ஞாயிறு, 20 ஜனவரி, 2019

விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது

புதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது
maalaimalar :புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இன்று 1,353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று அசத்திய ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. புதுக்கோட்டை: மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது.
இந்த போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.  புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை நிறைவு பெற்றது. காளைகள் முட்டியதில் பார்வையாளர்களில் ராமு (25), சதீஷ்குமார் (43) ஆகியோர் உயிரிழந்தனர். மாடுபிடி வீரர்கள் உட்பட 41 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், 21 காளைகளை பிடித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம் முதலிடம் பிடித்தார். திருச்சி காட்டூரை சேர்ந்த கார்த்தி என்பவர் 16 காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்தார். விராலிமலையில் 1,353 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்தது. கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 பேர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்

கருத்துகள் இல்லை: