மாலைமலர் : போராடும் அரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை:
தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மறியலிலும் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் சார்பில் மாநகராட்சி வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். மாநகராட்சியின் பின்பகுதி வழியாக ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு குவிந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜனவரி 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மாணவர் கோகுல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக