See How Many Brahmins got Bharath Ratna & how many scs ST S OBCs |
tamil.oneindia.com : டெல்லி: இன்று நமது நாட்டின் 70
வது குடியரசுத்தின விழா கொண்டாடப்பட்ட நிலையில், 3 பேருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரனாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் சேவகராகவும், பா.ஜ.க எம்.பியா-கவும் இருந்த நானாஜி தேஷ்முக் மற்றும் பா.ஜ.க சார்பில் 2004 ஆம் ஆண்டு எம்.பி தேர்தலில் போட்டியிட்ட பாடலாசிரியர் பூபென் ஹசாரிக்காவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்ட மூவரில் பிரணாப்முகர்ஜி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கு விருது அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதி என்றும், தேசத்துக்கு தன்னலமின்றி உழைத்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரனாபுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது இப்போது சர்ச்சையை ஏறபடுத்தியுள்ளது, இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அறிவிப்புக்கு முன்னதாக பிரணாப்முகர்ஜி மற்றும் பாஜக உறவு நிலை எப்படி இருந்தது என்பதை பார்ப்பதும் இப்போது அவசியமாகிறது. முன்னதாக காங்கிரஸ் தலைவரான படேலுக்கு சிலை எழுப்பி விமர்சனங்களை சந்தித்த பாஜக அப்போதே பிரணாப் முகர்ஜிக்கும் தங்களை பிரனாபுக்கு வேண்டியவர்களாகவே காட்டிக் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் உண்டு.
காட்சி 01
கடந்த 2017 –ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜி பிரதமர் மோடியின் அணுகுமுறை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அவரது ஆற்றலும், கடினமான உழைக்கும் திறமையும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்குப்பிறகு பேசிய பிரதமர் மோடி கட்சியினர் அனைவரும் பணிவுடன் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது இந்த பேச்சு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரச்சினைகளை கையாள்வதிலும் மோடி தனக்கென தனி பாணியை கடைப்பிடித்து வருகிறார். இதற்கு முன்பு பிரதமராக இருந்தவர்களில் பலரும் பாராளுமன்றத்தில் மிகுந்த அனுபவமிக்கவர்களாக இருந்தனர். ஆனால் குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்து நேரடியாக மத்திய அரசுக்கு வந்த மோடி சிக்கலான வெளியுறவு விவகாரம், பொருளாதார விஷயங்கள் ஆகியவற்றை மிக விரைவாக கற்றுக்கொண்டு அதில் நிபுணத்துவம் பெற்றவராகி விட்டார். இதற்காக அவருக்குப்பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று புகழ்ந்து தள்ளியிருந்தார்.
காட்சி 02
2017 –ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசினார். அவருக்கு பிரணாப்முகர்ஜி விருந்து அளித்து உபசரித்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் ஜனாதிபதி மாளிகையில் விருந்து சாப்பிடுவது இதுவே முதல்முறையாகும் இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்சி 03.
மேற்கண்ட நிகழ்வுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல 2018 –ம் ஆண்டு ஜூன் மாதம் 7 ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'சங்க சிக்ஷா வர்கா’ நிகழ்வின் 3-ம் ஆண்டு கூட்டம் ஜூன் 7-ம் தேதி நாக்பூர் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 600 ஊழியர்கள் கலந்து கொண்ட இறுதி நாள் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதியும் பழுத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் கலந்து கொண்டார். காங்கிரசின் மேலிடத்தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை கடுமையாக சாடி வரும் நிலையில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன்சிங் ஆகியோருடன் நெருங்கிப் பழகி பணியாற்றிய பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொண்டது அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட சர்ச்சைகளை கடந்து அதன் பின்னர் நீண்ட அமைதி நிலவியது. இந்நிலையில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்தியா பொதுத் தேர்தலை சந்திக்கவேண்டியுள்ளது. இப்போது 2014 –ல் நிலவிய மோடி அலை என்று எதுவும் தற்போது இல்லை. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இப்போது காங்கிரஸ் தலைமையிலும் காங்கிரஸ் தலைமையை விரும்பாத அதே நேரம் பாஜக எதிர்ப்பு மனநிலையிலும் உள்ளவர்கள் தனித்தனியாக மாநில அளவிலும் ஒருங்கினைந்துள்ளனர்.
உ.பி யில் அகிலேசும், மாயாவதியும் ஒருங்கிணைந்துள்ள நிலையில் மேற்கு வங்காளத்தில் மாயாவதி அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மாநாடே நடத்தி விட்டார். ஆகவே அங்கு இப்போது பாஜக பயணிக்க எவ்வித வாகனங்களும் இல்லா
மின்னம்பலம் : ." மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஏற்க ஒடிஷா மாநில
முதல்வரின் சகோதரி கீதா மேத்தா மறுத்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் மத்திய அரசு ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்குப் பத்ம விருதுகளை வழங்கிக் கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு பாரத ரத்னா விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும், பத்ம பூசண் விருது 14 பேருக்கும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட 94 பேரில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியும் ஒருவர். ராஜ்(1989), ஸ்நேக்ஸ் அன்ட் லேடர்ஸ், கிளிம்ஸ் ஆப் மார்டன் இந்தியா(1997), இடனர்ல் கணேசா பிரம் பெர்த் டூ ரீபெர்த்(2006) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 14க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளராகவும் இருந்து வருகிறார்.
நியூயார்க்கில் வசித்து வரும் கீதா மேத்தாவுக்கு, கல்வி மற்றும் இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகக் கூறி, பத்மஸ்ரீ விருதை அறிவித்தது மத்திய அரசு.
ஆனால் இதை ஏற்க மறுத்த கீதா மேத்தா, பத்மஸ்ரீ விருது வழங்கும் அளவுக்கு என்னைத் தகுதியுடையவராக மத்திய அரசு கருதியதற்கு நான் பெருமை படுகிறேன். சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எனக்கு இந்த விருது வழங்கப்படுவது தவறாக அமைந்துவிடும். எனவே நான் இந்த விருதை நிராகரிக்கிறேன். இது எனக்கும், அரசுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இதற்காக நான் வருந்துகிறேன் என்றார்.
இதற்கிடையே ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார். ஆனால் கீதா மேத்தா விருதை மறுத்ததற்கு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக