங்க மன்னிப்பையும் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எனினும் தாங்கள் பூதாகரப்படுத்த நினைத்த ஒரு விசயம் இப்படி உடனடியாக சுமூக முடிவை எட்டுவதை பொறுக்காத சங் பரிவாரத்தினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எதிரான அவதூறுகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மட்டுமல்லாது, மாற்று ஊடக மையத்தின் பொறுப்பாளர் முனைவர் காளீஸ்வரன், அவரது வாழ்விணையர், ஓவியர் முகிலன் ஆகியோரை செல்பேசியில் அழைத்து கடுமையாக மிரட்டியும் அருவருப்பாக ஏசியும் வருகின்றனர்.
கல்விக்கூட வளாகச் செயல்பாடுகளையும் கலை இலக்கிய நடவடிக்கைகளையும் கண்காணித்து அச்சுறுத்துவதன் மூலம் அவற்றின் சுதந்திரத்தன்மையை பறிப்பதுடன், தமக்கெதிரான விமர்சனங்களையும் தடுத்துவிட முடியுமென சங்பரிவாரத்தினர் தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதை தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தங்களுக்கு தனிப்பெரும் அதிகாரம் இருப்பதாக அடாவடி செய்துவரும் சங் பரிவாரத்தினரின் இப்போக்கிற்கு எதிரான கண்டனத்தை எழுப்புமாறு அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. லயோலா கல்லூரி கல்விசார் பணிகளை இடையூறின்றி தொடரவும், முனைவர் காளீஸ்வரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஓவியர் முகிலனுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு:

கருத்துகள் இல்லை: